இயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்

இயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்

ஆப்பிரிக்க தேசத்தில் ஒரு நீக்ரோ மனிதன் இரட்சிக்கப்பட்டான்.
தேவனை ஆராதிக்க வாஞ்சித்து அருகிலிருந்த வெள்ளையர்களின் ஆலயத்திற்கு சென்றான். நீயெல்லாம் இங்கே வரக்கூடாது என்று வெள்ளையர்கள் அவனை வெளியே துரத்திவிட்டனர். அவன் வாசலுக்கு நேராக நின்று ஆராதனையை கவனித்துக் கொண்டிருந்தான். உடனே வாசலை சாத்திவிட்டனர். உடனே அவன் சன்னல் வழியாக எட்டிப் பார்த்து நின்றான். உடனே சன்னலையும் அடைத்து விட்டனர்.அந்த நீக்ரோ மனிதன் ஆலயத்தை சுற்றி சுற்றி வந்து "இயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்" என்று ஜெபம் பண்ணினான். அவன் இப்படியாக சுற்றி வரும்போது
அவனுக்கு எதிர் திசையில் இன்னொருவரும் ஆலயத்தை சுற்றி வருவதைக் கண்டான்.அவர் இந்த மனிதனைப் பார்த்து ஏனப்பா ஆலயத்தை சுற்றி வருகிறாய்…??? என்று கேட்டார். அதற்கு நீக்ரோ மனிதன் “ஐயா! நான் இரட்சிக்கப்பட்டதனால் தேவனை ஆராதிக்க விரும்பி இந்த ஆலயத்திற்கு வந்தேன். நான் கறுப்பாக இருப்பதால் யாரும் என்னை உள்ளே விடவும் இல்லை கதவுகளையும் அடைத்து விட்டனர். அரை மணி நேரமாக ஆலயத்தின் உள்ளே பிரவேசிப்பதற்கு நான் போராடிக் கெண்டிருக்கிறேன்” என்றான். அந்த மனிதர் சொன்னார்

“நீ அரை மணி நேரமாகத்தான் போராடிக் கொண்டிருக்கிறாய் நான் 18 வருடங்களாக உள்ளே செல்ல போராடிக் கொண்டிருக்கிறேன்….??? என்னையே அவர்கள் உள்ளே விடவில்லை. நீ கறுப்பாக இருந்தாலும் உன் உள்ளம் வெள்ளையாக இருக்கிறது. அவர்கள் தோல்தான் வெள்ளை. ஆனால் அவர்கள் உள்ளம் கறுப்பாக இருக்கிறது” என்றார்….???

ஆச்சரியப்பட்ட நீக்ரோ மனிதன் “ஐயா! நீங்கள் யார்???” என்று கேட்டான். அவர் சொன்னார் “நான் தான் “இயேசு” !!!”
நான் ஆசிய நாடான இஸ்ரேலிலே பிறந்ததால் ஐரோப்பியர்கள்
என்னையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்றார்…???ஜாதி, இனம், நிறம், மொழி

இவைகளை காரணம் காட்டி எந்தவொரு மனிதனையும் வெறுக்க வேண்டாம், புறம் தள்ளவும் வேண்டாம். சிருஷ்டிப்பின் அடிப்படையில் “எல்லா” மனிதர்களும் தேவனுடைய பிள்ளைகளே! சிலுவையின் அடிப்படையில் *"அனைவரும்" சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டியவர்களே!!!*