கர்த்தரை பரீட்ச்சை பாராமல் இருப்போமாக
(மத் 4 ஆம் அதிகாரம்)

இன்றைக்கு கர்த்தர் பெரியவரா? அப்படி அவரை நம்பவேண்டுமெனில் அதை எங்களுக்கு நீருபிக்க வேண்டும், கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் என்றால் அதை இப்படி நீருபிக்கட்டும் என்று விதண்டாவாதம் பேசுவது தான் தேவனை பரீட்சை பார்த்தால் ஆகும். இது ஒரு மிக பெரிய பிசாசின் வஞ்சனை. இதற்க்கு காரணம் என்னவென்று தொடர்ந்து கவனிப்போம்.

A. இது சந்தேகத்தின் வெளிப்பாடு.

விசுவாசத்தில் வராதது எல்லாம் பாவம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் தான் யூதர்கள் அடையாளத்தை எதிர்பார்த்து கர்த்தரை சோதிக்க அவரை பின்தொடர்ந்து வந்தனர். உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் கர்த்தருடைய வார்த்தை மற்றும் அவர் மேல் உள்ள நம்பிக்கையில் சந்தேகம் வந்தால் இந்த பரீட்ச்சையில் நாமும் விழுந்து விடுவோம். விசுவாசத்தில் வளரும் போது அவர் மகிமை படுவார். விசுவாச ஜெபம் எப்போதும் அவரை பிரீட்ச்சை பார்க்காது மாறாக அவரை சார்ந்து நிற்கும். அவர் பட்சத்தில் நிற்கும் நபர் எப்போதும் விசுவாச அறிக்கை ஜெய்பவராக இருப்பார். அவர் சர்வ வல்லமை உள்ளவர் தான், என் வழிகளில் அவர் கிரியை செய்யாவிட்டாலும் அவர் வழிகள் எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அவர் வழிகள் எனக்கு புரியாவிட்டாலும் அவரே என் தேவன், அவரே என் கர்த்தர், அவரே சர்வ ஞானி என்று யாரெல்லாம் விசுவாசிக்கிரார்களோ அவர்களே தேவ மகிமையை காண்பார்கள்.

B. இது தேவ வல்லமையை குறைத்து மதிப்பிடும் ஒரு செயல்.

கர்த்தரை பிறரோடு ஒப்பிட்டு, மனித limited சிந்தைக்கு ஒப்பிட்டு நமது சிந்தனைகளுக்கு ஏற்றபடி அவர் கிரியை செய்யவில்லை என்று அவரது சர்வ ஞானத்தை குறைத்து மதிப்பிட்டு மனித அறிவின் அடிப்படையில் அவரை கட்டுபடுத்த நினைக்கும் எண்ணம் தான் இந்த பரீட்சை பார்க்கும் அனுபவம். சூழ்நிலை விகற்பமாக இருந்தாலும், தேவ செயல்கள் புரியாவிட்டாலும் அவரில் அன்பு கூர்ந்து அவரை தேடுபவர்கள் நிச்சயம் அவரை அறிந்து கொள்வார்கள். நமது அறிவை விட அன்பே பிரதானம். அறிவு அழிந்து போகும். அன்பு என்றும் நிலைத்து நிற்கும். சில தெய்வீக காரியங்கள் நமது அறிவுக்கு புலப்படாமல் இருக்கலாம் ஆனால் அன்பில் அதை நெருக்கமாக உணர்ந்து கொள்ளலாம். இந்த இடத்தில் தான் ஞானத்தை அறிவை உணர்ந்து கொள்ளும் கர்த்தரின் அன்பு தேவை.

C. இது மாமிச அல்லது சுய விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு செயல்.

மாமிச வழிகளில் நடந்து கொண்டு கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், தவறு என்றும் தெரிந்தும் இது தேவ செயல் என்றும், கர்த்தருக்கு தடுக்க வேண்டுமெனில் அவர் தடுக்கட்டும் என்றும், தாவீது பாவம் செய்து மன்னிப்பு பெற வில்லையா என்றும் கேள்வி கேட்டு, சுய வழிகளில் நடந்து தங்கள் வழிகளை நியாய படுத்தி, உப்பரிகையில் இருந்து விழுந்தால் கேடு என்றும் தெரிந்தும், சினிமா பாவம் என்று தெரிந்தும், கர்த்தருக்கு நான் வேண்டுமெனில், அவர் என்னை பாவம் செய்யாமல் தடுக்கட்டும் என்று நமது சுய விருப்பத்தை நிறைவேற்ற கர்த்தரையும் அவரது வல்லமையையும் பயன்படுத்தினால் அதுவே கர்த்தரை பரீட்சை பார்த்தல். இது பாவம் என்பதில் சத்தியம் உறுதியாக இருக்கிறது. கர்த்தர் நம்மை பாதுகாப்பார், கர்த்தர் நம்மை சுகமாக்குவார் என்பதில் எந்த மாற்று கருத்து இல்லை ஆனால் அதற்கு நாம் அவரது கிருபைக்கு விட்டு கொடுக்க வேண்டும். அவர் சித்தம் அறிந்தும் அதை செய்யாத ஊழியன் அநேக அடிகளுக்கு பாத்திரவான் என்று வேதம் சொல்கிறது. நம்மை தாழ்த்தி தேவ கிருபையை சார்ந்து நமக்கு வெளிப்பட்ட ஞானத்தில் அல்லது அனுபவத்தில் நாம் பாடம் கற்று கொண்டு அவர் பாதையில் நடக்க வேண்டும். நாம் நாமாக இருக்க கற்று கொள்ள வேண்டும். எதையும் தேவனிடம் நமது விருப்பம், நமது வழிகள், நமது திட்டம், நமது ஆசைகள் அடிப்படையில் கொடுத்து அவரை ஜெபத்தில் நிர்பந்தம் செய்தலே இந்த பரீட்சை பார்த்தல் ஆகும். நமது எந்த சொந்த விருப்பு வெறுப்பு இன்று அப்பட்டமான நிலையில் கர்த்தாவே உமது விருப்பம், உமது சித்தம், உமது எண்ணம், உமது ஆசை என்னவோ அதற்கு என்னை ஒப்பு கொடுக்கிறேன் என்று யார் யார் எல்லாம் எதேச்சையாக நடந்து ஒப்பு கொடுக்கிறார்களோ அங்கு தான் தேவ திட்டம் நிச்சயம் நிறைவேறும். பாவம் என்று தெரிந்தும் அல்லது விளைவு என்ன வரும் என்று தெரிந்தும் அதை நமது சுய விருப்பத்திற்கு வேண்டி நிறைவேற்ற திட்டம் போட்டு கர்த்தர் பார்த்து கொள்வார் என்று அதை நிறைவேற்ற கர்த்தரிடம் நிர்பந்தம் செய்தால் அதன் முடிவு இன்னும் பயங்கரமாக இருக்கும். ஏனெனில் துணிகர பாவம் தண்டனையை பெற்று தரும் ஆனால் தழைமையினால் வரும் தேவ கிருபையோ நமக்கு பெரிய இரச்சிப்பை பெற்று தரும்.

D. இது பரியாச விதண்டாவாதம் பேசுவது போன்ற ஒரு செயல் ஆகும்.

வீம்பு பேசுவது, விதண்டாவாதம் பேசுவது இன்று பெருகி விட்டது. இயேசு கிறிஸ்து தெய்வம் என்று சொன்னால் இது நடக்கட்டும், Bible இப்படி சொன்னால் அது நடக்கட்டும் என்று வீம்பிற்காக இன்று அனேகர் கிறிஸ்துவின் வல்லமையை, அவரது வார்த்தையை கொச்சை படுத்தி பேசுவதை பார்க்க முடியும். அப்படி பட்டவர்களுக்கு நாம் எதுவும் செய்ய முடியாது ஏனெனில் அப்படி எதுவும் செய்தாலும் அதற்கு வேறு காரணம் தேடுவார்கள். தேவ ரகசியம் தேவ அறிவு இந்த அற்பமான மனிதனுக்கு சில வேளை புரிய வில்லைஎனில் அதை அற்பமாக பேசுதல் கூடாது. அதை குறித்த விளக்கம் கேட்கும் மனப்பக்குவம் தேவை. அறிவை உணர்த்தும் தேவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். கர்த்தரை உண்மையான நிலையில் யார் தேடினாலும் அவர்களுக்கு அவர் தென்படுவார்.

கர்த்தரை விசுவாசித்து, அவரில் அன்பு கூர்ந்து, அவர் கிருபையை சார்ந்து அவரை உண்மையாக தேடும் அனைவருக்கும் அவர் சமீபமாக இருக்கிறார். அப்படி பட்டவர்களுக்கு அவர் பரீட்ச்சை பார்க்கக்கூடியவராக அல்ல நம்பிக்கையின் நங்கூரமாக இருக்கிறார். நம்மை நாமே வஞ்சிக்க விட்டு கொடுக்காமல் எச்சரிக்கையாய் இருக்க கர்த்தர் கிருபை தருவாராக!
இன்னும் சத்தியங்களை அறியவும் கர்த்தரின் அறிவில் வளரவும் இணையுங்கள்

செலின்