
வெளிச்சம்
சங்கீதம் 18:28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். இந்த வெளிச்சத்தின் பிள்ளை களாய் நாம் நடக்கும் போது அந்த வெளிச்சம் நமக்கு என்ன செய்யும்
1. மகிழ்ச்சி கொண்டு வருகிற வெளிச்சம்
எஸ்தர் 8:16. இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
(இந்த மகிழ்ச்சியின் வெளிச்சத்திற்க்காக ஜெபத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.)
2. இருளை கடந்து போக பண்ணுகிற வெளிச்சம்
யோபு 29:3. அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது. அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
(அதற்கு யோபுவை போல குறை சொல்லாமல் , முறுமுறுக்காமல் பொறுமையாய் இருக்க வேண்டும்)
3. விடுதலையாக்கும் வெளிச்சம்
அப்போஸ்தலர் 12:7. அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. (இதற்க்கு பேதுருவைப்போல கவலைப்படாமல் இருக்க வேண்டும்)
Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)