ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு நிலையில் இயங்குகின்றது. அந்த இயக்கத்தின் ஆளுமை தான் அவரது மேம்பாட்டிலும் குறைவிலும் வெளிப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனின் சரீர தோற்றம், மனதின் சிந்தை அல்லது மனச் சாயல், ஆவிக்குரிய அல்லது energetical image or spiritual image போன்ற மூன்று துருவங்களின் கலவை அல்லது complex தான் இந்த ஆளத்துவம். இந்த மூன்றின் அடிப்படையில் தான் ஒருவர் என்ன உணருகின்றார், என்ன செய்கின்றார், என்ன சிந்திகின்றார் மற்றும் நடக்கின்றார் என்பதை தீர்மானிக்க முடியும். மூன்று நிலைகளும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றால் தான் சரியான ஆளுமை வெளிப்படும். நாம் எப்படி நாமாக இருக்கிறோம் என்பதை அறிவது தான் மன ஆளுமை.

மன ஆளுமையின் அல்லது ஆளத்துவத்துவ தாக்கத்தின் காரணிகள்

A. Hereditary பாரம்பரிய சுபாவம்

நாம் ஓவோருவரும் ஒரு குறிப்பிட்ட DNA யின் வடிவமைப்பாகும். குறிப்பாக ஆதாமிய வடிவமைப்பும் அதை சார்ந்து நமக்கு என்று ஒரு clans உம் இருக்கின்றது. அது சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும். அதன் தாக்கம் பெரிதாக இருக்கும். லேவியின் கோப சுபாவம் மோசேயின் வாழ்விலும், யூதாவின் இச்சையின் சுபாவம் தாவீதில் வெளிப்பட்டதும், சகரியாவின் சந்தேகம் யோவானில் வெளிப்பட்டதும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனெனில் அது அவரவர் ஜென்ம சுபாவத்தில் இருந்து வெளிப்பட்ட காரியம். எனவே நமது ஜென்ம சுபாவம் கண்டுப் பிடிக்கப் பட வேண்டும். எந்த பாவத்தில் அடிக்கடி விழுகின்றோமோ, எதில் அடிக்கடி சமரசம் செய்கின்றோமோ, எது நமக்கு எளிதாக வருகின்றதோ அதுவே நமது ஜென்ம சுபாவம். அது நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்கலாம்.

B. Environment சூழல்

நாம் வாழும் குடும்ப சூழல், வேலை சூழல் மற்றும் நாம் வாழும் atmosphere நம்மை அறியாமல் நமக்குள் ஒரு தாக்கத்தை கொண்டு வருகின்றது. இருக்க வேண்டுய இடம், இருக்க கூடாத இடம் என்று சமுதாயத்தில் வரமுறை இருந்தாலும் நமது மனமும் உள்ளமும் எங்கே ஒட்டுகின்றதோ அது தான் நமது atmosphere or environment. காலேப்பின் சந்ததி இராட்சதர்களோடு போராட போராட பிற்காலத்தில் அவன் சந்ததி துராகிதர்களாக மாறினதில் ஆச்சரியம் இல்லை என்பது அபிகாயிலின் புருசன் நாபாலின் சம்பவத்தில் பார்க்கலாம். நாம் அதிகமாக ஒட்டுகின்ற இடம் ரொம்ப முக்கியம்.

C. Culture and values கலாச்சார பழக்க வழக்க மதிப்பீடுகள்

நம்மை அறியாமல் நாம் வாழ்கின்ற சமுதாயத்தின் காலச்சாரம் நம்மோடு ஒட்டுக் கொண்டு இருக்கும். சில சமுதாய பண்புகள், சில பழக்கம் சுடுகாடு மட்டும் இருக்கும் என்பர். அவைகள் நாம் அனுதின பார்க்கும் செயல்கள், நடவடிக்கைகள் மூலம் அவைகள் நம் வாழ்வில் புகுத்த படுகின்றது. வேதத்திலும் சில கலாச்சார செயல்கள் தேவனால் தெரிந்துக் கொள்ளப் பட்டவர்களால் கடைபிடிக்க பட்டது. உதாரணமாக ஆபிரகாம் தனது சொந்த காலசசாரம் மற்றும் இனத்தில் பெண் எடுத்ததும், அதே ரெபேக்காள் யாக்கோபை அப்படியே அனுப்பி விட்டதையும் பார்க்க முடியும். வேதத்தில் உள்ள அறம் மற்றும் மதிப்பீடுகள் மீறாமல் நமது காலாச்சாரத்தில் வாழ்வது குற்றம் அல்ல நாம் வாழ்வதற்க்கு ஒரு கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் அவசியமானது தான். ஆனால் அவைகள் வசனத்தின் முரன்பாடாக இருத்தல் கூடாது. உதாரணமாக விக்கிரகங்களுக்கு அடுத்த, வேசித்தனத்திர்க்கு, சாப்பாட்டிற்கு அடுத்த விஷயங்களில் வானாந்திரத்தில் ஜனங்கள் இச்சைக்குள்ளானார்கள் என்று எழுதப் பட்டு இருக்கிறது. அந்நிய பண்பாடுகள், நாகரீகங்கள், பழக்கங்கள் வேதத்தின் படி சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும். சாதி மறுப்பு காலச்சாரம் என்று ஒன்று இன்று இருக்கின்றது அதன் நோக்கம் சரியாக இருக்கின்றதா என்று மதிப்பீடு செய்ய வேண்டும். நமது value எதின் மேல் அஸ்திபாரம் இடப்பட்டு இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். Majority போகின்ற வழியில் நாம் பிறரை திருப்தி படுத்த வேண்டும் என்று தீர்மானம் எடுக்க வேண்டுய அவசியமில்லை.

D. Companionship/ friendship நட்பு வட்டாரம்

நாம் யாரோடு அதிகம் நேரத்தை செலவு செய்கின்றோமோ முடிவில் அவர்களை போலவே மாறி விடுவோம். இயேசுவோடு நடந்த சீடர்களின் வாழ்வும் அப்படியே ஒன்றி விட்டது. இயேசுவும் அவர்களை போலவே மாறி விட்டார். நண்பனை சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்கின்ற பழமொழி நமக்கு தெரிந்ததே. நமது ஆளத்துவத்தை தாக்கம் செய்வதில் இதுவும் ஒரு காரணியாக இருக்கிறது.

நமது ஆளத்துவம் ஆரோக்கியமாக என்ன செய்ய வேண்டும்?

A. மனம் புதிதாக வேண்டும்.

மனதின் சாயல் மாற வேண்டும்

மனதின் ஜென்ம சுபாவம் மாற வேண்டும். கிறிஸ்துவின் சாயல் வர வேண்டும். ஆதாமிய மனம் எதேனின் மனமாகிய கிறிஸ்துவின் மனதுக்கு நேராக வர வேண்டும். ஓவ்வொரு நாளும் அவரது மேல் உள்ள விசுவாசம், அவரின் இரத்தம், அவரின் வசனம், அவரின் பரிசுத்த ஆவியின் சுத்திகரிப்பு கொண்டு மனம் மறுரூபமாக வேண்டும்.

அடிக்கடி நம்மை விட்டு விலகாத பாவத்தை அறிக்கை செய்து விட்டு விட அனுதினமும் போராட வேண்டும். கிறிஸ்துவின் ஆளுகைக்கு விட்டுக் கொடுத்து பாவம் சரீரத்தில் ஆளாமல் கிறிஸ்து ஆளுகைக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். மாம்ச இச்சைகள் சிலுவையில் அறையப்பட்டு அனுதினமும் சாக வேண்டும்.

B. நமது வாழ்வின் சூழல் ஆவிக்குரிய வட்டாரமாக மாற வேண்டும்

தேவ சமூகத்தை விட்டு விலகி, தன் புருஷனை விட்டு விலகி, கர்த்தர் விலக்கின மரத்தின் அண்டை போனது தான் பாவம். கர்த்தர் விலக்கின இடம் நமக்கு வேண்டாம். நமது atmosphere ஆவிக்குரியதாக மாறட்டும். தேவ சமூகமாகிய ஜெபம், ஆராதனை, வசன தியானம் என்கின்ற வட்டாரத்தில் அமையட்டும்.

C. பரிசுத்தம், நீதி, இரக்கம், கிருபை, அன்பு போன்ற சுபாவங்கள் நமது value அல்லது மதிப்பீடுகளாக மாறட்டும்.

வசனம் நமது அளவுக் கோலாக அமையட்டும். கொள்கை தத்துவங்கள் தாண்டி அன்பு நமது பண்பாடாக அமையட்டும். பரிசுத்தம் நமது மூச்சாக மாற வேண்டும். கிறிஸ்து நமது எண்ணமாக இருக்கட்டும் ஏனெனில் கிறிஸ்துவில் எல்லாம் இருக்கின்றது. வாழ்வில் தோல்விகள், அவமானங்கள், பாடுகள் போன்றவற்றை எத்தனை அதிகமாக சகிக்கின்ரோமோ அத்தனை தூரம் நல்ல சுபாபங்கள் பெருகும்.

D. நல்ல பரிசுத்தவான்களின் ஐக்கியம் கொள்ள வேண்டும்

பிரபலத்தை தேடாமல், கௌரவத்தை பார்க்காமல், அந்தஸ்து பார்க்காமல் நம்மை வசனத்தின் படி சரி செய்ய குட்டும், கடிந்து கொள்ளும் திராணிக்கொண்ட, நம்மிடம் எதுவும் எதிர்பார்க்காத, இரகசியம் காக்கும் நல்ல ஆவிக்குரிய நபர்களை தெரிந்துக் கொள்ளுங்கள். சும்மா எப்போதும் நம்மை பாரட்டிக் கொண்டு இருக்கும், அல்லது வசைபாடி கொண்டு இருக்கும் நபர்களை விட்டு விட்டு உள்ளப்படி நடந்துக் கொள்ளும் சாட்சி உள்ள நல்ல நண்பர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் தான் நம்மை கிறிஸ்துவோடும், வசனத்தோடும், பரிசுத்த ஆவியோடும், பரலோகத்தோடும் ஐக்கியப் படுத்த முடியும்.

கர்த்தர் தாமே நமது ஆளத்துவத்தை கிறிஸ்துவில் பெருக் கிருபை தருவாராக!

செலின்