
கிறிஸ்துவின் பாடுகளை குறித்து பேதுருவின் சாட்சி
அப்.பேதுரு தனது முதலாவது நிருபத்தில் “கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை சாட்சி என்று கூறுகிறார் (1 பேதுரு 5:1). அவரின் நிருபத்தை வாசிக்கும்போது, கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? எப்படி பாடுபட்டார்? எதிலே பாடுபட்டார்? எதற்காக பாடுபட்டார்? அவர் பாடுபட்டதின் நோக்கமும், விளைவும் என்ன என்பதனை சிந்தித்து, தேவன் நம்மேல் வைத்த அன்பை நினைவுகூர்ந்து அவரை ஆராதிக்காமல் இருக்க முடியாது.
1. நமக்காக பாடுபட்டார். 2:21
2. வையாமலும், பயமுறுத்தாமலும் பாடுபட்டார். 2:21
3. நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி பாடுபட்டார். 3:18
4. அநீதியுள்ளவர்களுக்கு பதிலாக பாடுபட்டார். 3:18
5. நம்முடைய பாவங்களினிமித்தம் பாடுபட்டார். 3:18
6.நமக்காக மாம்சத்திலே பாடுபட்டார். 4:1
7.நம்மை பங்காளிகளாக்கும்படியாக பாடுபட்டார். 4:13