பிரசங்க குறிப்புகள் போதிக்கிறவர்

பிரசங்க குறிப்புகள் போதிக்கிறவர்

பிரசங்க குறிப்புகள்: போதிக்கிறவர்

சங்கீதம் 71:17
தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

1. போதித்து நடத்துகிறார்

ஏசாயா 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
( சங் 32:8)

2. போதித்து நினைப்பூட்டுவார்

யோவான் 14:26
என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

3. போதித்து உணர்த்துகிறார் ஏசாயா 28:26

அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.

Message by
Pr.J.A.Devakar . DD