மனதின் தவறான பயணத்தில் இருந்து சரியான பாதைக்கு திரும்புதல். மனதின் குழப்பமான வழியில் இருந்து தெளிவான பாதைக்கு திரும்புதல். கேடான மற்றும் வீணான சிந்தையில் இருந்து செய்வையான சிந்தைக்கு திரும்புதல். அர்த்தமற்ற காரியங்களில் இருந்து நோக்கமல்ல வாழ்விற்கு திரும்புதல். நிரந்தரமற்ற வாழ்வில் இருந்து நிரந்தரம் நோக்கி திரும்புதல் என்று அர்த்தம் கொள்ளலாம். இந்த மனம் திரும்புதல் தான் வேதத்தின் பிரதானம். தனது ஜனம் தவறான பாதையில் செல்லும் போதெல்லாம் தமது தீர்க்கற்களை அனுப்பி மனம் திரும்ப அறைகூவல் விடுத்தார். தமது சொந்த குமாரனை அனுப்பி முதல் பிரசங்கமாக மனம் திரும்புங்கள் என்று தமது ஜனங்களிடம் கோரிக்கை வைத்தார்

எது மனம் திரும்புதல் அல்ல?

👉🏿 சிலாக்கியங்களுக்காக மதம் மாறுவது மனம் திரும்புவது அல்ல.

👉🏿 நன்மை பெற சபையில் உறுப்பினர் ஆவது மனம் திரும்புதல் அல்ல.

👉🏿 என் வீட்டில் எல்லாரும் கிறிஸ்தவர்கள் நானும் அதே பாதை என்று சபை ஆச்சாரங்களை ஆசாரிப்பது மனம் திரும்புதல் அல்ல.👉🏿 குழந்தை முதல் சடங்குகளுக்கு ஒப்புக் கொடுப்பதும் மனம் திரும்புதல் அல்ல.அப்படியென்றால் இந்த மனம் திரும்புதலில் நான்கு காரியங்கள் உள்ளடக்கி இருக்க வேண்டும்

A. பாவ உணர்வு (Conviction)

எனக்குள் தவறு இருக்கின்றது. குழப்பம் இருக்கின்றது. கேடு இருக்கின்றது. தவறான வழி இருக்கின்றது என்கின்ற உணர்வு தான் மனம் திரும்புதலின் அரம்ப நிலை.

B. பாவி என்று ஒத்துகொள்ளுதல் (Consenting/ accepting sinfulness)பாவ உணர்வு மட்டும் போதாது. எல்லாரிடமும் தவறு இருக்கின்றது. இந்த தவறுக்கு அவர் தான் காரணம் என்று பழி போடாமல், பிறரை குற்றம் சாட்டி சாக்குப் போக்கு சொல்லாமல் நானே பாவம் செய்தேன் என்று சம்மதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும்..

C. பாவ அறிக்கை (Confession of sins)மனதில் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. தேவ சமூகத்தில் பிறர் உதவி இன்றி பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும். உணர்த்தப் பட்ட ஒத்குக் கொண்ட பாவங்கள் அறிக்கை செய்யப் பட வேண்டும்.

D. பாவ விடுப்பு அர்ப்பணிப்பு (Comittment to relive from sins)குறைவில் இருந்து விடுபட அர்ப்பணிக்க வேண்டும். பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற வேண்டும். அதற்கு என்று அர்ப்பணிக்க வேண்டும் எப்படி?1. இயேசுவும் இரட்ச்சகர் என்றும் அவர் தான் சிலுவையில் என் பாவ பரிகாரத்திர்க்காக பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்தார் என்று இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும்2. இருதயத்தில் விசுவாசித்து இயேசுவே ஆண்டவர் என்று நாவினால் அறிக்கை செய்ய வேண்டும். இயேசுவே பரிசுத்தர் என்று நாவினால் அறிக்கை செய்ய வேண்டும். என் பாவத்திற்கு அவரே பரிகாரி என்று நாவினால் அறிக்கை செய்ய வேண்டும். 3. இயேசு என் பாவத்தை மன்னித்து உம் இரத்தத்தால் கழுவும் என் மனதை சுத்தமாக்கும் என்று பாவ மன்னிப்பு விண்ணப்பம் செய்து பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற வேண்டும்

4. பாவ மன்னிப்பின் நிச்சயத்தின் சந்தோசம் மற்றும் அன்பு இருதயத்தை உடனே ஆளுகை செய்யும். அப்படியே விட்டு விடக் கூடாது. இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படி்ய வேண்டும். அதாவது சபை மக்கள் முன்னிலையில் நம்மை கிறிஸ்துவின் மரணத்திர்க்கு ஒப்பனையாக, சிலுவையில் அவரோடு அறையப் படுகிறேன், என்று அவரோடு அடையாளப்படுத்த தண்ணீரில் மூழ்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்தானம் பெற வேண்டும்.மனம்திரும்புதலின் ஆசீர்வாதங்கள்!

👉🏿 மன மாற்றம் அதாவது புதிய சிருஸ்டி. மனம் புதிதாக மாறும்.

👉🏿 தேவனோடு ஒப்புரவாக மாறுவதின் மூலம் அவரின் பிள்ளைகள் என்கின்ற அந்தஸ்த்து. 👉🏿 தொடர்ந்து மனம் மறுரூபமாக ஆவிக்குரிய சபை ஐக்கியம்.

👉🏿 வாக்குத்தத்தங்களாகிய இரட்ச்சிப்பு, பரிசுத்த ஆவி, வரங்கள், அழைப்பு, நித்திய ஜீவன் மற்றும் அவரோடு நித்திய காலம் வாழும் சிலாக்கியம் போன்ற ஆசீர்வாதங்களுக்கு பங்காளிகளாக மாறுதல். கர்த்தர் தாமே இவ்விதமாக மனம் திரும்புதலின் அனுபவத்தை தந்து சிறுபிள்ளைகளை போல மாற்றி மனதை இந்த உலகில் இருந்து பிரித்தெடுத்து அவரோடு ஐக்கியமாகி வாழும் வாழ்வின் கிருபையை தருவாராக

செலின்