தமிழ் கிறிஸ்தவ பிரசங்க களஞ்சியம் – கைவிடாதேயும்

தமிழ் கிறிஸ்தவ பிரசங்க களஞ்சியம் – கைவிடாதேயும்

கைவிடாதேயும்

ஆதியா 28:15
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

யோசுவா 1:5
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

1. எளிமையானவர்களையும் தனிமையாய் இருக்கிறவர்களையும் அவர் கைவிட மாட்டார்

ஏசாயா 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். (உ.ம்) 38 வருடம் வியாதியாய் இருந்த மனுஷன்

2.எதிர்பார்த்தும் , தேடியும் கிடைக்காத நேரங்களில் உன்னை அவர் கைவிடாமாட்டார்

ஏசாயா 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
(உ.ம்) 38 வருடம் வியாதியாய் இருந்த மனுஷன்

3. பாதை தெரியாமல் இருப்பவர்களை கர்த்தர் கைவிடமாட்டார்

ஏசாயா 42:16
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன், இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
(உ.ம்) ஆகார்

4. யாரோடு உடன்படிக்கை(வாக்குத்தத்தம்) செய்துள்ளாரோ அவர்களை கர்த்தர் கைவிடமாட்டார்

லேவியராகமம் 26:44
அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்,; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

Message by
Pr.J.A.Devakar . DD