சத்துரு அழித்து போட்ட விளைச்சலை திரும்ப தருவார் – யோவேல் 2:20-26

வடதிசை சேனை வெட்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகளை மகிழ்ச்சி ஆக்கி தேசத்தை பயத்தில் இருந்து விடுதலை ஆக்கி கர்த்தர் தம்மை மகிமைப்படுத்த போகிறார். வடதிசை சேனை செய்த மந்திர, தந்திர அதிகார காரியங்களை விட கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார். ஏனெனில்

தேசத்தில் விளைச்சல் இல்லை, மக்களிடம் பயம், திகில், ஆலயத்தில் போஜன பலி இல்லை, போஜன பலி ஆத்தும அறுவடையை குறிக்கிறது. எனவே கர்த்தர் வைராக்கியம் கொண்டு தமது மகத்துவத்தைப் கொண்டு செயல்பட போகிறார். பச்சை புழு, வெட்டுக்கிளி, பச்சைக் கிளி மற்றும் மோசுகட்டை பூச்சி அழித்தவைகளை திரும்ப தருவார். அவைகளை கர்த்தர் செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்!

A. பரிசுத்த உபவாச நாட்களை நியமிக்க வேண்டும்.
B. எக்காளம் ஊதி ஜனத்தை எச்சரிக்க வேண்டும்.
C. ஆசாரியர்கள் அலற வேண்டும். புலம்ப வேண்டும். ஏனெனில் ஆத்துமா அறுவடையாகிய போஜன் பலி ஆலயத்தில் இப்போது இல்லை!
D. கர்த்தருடைய ஜனத்தை கூட்டி பரிசுத்த படுத்த வேண்டும்.

ஏனெனில் நான்கு காரியங்கள் தான் நம்மை நமது விளைச்சலை கெடுத்து விட்டது.

பச்சை புழு: இது ஒரு செடி முளைத்து பச்சை பச்சையாக வளரும் போது அதோடு தோற்றி கொள்ளும் ஒரு புழு. இது நம்மோடு தோற்றி இருக்கும் ஜென்ம சுபாவத்தை குறிக்கிறது. நம்மை அடிக்கடி நமக்குள்ளே நமது நிறத்தில் இருந்து கொண்டு, நமது பச்சையை கெடுக்கும் பாவ சுவாவத்தை அறிக்கை செய்து கிறிஸ்துவின் சுவாவத்தில் கிறிஸ்துவோடு சிலுவையில் அறைய ஒப்புகொடுக்கும் போது பச்சை புழு தின்றதை கர்த்தர் திரும்ப தருவார்.

வெட்டுக்கிளி: இது செடி வளர்ந்து கனி கொடுக்க பூ பூத்து மொட்டு விடும் தருவாயில் வெளியில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் அறுவடையை கெடுக்கிற ஒரு வித பட்சிகள். இது தேசாதிபதிய வல்லமை மற்றும் பிசாசின் துரைத்தன ஆவியை குறிக்கிறது. பிசாசை அவனது அந்தகார தந்திரங்களை ஜெயிக்க திராணி இல்லாதவர்களாக மாறி, பிசாசுக்கு இடம் கொடுத்து இருப்போம் என்றால், அறிக்கை செய்து பிசாசை துரத்தி, பிசாசின் வல்லமையை எதிர்க்க திராணி உண்டாக அவரை விசுவாசிப்போம். ஏனெனில் பிசாசின் கிரியைகளை அழிக்கவே அவர் இந்த உலகில் வந்தார்.

பச்சைக்கிளி: இது தானியம் விளையும் முன்னர் செடியை சுரண்ட வரும் மனித வழியில் வரும் தந்திர மந்திர வல்லமைகள். கிதியோனை போன்று இந்த சக்திகளை ஜெயிக்க இருக்கிற பெலத்ததில் உள்ளான மனிதன் பேலப்பட்டு பயத்தில் இருந்து வெளியே வந்து இயேசுவின் நாமத்தில், மற்றும் பரிசுத்த ஆவியில் நிரைந்து வெற்றி பெற கர்த்தர் அருள் தருவாரக! பரிசுத்த ஆவியின் நிறவை இழந்து போய் இருப்போம் என்றால், நம்மை அறியாமல், நம்மை போன்ற மனிதர்களிடம் இருந்து வரும் மந்திர தந்திர தாக்குதல்களை ஜெயிக்க அந்நிய பாசையோடு ஆவியில் நிறந்த வாழ்வு வாழ்ந்தால் எந்த மந்திரமும் சூனியமும் அழிந்து போகும் நாம் வெற்றியும் அடைய முடியும்.

மொசுகட்டை பூச்சி: இது அறுவடை செய்யும் போது செடியின் தண்டோடு ஒட்டி கொண்டு இருக்கும் அரிக்கும் தன்மை கொண்ட ஒரு பூச்சி. நாம் கிறிஸ்துவில் வளர்ந்து பலன் கொடுத்து கொண்டு இருக்கும் போது, உலகத்தோடு இருக்கு வேண்டிய சூழ்நிலையில், உலகத்தில் இருந்து வரும் மாம்ச இச்சை, உலக ஆசை, இஸ்வரிய மயக்கம், ஆசாபாசம், போன்ற தூசிகளை போன்று நம்மோடு உலகத்தில் இருந்து, நமது பார்வை, கேள்வி, செயல் மூலம் வரும் தூசிகளை போன்றது. இவைகளை ஜெயிக்க தூசிகளை உதறி விட்டு, மனம் புதிதாக மாறி, மகிமை மேல் மகிமை அடைய விட்டு கொடுக்க வேண்டும். சுய நீதி, தவறை ஒத்து கொள்ளாமை, போன்ற அனுபவங்கள் நம்மை அறியாமல் நமது பிரகாசத்தை கெடுத்து ஒரு கேன்சர் போன்று நம்மை அரித்து விடும். எனவே பாவத்தில் இருந்து பரிசுத்த மாகும் கிருபையின் எண்ணத்தை பெற்று கொண்டு கிருபையில் பெலப்பட வேண்டும்.

இவைகளை செய்தால் மறுபடியும் கர்த்தர் நம் மேல் பிரகாசித்து, விளைச்சல் தந்து நம்மை திரும்ப நன்மைகளை தந்து நடத்துவார். அவர் இழந்து போனதை திரும்ப தருவராக!

செலின்