இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்.(செப்பனியா – 3 : 15)

தியானம்

கர்த்தர் நம் நடுவிலே இருக்கவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்

1 , செப் – 3 : 7 கர்த்தருக்கு பயப்பட வேண்டும்

2 , செப் – 3 : 7 கர்த்தரின் கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும்

3 , செப் – 3 : 8 கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும்

4 , செப் – 3 : 9 கர்த்தருடைய நாமத்தை ஒருமனப்பட்டு ஆராதனை செய்ய வேண்டும்

5 , செப் – 3 : 12 கர்த்தருடைய நாமத்தின் மேல் நம்பிக்கையாய் இருக்க வேண்டும்

இந்தக் காரியங்களை நாம் செய்யும் போது கர்த்தர் நிச்சயமாய் நம் நடுவில் இருப்பார் அவர் நம் நடுவில் இருக்கிறார் என்றால் நமக்கு என்ன நடக்கும்

1 , செப் – 3 : 15. நம் ஆக்கினைகளை அகற்றுவார்

2 , செப் – 3 : 15. உன் சத்துருக்களை உன்னிடத்தில் இருந்து விலக்குவார்

3 , செப் — 3 : 16. நீ பயப்படாதே உன் கையை தளர விடாதே என்று சொல்லி ஆறுதல் படுத்துவார்

4 , செப் 3 : 19,20 நீ வெட்கப் பட்ட இடத்தில் உன்னை உயர்த்தி எல்லா ஜனங்களுக்கும் முன்பாகவும் உன்னை
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் வாக்கு கொடுக்கிறார்

ஆகையால் இந்த ஆண்டின் வாக்குத்தத்தம் கர்த்தர் நமக்கு ஆறுதல் செய்ய வேண்டும் என்றால் முதல் மாத வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்து நம் நடுவே இருக்க வேண்டும் அவர் நம் நடுவில் இருந்தால் கீழே கொடுக்கப்பட்ட எல்லாம் ஆசீர்வாதங்களும் நமக்கு வந்து சேரும் ஆமென் அல்லேலுயா இயேசுவுக்கே மகிமை