ஜெபிக்கும் திருச்சபை

திருச்சபை உதயமானதே ஒரு ஜெப அறையில்தான் – அப். 1:14
திருச்சபை வளர்ந்ததும் ஜெபத்தினால் – அப். 9:31
திருச்சபை உயர்ந்ததும் ஜெபத்தினால் – அப்.4:4
திருச்சபை, ஜெபத்தினால் முன்னேறியது – அப். 6:7; 16:5
திருச்சபை, ஜெபத்தினாலேயே உலகைக் கலக்கியது – அப். 17:6
திருச்சபையின் ஜெபத்தினால் இடம் அசைந்தது – அப். 4:31
திருச்சபையின் ஜெபத்தினால் புதிய வாசல்கள் திறக்கப்பட்டன – அப். 12:10; 5:19
திருச்சபை ஜெபத்தின் வல்லமை, சிறைச்சாலையை அசைத்தது – அப்.16:26
திருச்சபை ஜெபத்தினால் பரலோக வாசல் திறந்தது – அப். 7:55, 56
திருச்சபையின் ஜெபம், தேவ தூதனை இறங்கி வரச்செய்தது – அப். 12:5, 7; 10:2, 3.
திருச்சபை, ஜெபித்து தீர்மானம் எடுத்தது – அப். 1:25, 26
திருச்சபை, ஜெபித்து செயல்பட்டது – அப். 13:2
திருச்சபை, ஜெபத்திற்கு முதலிடம் கொடுத்தது – அப்.6:4
திருச்சபை, ஜெபத்தின் வல்லமையை நன்கு அறிந்திருந்தது – அப். 4:29-31
திருச்சபை, ஜெபத்தினால் விளையும் ஆசீர்வாதங்களை அனுபவித்தது – அப்.2:46, 47; 4:31-35
திருச்சபை, ஜெப ஐக்கியத்தைக் காத்துக்கொண்டது – அப். 2:44-46; 4:32
திருச்சபை, ஜெபத்தினால் தரிசனம் பெற்றிருந்தது – அப். 10:2, 3; 16:9
திருச்சபை, ஜெபத்தினால் ஊழியத்தை நிறைவேற்றியது – அப். 6:6-8
திருச்சபை, ஜெபத்தினால் வாக்குத்தத்தம் நிறைவேறக் கண்டது – அப். 2:1-4
திருச்சபை, ஜெப நேரத்தில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்தது – அப். 3:1
திருச்சபை, ஜெபத்தில் தேவ மகிமையை வெளிப்படுத்தியது – அப். 7:55.
திருச்சபை, ஜெபத்தினால் தடைகளைத் தகர்த்தது – அப். 4:18, 31; 5:40, 41
திருச்சபை, ஜெபத்தில் பிசாசின் கிரியைகளை நிர்மூலமாக்கியது – அப். 13:8-11.
திருச்சபை, ஜெபத்தினால் அநேக அற்புதங்களைக் கண்டது – அப். 6:8; 8:6, 7; 2:43; 5:12.
திருச்சபை, ஜெபத்தினால் தேவ நாமத்தை மகிமைப்படுத்தியது – அப்.4:21; 19:17
திருச்சபை, ஜெபத்தினால் சரியானத் திசையில் பயணித்தது – அப்.16:6-8
திருச்சபை, ஜெபத்தினால் தடுமாறாமல் முன்னேறிச் சென்றது – அப். 16:9-10
திருச்சபை, ஜெபத்தினால் நற்சாட்சியைக் காத்துக் கொண்டது – அப். 2:32; 4:13
திருச்சபை, ஜெபத்தினால் கிருபையில் வளர்ந்து பெருகினது – அப். 14:26; 4:33
- முழங்கால் யுத்தம்