good tips for young Pastors and preachers

பிரசங்கியின் ஞானம்

மனுசன் படுகிற பிரயாசத்தின் பலன் என்ன என்கிற கேள்வியோடு சாலமன் செய்த ஆராட்ச்சியை கொண்ட இந்த பிரசங்கி புஸ்தகம் ஒரு நல்ல ஆராட்ச்சி கட்டுரை ஆகும். அவரது கவனமான ஆராட்ச்சியின் முடிவு இந்த உலகில் எல்லாம் மாயை என்ற ஒரு முடிவைக் கொடுக்கிறது. மாயை என்கிற பதம் கிட்டத்தட்ட 37 இடங்களிலும் சூரியனுக்கு கீழே என்கிற பதம் 29 இடங்களிலும் வருகின்றது.

உலகின் இன்பம், உலகின் ஞானம், உலகின் செல்வம், உலகின் கண்டுப்பிடிப்புகள், உலகின் ஆசை விருப்பங்கள், உலகின் பிரயாசம் மற்றும் உலகின் மேன்மை எல்லாம் மாயை என்று தன் ஆராட்ச்சியின் முடிவில் சொல்கிறார்.

ஆனாலும் அர்த்தமுள்ள, மதிப்புள்ள வாழ்வைக் குறித்தும் இதே கட்டுரையில் அவர் எழுத தவற வில்லை. அவைகளாவன

  1. எல்லாவற்றிக்கும் ஒவ்வொரு காலம் உண்டு என்பதை அறிந்துக் கொண்டால் அதுவே அர்த்தமுள்ளது 3:1-12

காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது. காலத்தை அறியும் அறிவு மிகவும் முக்கியம். இயேசு தன் நேரத்தையும் காலத்தையும் நன்றாக அறிந்து தன் பிதாவின் சித்தத்தை செய்து முடித்தார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலம் உண்டு அதை அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் நாம் மௌனமாக இருக்க கூடாதே. இது கடைசிக் காலம்.

  1. சபையின் காரியங்களின் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் 5:1-6

ஆலயத்திர்க்கு போகும் போதும் நடையை காத்துக் கொள்ள வேண்டும். பேச்சி சுருக்கமாக இருக்க வேண்டும். கர்த்தர் சமூகத்தில் செய்த பொருத்தனைகளை நிறைவேற்ற வேண்டும். கர்த்தர் தந்த அபோஸ்தல உபதேசம், ஜெபம், வசனம், கர்த்தருடைய பந்தி மற்றும் பரிசுத்தவான்கள் ஐக்கியத்தின் கண்ணியம் கருதி அதன் ஒழுக்கத்தை காத்துக் கொள்ள வேண்டும்.

  1. ஞானத்தை கண்டடைய வேண்டும். 7:1-29, 9:13-18, 10:1-

புத்தியுள்ள மனுசன், ஞானமுள்ள மனுசன், புத்தியுள்ள கன்னிகைகள் என்கிற அடிப்படையில் ஞானம் அடைய வேண்டும். கிறிஸ்துவில் உள்ள சகல ஞானம், பொக்கிஷம், அறிவு போன்றவற்றை பெற அவரில் நிலைத்து இருக்க வேண்டும். இந்த பரத்தின் ஞானம் குறைவுப் பட்டால் அவரிடம் கேட்க வேண்டும். உலகின் ஞானம் கர்த்தரின் முன்பு பைத்தியம். அதை வெட்கப் படுத்த பைத்தியங்களான நம்மை தெரிந்துக் கொண்டார் என்று எழுதப் பட்டு இருக்கிறது.

  1. ராஜாக்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். 8:2-

அதிகாரங்களில் உள்ளவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டும். பத்திரத்தில் கையெழுத்து போட்டதை தானியேல் அறிந்து இருந்தும் தன் ஜெபத்தை விட்டு விட வில்லை. கிறிஸ்து தம்மை அதிகாரங்கள் கையில் விட்டுக் கொடுத்தார் ஆனால் நீர் யூ ராஜாவா என்று கேட்டதற்கு ஆம் என்றே சொன்னார். தன் ஸ்தானத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சட்டங்கள் மாறும் ஆனால் கர்த்தரின் சட்டம் மாறாதது.

  1. பிரதிபலனுக்கு காத்து இருக்க வேண்டும் 11:1-6

பிரயாசத்தின் பலன் நிச்சயம் உண்டு. ஆகாரத்தை தண்ணீர்கள் மேல் போட்டு விட்டு காத்து இருக்க வேண்டும். பொறுமை மிகவும் முக்கியம். அவசரப்பட கூடாது. ஒவ்வொரு பலனும் ஏற்ற வேளையில் கையில் வரும். கிறிஸ்து சிலுவைில் ஆத்ம வருத்ததின் பலனை கண்டு திருப்தி அடைந்தார் என்று பார்க்கிறோம். அவனவனின் கிரியைகளுக்கு தக்க பலன் நிச்சயம் உண்டு.

  1. வாலிப பிராயத்தில் சிருஸ்டிகரை நினைக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் ஆனால் கர்த்தர் நியாயத்தில் கொண்டு வருவார் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும் 11:7-10

ஒவ்வொரு பருவமும் கடந்து செல்லும் என்பதை அறிந்து ஒவ்வொரு பருவத்திலும் கர்த்தரை நினைக்க வேண்டும். ஒவொருவருடைய செயலும் தராசில் நிறுத்தப் படும் என்பதை அறிந்து செயல்பட்டால் அதுவே அர்த்தம் உள்ள வாழ்வு. இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தம் செய்வதை தான் தன் போஜனமாக கொண்டார். அதுதான் அவரை எல்லா நாமத்திர்க்கும் மேலான நாமத்தை கொடுத்து உயர்த்தியது.

  1. கர்த்தருக்கு பயந்து அவர் கட்டளைகளுக்கு கீழ்படிதல் வேண்டும். 12: 12-14.

இதுதான் ஆராட்ச்சியின் முடிவு. இது தான் காரியத்தின் கடைத் தொகை. கர்த்தர் எல்லா வெளியரங்கமான அந்தரங்கமான காரியங்களையும் நிறுத்திப் பார்ப்பார். சிலுவை பரியந்தம் தம்மை தாழ்த்தி பட்டப் பாடுகளினாலே கீழ்படிதலை கற்றுக் கொண்டார் என்று வசனம் சொல்கிறது.

மேற்குறிப்பிட்ட இந்த 7 அர்த்தமுள்ள காரியங்கள் தான் ஒருவனை மாயைக்கு தப்புவிக்கிறது. கர்த்தர் தமது கிருபையை தருவாராக

செலின்