கர்த்தருடைய வார்த்தை

கர்த்தருடைய வார்த்தை

கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது (சங் 33 : 4)

கர்த்தருடைய வார்த்தை உத்தமும் சத்தியமுமாயிருக்கிறது. அவர்
தம்முடைய வார்த்தைகளைத் கொண்டு தாம் அழைத்த தேவ மனிதர்களோடு பேசுகிறார். இப்பவும் ஐந்து தேவ மனிதர்களோடு பேசியதையுயம் , யார் அந்த தேவ மனிதர்கள் என்பதையும் குறித்து
சிந்திக்கலாம்

  1. ஆபிரகாம் (ஆதி 15 : 1)

இந்தக் காரியங்கள் நடந்த பின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்கு தரிசனத்திலே உண்டாகி, அவர் நீ பயப்படாதே, நான் உனக்கு கேட்கும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

  1. ஈசாக்கு (ஆதி 26 : 24)

அன்று இராத்திரியிலே கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிராகமுடைய தேவன் பயப்படாதே, நான் உன்னோடு கூட இருந்து என் ஊழியக்கார னாகிய ஆபிரகாம் நிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன்.

  1. யாக்கோபு (ஆதி 28 : 15)

நான் உன்னோடு கூட இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னை காத்து இந்த தேசத்திற்கு உன்னை திரும்பி வரப்பண்ணுவேன்: நான் உனக்கு சொன்னதைச் செய்யுமளவும் உன்னை கைவிடுகிறதில்லை என்றார்.

  1. யோசுவா (யோசுவா 1 : 5)

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக
எதிர்த்து நிற்பதில்லை நான் மோசேயோட இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை.

  1. மோசஸ் (யாத் 33 : 14)

அதற்கு அவர் என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்

கர்த்தருடைய வார்த்தை ஆபிராம் , ஈசாக்கு, யாக்கோபு, யோசுவா மற்றும் மோசே இவர்களுக்கு தமது வார்த்தையை தந்து அந்த நல்ல வார்த்தைகளை அவர்களது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் நிறைவேற்றினார். அப்படியே நமக்கும் தேவன் தம்முடைய வார்த்தையை தந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பார். இவர்களது தேவன் நம்முடைய தேவன்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur