சிலுவையின் உபதேசம்

இது கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியம் நமக்கோ தேவ பெலன். இந்த சிலுவையை குறித்தே மேன்மை பாரட்டுவேன் என்று பரிசுத்த பவுல் சொல்கிறார். இந்த சிலுவை தான் எங்கள் செய்தி, அது தான் எங்கள் சுவிசேஷம் அது தான் எங்கள் சுமை என்பதே கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம்.

இந்த சிலுவையில்!

அன்பு வெளிப்பட்டது.- அதினால் இரட்ச்சிப்பு அறிமுகமானது

அவமானங்கள் மற்றும் விபரீதங்கள் சகிக்கபட்டது.- அதினால் சகிப்புத்தன்மை சகோரத்துவம் வெளிப்பட்டது.

நோய்கள் சுமக்கப்பட்டது.- அதினால் தழும்புகளால் சுகம் உண்டானது.

பாடுகள் மற்றும் பெலவீனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.- பாடுபட அழைக்கிறது. சிலுவை சுமக்க வலியுறுத்துகிறது

தனது சாயல் வல்லமை பலவீனமாக வெறுமையாக மாற்றப்பட்டது.- எதிர்மாரையான நெருக்கடிகளை சந்திக்க நல்ல மாதிரியான சிந்தை வெளிப்பட்டது.( வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய சில இடங்களில் பலவீனம் அடைய வேண்டும்)

பகை சிலுவையில் ஆணியடிக்கப்பட்டது.- அதினால் சமரசம் ஒப்புறவாகுதல் ஏற்பட்டது.

பாவங்கள் மற்றும் கடைசி சத்துருவாகிய மரணம் பரிகரிக்கபட்டது. நமக்காக நமது பாவங்கள் மீருதலுக்காக அடுக்கப்பட்டார். நோருக்கப்பட்டார்.-அதினால் பாவ பரிகாரம் வெளிப்பட்டு புதிய மார்க்கம் பிறந்தது.

தான் தவறு செய்யாதிருந்தும், தான் பாவமற்றவராக இருந்தும், தனக்கு வல்லமை இருந்து இருந்தும், தான் பெலம் உள்ளவராக இருந்தும், இந்த பாடுகள், அவமானங்கள், அடிகள், வேதனைகள், வலிகள், நிந்தைகள் அனுபவித்ததினால் வெளிப்பட்ட ஆசீர்வாதங்கள் அதிகம்.

A.புதிய மார்க்கமான அன்பின், ஒப்புரவாக்குதலின் இரட்ச்சிபின் வழி.

B. உன்னதத்தின் ஆசீர்வாதமான பரிசுத்த ஆவி அதன் நன்மைகள்.

C. எல்லா நாமத்திற்கு மேலான நாமத்தை பெற்ற கிறிஸ்துவின் வல்லமை பெற்ற நாமம். அந்த நாமத்தில் அற்புதம், ஜெபம் கேட்கப்படும் etc

D. சபைக்கு தலையாக, சிங்காசனத்தில் வீற்று இருந்து, நமக்காக பரிந்து பேசி உதவி செய்யும் சகல வல்லமை படைத்த கிறிஸ்துவின் அதிகாரம். புஸ்தகம் திறக்க அதிகாரம், ஆராதனை பெற பாத்திரர். நாமும் பாடுபட்டால் அதிகாரம் கனம் கிடைக்கும் என்பதின் நியதி.

E. பகையை வெற்றிகொண்ட மகத்துவம் உள்ள சிந்தனை, வாழ்வில் உயர்ந்த இடத்தை அலங்கரிக்க நமது பெலம் வல்லமை மகிமை துறக்க வேண்டும் என்கிற தாரக மந்திரத்தின் ரகசியம். வாழ்வின் வெற்றியின் ரகசியம் தான் சிலுவை. இதுவே வெற்றி மாதிரியின் சிந்தை.

F. நம்பிக்கையின் அடையாளமான விசுவாசப் பாதையின் மேன்மையே சிலுவை. அவருடைய இரத்தம் சுத்திகரிப்பு தருகிறது. தைரியம் தருகிறது. பரிந்து பேசுகிறது. மீடகிறது. பெலன் தருகிறது. கோபாக்கினையில் இருந்து விடுதலை தருகிறது.

G. கடைசியாக இந்த சுவிசேஷத்தை அறிவிக்க அதிகாரம் தந்து கட்டளை கொடுக்கிறது. இதை அறிவிக்க தான் இத்தனை ஆசீர்வாதங்கள் வாக்கு கொடுக்கப் பட்டு இருக்கிறது. இதனால் உண்டகாகும் சீசத்துவமே உலகத்தை ஜெயிக்கும் வாழ்வின் அஸ்திபாரம்.

எனவே இந்த சிலுவையை என்னும் பாடுகள், அவமானங்கள் சுமந்து அவற்றை ஏற்று கொண்டு முன்னேறுவோம். அதுவே நமது தாரக மந்திரம் ஆகட்டும். அவரோடு பாடுகள் பட்டால் அவரோடு ஆளுகை செய்வோம், அவரின் நாமத்தில் பாடுகள் பட்டால் பரலோகத்தில் மிகுந்த பலன் உண்டு. நன்மை செய்து பாடுபடும் பாடுகளே ஒருவனை உயர்த்தும், தவறு செய்யாமல் படும் பாடுகள் தான் கனம் கொடுக்கும், அதிகாரம் கொடுக்கும், முடிவில் ரட்ச்சிப்பு உண்டுபண்ணும் என்கிற கிறிஸ்துவின் மார்க்க வழியை பின்பற்றுவோம். அதுவே நம்மை குறித்த தேவ சித்தம். அந்த அவரது புதிய மார்க்கத்தில் நடப்போம், சத்தியத்தை உலகறிய செய்வோம்.

செலின்