
எனக்கு மிகவும் ஆச்சிரியமானவைகள் மூன்றுண்டு. என் புத்திக்
கெட்டாதவைகள் நான்குமுண்டு. (நீதி 30 : 18)
தேவனுடைய வார்த்தைகள் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது. இந்தக் குறிப்பில் மேல் சொன்ன வசனத்தை முக்கியப்படுத்தாமல் அதில் உள்ள மூன்று என்ற வார்த்தையை முக்கியப் படுத்திஇந்தக் குறிப்பைப் கவனிக்கலாம். மூன்று தேவனுடைய செயல்களை இதில் சிந்திக்கலாம்.
மூன்றுவிதமான தேடுதல்கள்.
- தேடும் மனிதன் (லூக் 19 : 3)
- தேடும் பிசாசு (1 பேது 5 : 8-10)
- தேடும் ஆண்டவர் (லூக்கா 19 : 10)
மூன்றுவிதமான பார்வைகள்.
- மனிதனின் பார்வை (1 சாமு 17 : 8-10)
- கர்த்தரின் பார்வை (சங் : 139)
- சாத்தானின் பார்வை (யோபு 1 : 10 , 11, 2 : 2)
மூன்றுவிதமான ஞானஸ்நானம்
- மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் (மத் 3 : 11)
- பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் (மத் 3 : 11)
- அக்கினி ஞானஸ்நானம் (மத் 3 : 11)
மூன்று ஆசீர்வாதங்கள்
- நிச்சயமான ஆசீர்வாதம் (எபி 6 : 14)
- நிம்மதியான ஆசீர்வாதம் (நீதி 10 : 22)
- நிரந்தரமான ஆசீர்வாதம் (யோவா 3 : 16)
மூன்று மூன்று காரியங்களாக தேவனுடைய செயல்பாடுகளை
இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். இதில் நாம் அறிந்துகொள்வது மூன்றுவிதமான தேடுதல் , மூன்றுவித பார்வைகள் , மூன்றுவிதமான ஞானஸ்நானம் , மூன்றுவிதமான ஆசீர்வாதங்கள் தேவனுடைய செயலில் எல்லாம் ஆச்சிரியமும் புத்திக்கெட்டாதவைகளாக இருக்கிறது.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.