நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது.

வெள்ளை சிங்காச நியாத்தீர்ப்புக்கு பின் நரகம் உருவாக்கபடும் – வெளி 20:13-15

இவ்விடத்தின் வேறு பெயர்கள்
1) புறம்பான இருள் – மத் 8-12
2) நித்திய அழிவு – 2 தெச 1:9,10
3) நித்திய நிந்தை, நித்திய இகழ்ச்சி – தானி 12-2
4)நித்திய ஆக்கினை – மத் 25-46
5) மரணம், பாதாளம் – வெளி 20:14

இவ்விடம் எப்படிப்பட்ட இடம்
1) இருள் உள்ள இடம் – மத் 8:12
2) அழுகை உள்ள இடம் – மத் 8:12
3) பற்கடிப்பு உள்ள இடம் – மத் 8:12
4) வேதனை உள்ள இடம் – லூக் 16:23-25
5) தண்ணிர் கிடைக்காது – லூக் 16:24
6) தாகந்திராத இடம் – லூக் 16:24
7) நினைவு கூறும் இடம் – லூக் 16:27
8) அவியாத அக்கினி உண்டு – மத் 3:12
9) நித்திய அக்னி உண்டு – மத் 25:41
10) பட்சிக்கும் அக்கினி உண்டு – ஏசா 33:14
11) சாகாத புழு உண்டு – மாற் 9:48
11) நித்திய நிந்தை – தானி 12:2
12) நித்திய இகழ்ச்சி – தானி 12:2

இவ்விடம் யாருக்கு ?

1) தன் சகோதரனை மூடன் என்று சொல்லுகிறவனுக்கு – மத் 5:22

2) நல்ல கனி கொடுக்காதவனுக்கு – மத் 3:10

3) நமது கண் இடறல் உண்டாக்கினால் – மத் 18:9

4) நமது கை, கால்கள் இடறல் உண்டாக்கினால் – மத் 18:8

5) கல்யாண வஸ்திரம் இல்லாவிட்டால் – மத் 22:12,13

6) அக்கிரமம் செய்கிறவர்களுக்கு – மத் 13:41,42

7) உண்மை இல்லாத ஊழியக்காரனுக்கு – மத் 24:50,51

8) கர்த்தர் கொடுத்த தாலந்துகளை பயன் படுத்தாதவர்களுக்கு – மத் 25:30

9) ஜிவ புஸ்தகத்தில் பெயர் எழுதபடாதவனுக்கு – வெளி 20:15

10) தீமை செய்கிறவனுக்கு – யோ 5:29

11) துன்மார்க்கனுக்கு – சங் 9:17

12) தேவனை மறக்கிறவனுக்கு – சங் 9:17

13) பிசாசுக்கும், அதன் தூதர்களுக்கு – மத் 25:41

14) அந்தி கிறிஸ்து, கள்ள தீர்க்கதரிசிகளுக்கு – வெளி 19:20

15) கைவிடப்பட்ட சபைக்கு (1 ம் வருகையில் கைவிடப்பட பரிசுத்தவான்கள்) அந்தி கிறிஸ்துக்கு கீழ்படிந்தால் – வெளி 14:9,10,11

16) பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசுகிறவனுக்கு – மாற் 3:28,29

17) மாய்மாலம் பண்ணி ஜிவிக்கிறவனுக்கு – மத் 23:14

18) பின் மாற்றகாரனுக்கு – எபி 6:4-8 10:29

19) சுவிசேஷத்துக்கு கீழ்படியாதவர்களுக்கு – 2 தெச 1:7-10

20) தேவனை அறியாதவர்களுக்கு – 2 தெச 1:7-10

21) கர்த்தருடைய பிள்ளைகளை ஏற்று கொள்ளாதவர்களுக்கு – மத் 10:14,15

22) பயப்படுகிறவர்கள், அவிசுவாசிகள், அருவருப்பானவர்கள், கொலை பாதகர்கள், விபசாரக்கார், சூனியக்காரர், விக்கிரக ஆராதனைகாரர், பொய்யர்களுக்கு – வெளி 21:8

சாத்தான் தன்னுடன் நரகத்திற்கு செல்ல ஒரு கூட்ட மக்களை இன்று ஆயத்தபடுத்தி வருகிறான்.