எப்போதும் நாம்வெட்கப்பட்டு போவதில்லை

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. சங்கீதம் 119:6

1. அவர் நமக்கு துணையாய் இருக்கும் போது நாம் வெட்கப்பட்டு போவதில்லை

ஏசாயா 50:7
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.

2. நாம் அவரால் நிரபப்படும் போது நாம் வெட்கப்பட்டு போவ தில்லை

யோவேல் 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.

3.தேவனை அறிந்துக்கொள்ளும் போது நாம் வெட்கப்பட்டு போவதில்லை

யோவேல் 2:27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேரொருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள், என் ஜனங்கள ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.


Pr.J.A.Devakar . DD