
எபேசியர் 4: 12 இன் படி உள்ள ஊழிய வரிசையின் இரண்டு நோக்கம்.
A. சுவிசேஷ ஊழியம்
B. கிறிஸ்துவின் சரீரம் பாக்திவிருத்தி அடைய.
நான்கு விதமான ஊழியம்.
அதை மேர் குறிப்பிட்ட இரண்டு நோக்கத்திற்கு பிரிக்க வேண்டும்.
முதல் நோக்கம். சுவிசேஷ ஊழியத்தின் வரிசை.
A. அப்போஸ்தலர்
B. தீர்க்கதரிசிகள்
C. சுவிசேஷகர்கள்.
இரண்டாவது நோக்கம். சபை பக்திவிருத்தி. அதின் வரிசை.
A. அப்போஸ்தலர்
B. தீர்க்கதரிசிகள்
C. சிலரை மெய்ப்பராகவும் போதகராகவும்.( ஒரே ஊழியம்.) II Cor 12:28 சபையில் சொல்லப்பட்ட வரிசையில் மேய்ப்பர் மிஸ்ஸிங் ஆனால் மூன்றாவது போதகர் வருகிறார்.
ஊழிய வரிசையை தொடர்ந்து விபரமாக கவனிப்போம்.
A. அப்போஸ்தலர்.
தகுதிகள்.
- இயேசுவோடு கூட இருந்து இருக்க வேண்டும். அல்லது அவரை தரிசித்து வேத உபதேசங்களை கிறிஸ்துவின் பரலோகராஜிய சத்தியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 1 கோரி 9:2
- இவர்கள் பல இடங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவித்து இருக்கிறார்கள். பவுல் பேதுரு போன்றவர்கள் பல சபைகளை ஸ்தாபித்து மேற்பார்வை செய்து அவைகளை நிருபம் கொண்டும் தங்களுக்கு கீழ் உதவி ஊழியம் செய்யும் ஊழியர்களை கொண்டு சபைகளை ஒழுங்கு செய்து இருக்கிறார்கள். திமொத்தேயு, தீத்து மாற்கு போன்றவர்கள் அப்படி பட்டவர்கள்.
- இவர்களின் கையினால் கர்த்தர் அற்புத அடையாளங்கள் செய்து தமது வார்த்தையை உறுதி படுத்தி இருக்கிறார். முதல் முதலாக பேதுருவின் சுவிசேஷ கூட்டத்தில் 3000 பேர் ரச்சிக்கப் படுகிறார்கள். பேதுரு மற்றும் பவுலை கொண்டு கர்த்தர் மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறார்.
- சபைகளின் பிரச்சனைகளை மூப்பர்கள் உதவியுடன் தீர்வை கண்டு பிடித்து சபைகளை ஒழுங்கு செய்யும் உபதேசங்களை கொடுக்கிறார்கள். Act 15 ஆம் அதிகாரம்
இவர்களை குறித்து பைபிள் என்ன சொல்கிறது.
- இயேசு தான் இந்த பெயரை இவர்களுக்கு இந்த பெயரை கொடுத்தார். மத் 10:2, லூக் 6:13.
- முதலாவது சுவிசேஷ ஊழியம் செய்தவர்கள் இவர்களே Act 2:47. (கிறிஸ்துவால் ஏற்கனவே சுவிசேஷம் அறிவிக்க கற்று கொடுக்க பட்டு, அதிகாரம் கொடுக்க பட்டு அனுப்பப்படும் இருந்தார்கள்).
- இவர்கள் கைகளினால் அற்புத அடையாளங்கள் செய்ய பட்டது. Act 5:12, 2:43
- இவர்கள் தான் முதல் சபையில் leadership இல் முன்னிறுத்த பட்டு புதிய விசுவாசிகள் தங்களுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று இவர்கள் பாதத்தில் வைத்தார்கள்.
- இவர்கள் சபைக்குள் போதகம் உபதேசம் மற்றும் தீர்க்கதரிசனம் பேசி பிரசங்கம் செய்து இருக்கிறார்கள். Act 5:21.
- இவர்கள் துன்ப பட்டார்கள், சிறை பிடிக்க பட்டார்கள் act 5:40 கொலையும் செய்ய பட்டார்கள்.
- இவர்கள் சபையில் பணிவிடை ஊழியர்கள், மற்றும் முப்பர்கள், கண்காணிக்கும் மேய்ப்பர்கள், சபை போதகர்கள், மற்றும் சபை ஊழியர்களை ஏற்படுத்தி சபையில் இப்படி ஏற்படுத்த பட்ட இந்த ஊழியர்களுக்கு சபையை ஒப்பு கொடுத்து வேறு இடங்களுக்கு சபை ஸ்தாபிக்க சென்றார்கள். பவுல் கொருந்து, எபேசு, ரோம், philipu போன்ற இன்னும் அதிகமான சபைகளை ஸ்தாபித்து பின்னர் அவைகளை மேய்ப்பர்கள் வசம் ஒப்படைத்து அவைகளை தானும், Timothy, Titus, Mark மற்றும் லூக்கா போன்றவர்கள் கொண்டும் நீருபங்கள் கொண்டும் மேற்பார்வை செய்தார்கள் மற்றும் philip சுவிசேஷம் அறிவித்து ஊழியம் செய்த சமாரியாவில் போய் அதை ஒரு சபையாக உருவாக்கி பின்னர் ஜெருசலேம் திரும்பி வந்தனர். இவர்கள் மொத்தத்தில் ஒரு சபையில் இயங்க வில்லை ஆனால் பல சபைகளை இயக்கினார்கள்.
- இவர்கள் கைகளை வைத்த போதும் பிரசங்கm செய்த போது அபிசேகம் ஊற்றபட்டது. தீர்க்க தரிசனமும் பேசி இருக்கிறார்கள்.
- மற்ற சபைகளில் பிரச்சனை வந்த போது அவர்கள் எருசலேமில் இருந்த aposthalar மற்றும் மூப்பர்களிடம் போகிறார்கள். அப்படி என்றால் அன்றைய சபைகளின் head quarters Jerusalem. அங்கு aposthalarkal தலைவர்களாகவும் எருசலேம் சபைக்கும் வேற மூப்பர்களை ஏற்படுத்தியும் இருந்தார்கள்.
- அதே வேளையில் சபையில் மரணத்திற்கு குறிக்கப் பட்டவர்கள் போல கடைசியானவர்கள் போலவும் காணப்பட்டார்கள் என்று வசனம் சொல்கிறது. 1 கோரி 4.9
இவர்கள் ஒருபோதும் மனுஷ மகிமையை தேட வில்லை. பவுல் எல்லாரிலும் தன்னை சிரியவனாக காட்டுகிறார்.
B. தீர்க்க தரிசிகள்.
இவர்கள் நோக்கம்.
1.சுவிசேஷ ஊழியம் மற்றும் சபை ஊழியத்திற்கு வழியை ஏற்படுத்தி கொடுப்பவர்கள். இயேசு கிறிஸ்துவுக்கு யோவான் ஸ்நாபகன் வழி ஏற்படுத்தி கொடுத்தது போல.
- புத்தி, மற்றும் வெளிப்பாடு சொல்லி சபையில் பக்தி விருத்தி அடைய செய்பவர்கள்.
- விசுவாசத்தில் விசுவாசிகளை திடப்படுத்தி வருங்காரியங்களை அறிவித்து புத்தியும் பக்தியும் ஆறுதலும் வர பேசுபவர்கள்.
- பாவத்தை நீதியை குறித்து கண்டித்து எச்சரித்து தேவ சித்தத்தில் தீர்மானம் எடுக்க உதவி செய்பவர்கள்.
புதிய ஏற்பாட்டில். யூதா, சிலா, மற்றும் அகபு, Barnaba மற்றும் பவுல் தீர்க்கதரிசிக்களாக இருந்தார்கள். இவர்கள் இரு குறிப்பிட்ட சபைக்கு என்று செயல்படாமல் எங்கு எல்லாம் சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமோ அங்கு முன்னறி விக்கும் ஊழியத்தை செய்து பல சபைகளில் பிரயானம் செய்து பல இடங்களில் உள்ள சபைகளை திடபடுத்தி இருக்கிறார்கள்.
C. மேய்ப்பர் அல்லது போதகர்
இப்படி aposthalar சுவிசேஷம் அறிவித்து மற்றும் தீர்க்கதரிசிகள் கொண்டு ஸ்தாபிக்க பட்ட சபைகளை கவனிக்க மேய்ப்பர்கள் போதகர்கள், கண்காணிகள், சபை ஊழியர்கள், சபை துதர்கள் என்று ஏற்படுத்த பட்டு சபையை நடத்த அபோஸ்தலர்கலால் ஏற்படுத்த பட்டவர்கள் தான் இந்த மேய்ப்பர்கள் மற்றும் போதகர்கள்.
சிலரை மேப்பராகவும் போதகராகவும் என்று ஒரே ஊழியமாக கொடுக்கப் பட்டுள்ளது.
இவர்களுக்கு கொடுக்க பட்ட கட்டளைகள்.
- மந்தையை இருமாப்பான நிலையில் மேய்க்க கூடாது.
- மந்தைக்கு முன்மாதிரியாக இருந்து மேய்க்க வேண்டும்.
- சபையை எச்சரித்து நடத்தி கள்ள உபதேசம் மற்றும் வஞ்சனைகளுக்கு தப்புவிக்க வேண்டும். உபதேசித்து சத்திய தேவராஜியத்தின் வசனத்தை போதித்தல்.
- ஓநாய் மற்றும் கொடிய மிருகங்களுக்கு ஆடுகளை தப்புவிக்க செய்ய வேண்டும். உயிரை கொடுத்து காப்பாற்ற வெண்டும்.
இவர்களை ஏற்படுத்த தான் பவுல் தனது உதவி aposthalarkalaka இருந்த தீத்து, Timothy போன்றவர்களை இப்படிபட்ட காரியங்களை ஒழுங்கு படுத்த கொருந்து மற்றும் மற்ற சபைகளுக்கு அனுப்பி அவைகளை சீக்கிரம் சரி செய்து தன்னிடம் வர சொல்கிறார்.
இந்த ஊழியம் செய்பவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு செய்ய, சகல காரியத்தில் அவர்களுக்கு பகர்ந்து கொடுத்து அவர்களை இரட்டிப்பான கணத்திற்கு பாத்திரராக எண்ண வேண்டும் என்று வேதம் கற்று தருகிறது
D. சுவிசேஷகர்கள்.
இது எல்லார் மேலும் விழுந்த கடமை, விசுவாசி ஆனாலும், aposthalar ஆனாலும், தீர்க்கதரிசி ஆனாலும், போதகர் மற்றும் பாஸ்டர் ஆனாலும் சுவிசேஷம் அறிவிப்பது நம் மேல் விழுந்த கடமை அப்படி செய்யாவிட்டால் எனக்கு ஐயோ என்று aposthalar பவுல் சொல்கிறார். வேதத்தில் எல்லா நிலையில் உள்ள ஊழியர்களும் சுவிசேஷம் அறிவித்து இருக்கிறார்கள். சிதறி திரிந்தவர்கள் எங்கும் சுற்றி திரிந்து சுவிசேஷம் அறிவித்தார்கள்.
இவர்கள் வேதத்தின் படி!
A. இரச்சிப்பை அறிவிப்பவர்கள்.
B. கர்த்தரை அறிமுகம் செய்பவர்கள்
C. சமாதானத்தை அறிவிப்பவர்கள்
D. சிருமைபட்டவர்களுக்கு தரித்திரர்களுக்கு நற்செய்தி அறிவிப்பவர்கள்.
சகல ஜாதிக்கும், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும். சீஷர்கள் அதாவது aposthalar கள் தான் முதலாவது இந்த கட்டளை பெற்றார்கள் பின்பு நாமும் பெற்று இருக்கிறோம்.
A. இவர்கள் சுவிசேஷம் அறிவித்து சீசறாக்கி எருசலேமுக்கும் திரும்பி வந்து பின்னர் aposthalarai அழைத்து வந்து அவர்களை கொண்டு மேலும் சத்திய வசனங்களை அவர்களை கொண்டு சுவிசேஷம் கேட்டவர்களுக்கு உபதேசித்து அங்கு சபை உருவாக்கப் பட்டு அவர்களை மேய்ப்பர்கள் கைகளில் ஒப்பு கொடுத்து அதை சபையாக பாவித்தனர். Act 14:21 உதாரணம் சமரியாவில் philip பின்னர் aposthalarkal அங்கு போகின்றனர். இந்த philip Jerusalem சபையில் பணிவிடை ஊழியம் செய்து சமாரியாவில் சுவிசேஷம் அறிவித்து பின்னர் எருசலேமில் அதை அறிவித்து aposthalarai வரவழைக்கிறது நாம் act 8 ஆம் அதிகாரத்தில் பார்க்க முடியும். ஆனால் அதே 6 ஆம் அதிகாரத்தில் சொல்ல பட்ட நிகோலாய் தனித்து செயல்பட்டு அவர்கள் பிற்காலத்தில் நிக்கோலாய் மதஸ்தராக மாறி வஞ்சிககப்பட்ட சரித்திரமும் சபைக்கு உண்டு.
B. அப்போஸ்தலநாகிய பவுல் பல இடங்களில் சுவிசேஷம் அறிவித்து சபைகளை ஸ்தாபித்த பின்னர் அவைகளை கண்காணிப்பு செய்ய விட்டு கொடுப்பதை நாம் வேதத்தில் பார்க்க முடியும். கோருந்து சபையை தான் பெற்றதாக சொல்கிறார். I Cor 4:15 II Cor 10:14 Act 18:8. பவுல் சுவிசேசகனாகவும், aposthalar ஆகவும் அழைக்கப் பட்டதாக சொல்கிறார்.
இயன்ற மட்டும் சுவிசேஷம் பிரசங்கிக்க விரும்புகிறேன் என்கிறார்.
அதை பிரசங்கிக்க வெட்க்கபடேன் என்றும் அதை செய்யவில்லை எனில் எனக்கு ஐயோ என்கிறார்.
சுவிசேஷம் பிரசங்கம் பண்ண நாடுகிறேன் என்கிறார்.
அது என் கடமை மற்றும் பிழைப்பு என்கிறார்.
சுவிசேசத்தின் உடன் பங்காளி என்கிறார்.
செலவு இல்லாமல் சுவிசேஷம் அறிவிப்பது தான் என் பலன் என்கிறார்.
C. இவைகளை எல்லாம் பார்க்கும் போது ஒரு சபைக்கு பிரயோஜனம் இல்லாத எந்த சுவிசேஷ ஊழியம் யார் செய்தாலும் அது சோதித்து பார்க்க பட வேண்டும். பவுல் கிட்ட தட்ட மூன்று missionary travel செய்து சுவிசேஷம் அறிவித்து சபைகளை உருவாக்கி, அவைகளை திடப்படுத்தி அவைகளை மேய்ப்பர்கள் அல்லது கண்காணிகள் போதகர்கள் ஏற்படுத்தி அந்த சபைகளை தனது அபோஸ்தல அதிகாரத்தில் நீருபங்கள் எழுதியும் தனது உடன் aposthalarகளை அனுப்பியும் மேற்பார்வை செய்தார்.)
D. சுவிசேகர்கள் எல்லா சபைகளுக்கும் உதவியாக செயல் பட வேண்டும். எனெனில் எல்லா சபைகளிலும் புகழ் பெற்ற ஒரு சுவிசேஷகனை நான் அனுப்புகிறேன் என்று பவுல் சொல்கிறார். சுவிசேஷகணை அப்படி என்றால் அன்று aposthalarகள் தான் இயக்கி உள்ளனர். 2 Cor 8:18. சுவிசேஷ ஊழியர்களும் சபைக்கு மற்றும் aposthalrkalukku கட்டு பட்டு தான் இருந்தனர் என்று அநேக வேத சான்றுகள் இப்படி இருக்கிறது. எனவே அற்புத அடையாளம் செய்த சுவிசேஷ ஊழியர்கள் அன்று aposthalar நாட்களில் அவர்களோடு இசைந்து சபையோடும் இசைந்து தான் செயல் பட்டு இருக்கிறார்கள். அவர்களில் யாரும் சபைக்கு தலைவர்களாக அல்லது ஒரு சபையை கட்டுப்படுத்தும் வேலையை செய்ய வில்லை. மாறாக எருசலேமில் சபைக்கு கட்டு பட்டு எங்கும் சுற்றி திரிந்து சுவிசேஷம் அறிவித்து aposthalar துணையோடு அவர்களை சார்ந்து நின்று சபையில் பணிவிடை ஊழியர்கள் என்ற நிலையில் சந்தோச பட்டு தங்கள் ஊழியத்தை நிறை வேற்றினார்கள்.
ஆனால் aposthalaar ஆனாலும், மேய்ப்பர் ஆனாலும், போதகர் ஆனாலும், தீர்க்கதரிசி ஆனாலும், விசுவாசி ஆனாலும், சபை ஊழியர் ஆனாலும் எல்லாரும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் ஏனெனில் அது எல்லார் மேல் விழுந்த கடமை.
செலின்