
உங்களில் ஒருவனாகி லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுபோகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். (எபி : 3 : 13)
இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதைக் குறித்து சிந்திக்கலாம். வேதத்தின் வெளிச்சத்தில் பாவமானது எத்தன்மையுள்ளது என்பதை சிந்திக்கலாம். பாவத்தின் வெளிப்படையான வேஷத்தை கலைந்து, அதன் உண்மை நிலையை விளங்கிக்கொண்டு எச்சரிப்புடனிருக்கச் செய்தலும் பாவத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்துதலும் நோக்கமாகக் இருக்கிறது. பாவங்களை கண்டித்து உணர்த்துதல் அவசியம்.
- பாவம் கவர்ந்திழுக்கும். பாவம் கசக்கும் (ஆதி : 3 : 6) (2 சாமு : 13 : 14 , 15)
- பாவம் அநித்தியமான சந்தோஷத்தைக் கொடுக்கும். முடிவிலே இருக்கும் சந்தோஷத்தையும் எடுத்துவிடும். (எபி : 11 : 25) (லூக்கா : 15 : 17)
- பாவம் ஒருபோதும் திருப்தியை தராது. தாகத்தையே ஏற்படுத்தும். (எண் 32 : 23) (ஆதி 4 : 7)
- பாவம் அதன் விளைவை மறைத்து விடும். பாவத்தின் சம்பளம் மரணம். (ஆதி 3 : 4) (பிரச 7 : 8) (ரோமர் 6 : 23)
- பாவம் அடிமைப்படுத்தும். (ரோம 7 : 15) (யோவா 8 : 34)
- பாவம் வளரும். (யாக் 1 : 14 , 15)
- பாவம் சூழ்நிலைகளின்மீதும் மற்றவர்கள்மீதும் குற்றத்தை சுமத்தும். (ஆதி 3 : 11-13)
- பாவம் ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவத்தை செய்ய தைரியப்படுத்தும், நடத்தும். தாவீது விபாச்சார பாவத்தை மறைக்க உரியாவை கொலை செய்யத் குனிந்தான்
(2 சாமு 11 : 14 , 15). - பாவம் மற்றவர்களையும் தொற்றும் ஆபிரகாம் மனைவியை சகோதிரி என்றான். (ஆதி 20:2) இதே தவறை ஈசாக்கும் செய்தான் (ஆதி 26 : 7) ஏவாள் செய்த பாவம் பூமியிலுள்ள யாவரையும் பாவம் செய்ய வைத்து தேவமகிமையற்றவர்களாக மாற்றியது (ரோம 5 : 19)
- பாவம் கடைசியில் குற்ற மனசாட்சியையே கொடுக்கும் (மத் 27 : 4 , 5) (சங் 51 : 3)
பாவத்தைக் குறித்த சில குறிப்புக்கள்.
ஏசா : 59 : 1 , 2
நீதி : 14 : 34 , 13 : 21
சங் : 66 : 18.
இந்தக் குறிப்பில் பாவம் என்னத்தான் செய்யும் என்பதை சிந்தித்தோம். பாவத்தின் பட்டியலை நாம் சிந்தித்து இப்படிப்பட்ட பாவத்திலிருந்து விடுதலையடைவோம். பாவத்திற்கு ஒரே பரிகாரி இயேசு ஒருவரே. பாவத்தை மறைக்கின்றனர் வாழ் வடடைய மாட்டான். அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான். இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிக்கும். பாவத்தை வெறூத்துவிடுவோம். சந்தோஷமாக வாழ்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur