வசனங்களின்படி மூன்று வானங்களே சொல்லப்பட்டிருக்கின்றன.
1. முதலாவது நாம் காணும் வானம்.
2. இரண்டாவது எபேசியர் 6: 12 படி (வான மண்டலங்களிலே இருக்கின்ற) பொல்லாத ஆவிகளின் (சாத்தானின்) சேனையுள்ள வானம் (தானி 10:13).
• பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி என்பவன் சாத்தானின் அந்த நாட்டிற்க்கான அதிபதி (சாத்தானின் பிரதிநிதி)

3. மூன்றாம் வானம் பவுல் தரிசித்த வானம்

இரண்டாம் முறையாக பவுல் (வானத்திற்க்கு) பரதீசுக்கு போனார். மனுசன் பேசப்படாத மொழிகளை கேட்டார். இது எங்கே என்பது எல்லோருக்கும் யூகம்தான் உள்ளது. பரதீசு ஜீவ விருட்சம் மரம் இருக்கிற இடம். (வெ.வி 2: 7) நிச்சயம் பரலோகமே. ஏனென்றால் ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவ விருட்ச மரத்தின் கனியை கொடுப்பேன் என்கிறார். கனியை சாப்பிடுகிறவனுக்கு மரணமில்லை. நாம் நித்யமாய் வாழப்போகிறது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு பின்பே. ஆக ஜெயங்கொள்ளுகிறவன் ஜீவக்கனியை புசிப்பான். நித்ய ஆட்சியில் பங்கு பெறுவான். ஆயிரவருட ஆட்சியில் அரசாளுவோம். இப்படிப்பட்ட ஒரு நித்ய ஜீவனை தன் பிள்ளைகளுக்கு தருகின்ற கர்த்தர் வேறு ஸ்தானத்தையும் தருகிறார். நாம் அழைக்கப்ட்டதற்க்கான நோக்கம் பரலோக பழைய ஏற்பாடு பரிசுத்தவான்களோடு இணைவதால் பூரணம் ஆகிறது. இது கர்த்தர் நியமித்தது.

அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். (எபிரேயர் 11: 40)

நமக்கு பிதாவாகிய தேவன் அனுப்பிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் பெற்ற இரட்சிப்பும் அவர் கற்பித்தவைகளும் அவர் அருளிய அபிஷேகத்தில் நிலைத்திருப்பதுனாலேயே நாம் ஜெயங்கொள்ளப்போகிறோம். அதனால் நாம் அவர்களை பூரணம் ஆக்குகிறோம். கர்த்தர் எவ்வளவு பெரிய திட்டத்தை நம்மேல் வைத்துள்ளார் என்பதை இப்போது இந்த நாட்களில் தெரிந்துக்கொள்ள வேண்டும். கடைசி காலங்களான இப்போது நமக்கு வரும் உபத்திரவங்களில் பொறுமையாயும் தாழ்மையாயிருந்து கிழ்படிதலுக்கு நம்மை அர்ப்பணித்து ஆட்டுக்குட்டியானவரின் சுபாவத்தை அணிந்துக்கொண்டு ஜெயங்கொள்ளுவோம். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.

அங்கே இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை, தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
(வெளி. விசேஷம் 22 :3, 5)

இங்கே அவர்கள் என குறிப்பிடப்பட்டிருப்பது யாரை? பன்மையிலுள்ளது. தேவனின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிற நாம்தான் அரசாளுவோம்.