கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

கிறிஸ்தவர்கள் யாரை பிசாசு என்று சொல்கிறார்கள்?

எங்கள் மதத்தின் கடவுள்களை பிசாசு என்று கொச்சைப் படுத்துகிறார்கள். எங்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார்கள். அதினால் தான் நான் தாண்டவம் ஆடி இருக்கிரேன். அப்படி யாராவது இந்து மதத்தை இழிவு செய்தால் நான் நிச்சயம் ரூத்ர தாண்டவம் ஆடுவேன் என்று பகிரங்கமாக ஒரு இயக்கிநர் ஒருவர் அறிக்கையிட்டு இருப்பதை கவனிக்க நேர்ந்தது.

அப்படியென்றால் யார் பிசாசு? பிசாசு என்று கிறிஸ்தவர்கள் பிற மத கடவுள்களை விமர்சிப்பது சரிதானா என்பதை வேதத்தின் அடிப்படையில் இந்த இயக்குனருக்கு சொல்ல வேண்டிய கடமை உள்ளது அல்லவா! தொடர்ந்து கவனிப்போம்.

A. பிசாசு ஆதி முதலே கொலைபாதகன்

முதலில் தாண்டவம் என்கிற பதமே தெய்வ பதம் அல்ல. ஒரு மதம் தங்கள் வெற்று வீரத்தை மட்டும் காட்டி நாங்கள் தான் பெரியவர்கள் என்று நீரூபிக்க பிறரை கொன்று அழித்து தங்களை பெரியவர்கள் என்று காட்ட முயற்சிக்கிறார்கள் என்றால் அங்கு ஈகோ தான் முன் நிற்கிறது. தாண்டவம் என்கிற பதத்தின் அர்த்தம் நளினம், அசைவு, நாட்டியம், கதகளி, நடனம் என்று பொதுவாக சொன்னாலும் அதன் யதார்த்த பதமே அழிப்பு, மிரட்டல், கலவரம் போன்றவையாகும். ஒரு தெய்வீக அசைவு எப்பொழுதும் ஒரு மனிதனை அழிப்பதில் மட்டும் குறியாக இருந்தால் அதை மதம் என்று எப்படி சொல்ல முடியும்? பிறரை அழிப்பதும், பிறரை கொல்வதும், பிறரை வதம் செய்வதை மட்டுமே வீரத்தின் அடிப்படையில் தெய்வீகம் என்றால் அதில் சில குளருபடிகள் இருக்கின்றது. ஒருவரை அழித்து இன்னொருவரை காப்பது என்பது பட்சாபாவம் அல்லவோ அதினால் பிறரை எதற்கு எடுத்தாலும் கொல்லும் அழிக்கும் சுபாவம் கொண்ட கதாபாத்திரங்களை பைபிள் பிசாசு என்று சொல்கிறது. தெய்வம் அழிக்கும் வல்லமை, வீரத்தன்மை உடையவராக இருந்தாலும் அன்பு, இரக்கம், நீதி, கிருபை, தயவு, பொறுமை, நம்பிக்கை போன்ற நல்ல சுபாவங்களையும் தன்னகத்தே உடையவராகத்தான் இருப்பார். அதை நோவாவின் காலத்தில் நாம் பார்க்க கூடும். இறை அறத்துடன், இறை சுபாவத்துடன், இறை மரபுகளுக்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டிய மனிதன் அதை மீறி நடக்கும் போது அவன் எச்சரிக்கப் படுகிறான். எல்லா மனிதர்களும் பாதுக்கப்படவே அத்தனை பெரிய பேழையை நோவா செய்கின்றார். ஆனால் எல்லாரும் அழிவை தானாக வாங்கிக் கொண்டனர். அதே போல தான் தன் ஜனங்களை பலியிட அனுப்பி விட பார்வோனுக்கு கட்டளை பெற்றும் விட மாட்டேன் என்று முரண்டு பிடுத்தும், பல சந்தர்ப்பங்களை அசட்டை செய்தும் தனக்கு தானே பார்வோன் அழிவை பெற்றுக் கொண்டான்.

ஒருவரை அழிக்கும் முன் எச்சரிப்பும், சந்தர்ப்பமும், அதற்கு தப்ப வழிகளையும் ஏற்படுத்தாமல் வெறும் குந்தம், பட்டயம், தடிகள், அறுவாக்கள், ஈட்டிகள், வில்கள், போர் ஆய்தங்கள் கொண்டு தங்கள் வீரத்தை மட்டும் காட்டி பிறரை பயமுறுத்தி, கொலையை மட்டும் தீர்வாக கருதும் எந்த காதாபாத்திரமும் பிசாசு என்று பைபிள் சொல்கிறது.

அழிவை தாண்டி வானவில் ஏற்படுத்தி மனஸ்தாபம் கொண்டு தீங்குக்கு வருத்தப்பட்டு, அழிப்பேன் என்று கோபத்தில் சொன்னாலும் அழிக்காமல் பரிதவித்து, இரக்கம், அன்பு, நீதி, பரிசுத்தம், பாராட்டுவர் தான் இறைவன். மற்றதெல்லாம் பிசாசுகளே! பிசாசுகள் எப்பொழுதும் கொலைவெறியில் திரிந்து, காரணம் இன்றி எல்லாரையும் சத்ருக்களாக, விரோதிகளாக பாவித்து, யாரை எல்லாம் அழித்து இரத்தம் குடிக்கலாம் என்கிற எண்ணத்தில் அலைந்து திரிந்து தீமை செய்யும் ஆவிகளல்லாமல் வேரோன்றும் இல்லை.

B. பிசாசு பொய்யும் பொய்க்கு பிதாவுமாக இருகிறான்

சத்தியம், உண்மை, மெய்வழி, உத்தமம் போன்றவற்றிக்கு எத்ரிடையாக பொய்யை உண்மை என்றும் மெய்யை பொய் என்றும் திரித்து, கதைகள், கட்டுக்கதைகள், யூகக்தைகள், பண்டோருக் கால கதைகள் போன்றவைகள் வழியாக கடவுளுக்கு பல உருவங்கள் கொடுத்து, கண்டதெல்லாம் கடவுள் என்ற மூட நம்பிக்கையில் மக்களை மிரட்டி, பயமுறுத்தி, ஒரு சாராரை உயர்ந்தவற்களாக சித்தரித்து, மக்களின் சத்திய தேடலின் வழியை அடைத்து தீண்டாமை, கதை கட்டி விடும் எந்த போலியான கற்பனை கதாபாத்திரங்களும் பிசாசு என்றே பைபிள் சொல்கிறது. தனக்கென்று ஒரு கதை, தனது ஜாதிக்கு என்று ஒரு கதை, தனது நாட்டிற்கு என்று ஒரு கதை என்று எழுதி எல்லா மக்களின் பொதுவான யதார்த்தம் கருதி அவனது பிறப்பு, வாழ்வு, வாழ்வியல் உண்மைகள், இறப்பு போன்றவற்றின் சத்திய நெறிகளை விட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொய்யை கற்பித்து அறம் அற்ற உதாரணம் கொண்ட எந்த சமரசவாதிகளின் கதாபாத்திரமும் பிசாசின் கதைகளே! எல்லா மனிதனின் சிருஸ்டிப்பும் கடவுளின் ஒரே வழியே என்றும், அந்த மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் இறப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மனித இனத்திற்கு அதனுடைய ஆரம்பம், அதனுடைய அர்த்தம், அதனுடைய நோக்கம், அதனுடைய முடிவு போன்றவற்றில் உறுதி கொண்ட ஒரு வழியை சத்தியத்தை நேர்த்தியாக கொடுப்பது தான் தெய்வீகம். இயேசு கிறிஸ்து எல்லா மனிதருக்கும் சத்தியமாக வந்தார், அவர் வழியாக வந்தார், அவர் அன்பை வெளிப்படுத்தினார், பரிகாரமாக மரித்தார், உயிர்த்தெளுந்தார் என்பதே உண்மையும் சத்தியமாக இருக்கிறது. ஆசைகளை தூண்டி, கற்பனைகளை கிளறி விட்டு, logic இல்லாமல் கதை கட்டி அவைகளுக்கு அறிவியல், தொல்லியல், spiritual, historical ஆதாரங்கள் கொடுக்க முடியாத பொய்களை கட்டவிழ்த்து வஞ்சனை செய்யும் எந்த காரியமும் பிசாசின் வழியில் இருந்தே வருகிறது. ஒன்றை மறைக்க இன்னொரு பொய் என்று சொல்வார்கள். உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்று சொல்வது தான் கிறிஸ்தவர்களின் பைபிள். மனிதனின் வாழ்வில் சாதரணமாக நடப்பவைகளின் அடிப்படையில் தீர்வு கொடுப்பதே சத்தியம்.

C. பிசாசு திருடனும் கொள்ளைக்காரனுமாக இருக்கிறான்.

பிறரது அதிகாரம், பிறரது எல்கைகள், பிறரது சொத்துக்கள், பிறரது ஆளுகை, பிறரது அழகு, பிறரது இன்பம் மற்றும் நன்மைகள் போன்றவற்றில் மயங்கி அவைகளை அபகரிக்கும், திருடும், கொள்ளையிடும் எந்த கதாபாத்திரங்களும் பிசாசின் தோன்றல்களே. ரவுடிசம், குண்டாயிசம் கொண்டு பிறரது காரியங்களை வலுகட்டாயமாக அபகரித்து தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று பிறரது அனுமதியின்றி அவர்கள் இடங்களில் வலுக்கட்டாயமாக நுழைந்து பிறரது காரியங்களில் தலையிடும் எந்த கதாப் பாத்திரமும் அது திருவிளையாடல் என்று சொன்னாலும் பிசாசின் கிரியைதான். கிறிஸ்தவம் யாரையும் எதையும் கொண்டு திணிப்பது அல்ல நற்செய்தி அறிவிப்பது எங்கள் கடமை. சட்டம் கொண்டோ, மிரட்டல் கொண்டோ யாரையும் மதம் மாற்றுவது எங்கள் வேலையும் அல்ல. பட்டயம் எடுக்கவும் தெரியும் அதை பிறருக்கு கெடுதல் வராமல் உறையில் போடவும் தெரிய வேண்டும். அப்படி தவறு நடந்தால் கூட அதை சரி செய்யும் வல்லமையும் ஒரு மார்க்கத்திற்கு வேண்டும்.

D. பிசாசு இருளை விரும்பி வெளிச்சத்தை பகைக்கிறான்

சமூக வளர்ச்சி, சுபாவம் மேன்மை, அறிவின் வெளிச்சம், அற நெறியின் வெளிச்சம் போன்றவை நல்ல மார்க்கத்தின் அடையாளம். ஒரு மார்க்கத்தில் இருந்து அறிவு, மீட்பு, ஞானம், ஆசீர்வாதம் வெளிப்பட வேண்டும். கல்வி, மருத்துவம், அறிவியல், தொழில், விவசாயம், பொறியியல், போன்ற துறைகள் ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் முன்னேறத்தையும் உறுதிப் படுத்த வேண்டும். மக்களை அறியாமை, மூட பழக்க வழக்கங்கள், பாரம்பரியம், தீண்டாமை போன்றவற்றால் அமுக்கி வைக்கின்ற எந்த காதாபாத்திரமும் பிசாசுகள் தான். அன்பு சமாதானம் சந்தோசம், வாழ்வியல் நோக்கம், வாழ்வியல் அர்த்தம், நம்பிக்கை மற்றும் ஞானம் போன்ற அறம் சார்ந்த சுபாவக்காரியங்களில் மக்களை தூண்டாமல், வன்மம், கசப்பு, வைராக்கியம், வெறுப்பு போன்றவற்றை தூண்டி விட்டு விளையாடும் எந்த கதாபாத்திரமும் பிசாசின் பிறப்பிடம் தான்.

ஒரு தெய்வீகம் என்றால் கடவுள் இருக்கும் இடம் எல்லாருக்கும் தமது பிரசன்னத்தால் சுகம், திருப்தி, முக்கியத்துவம், பாதுகாப்பு, சந்தோசம், அன்பு, கிருபை, இரக்கம், பரிசுத்தம், நீதி மற்றும் நம்பிக்கை போன்ற விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு பாரம்பரியம், அறியாமை போன்ற இருளில் தொடர்ந்து மக்களை வைத்துக் கொண்டே ஒளியிடம் வரவிடாத எந்த சக்தியும் பிசாசின் சக்திகளே.

இயேசு மனிதனை போன்றே இந்த உலகில் அதே நேரத்தில் பரிசுத்த ஆவியினால் கற்பந்தரிக்கப்பட்டு, மனிதனை போன்றே வாழ்ந்து அதே நேரத்தில் கடவுளாகவே வாழ்ந்து பிறருக்கு நன்மை செய்து, வியாதிகளை குணப்படுத்தி, பிசாசுகளை துரத்தி, இயற்கையை கட்டுப் படுத்தி, மரித்தோரை உயிரோடு எழுப்பி, பாவ குற்ற உணர்ச்சிகளை மன்னித்து, தனக்கு விரோதமாக பாவிகளால் செய்யப்பட்ட விபரீதங்களை சகித்து, அவற்றை உள்வாங்கி, பட்டயம் இல்லாமல் தனது இரத்தத்தையே ஆயூதமாக்கி மரித்து உயிரோடு எழும்பி எல்லா நாமத்திற்கு மேலான நாமத்தை பெற்று சிங்காசசனத்தில் இன்று வீற்று இருக்கிறார் என்பதே உண்மை. அந்த சத்தியம் என்பதே நம்பிக்கை, அந்த சத்தியம் என்பதே வெளிச்சம், அந்த சத்தியம் என்பதே வாழ்வின் நோக்கம், அந்த சத்தியம் என்பதே வாழ்வின் அர்த்தம். இதை விசுவாசித்தால் நித்திய வாழ்வு நிச்சயம். அதற்கு மிஞ்சின சுவிசேஷம் வேறொன்றும் இல்லை. இந்த நற்செய்தி தான் அநேக தத்துவங்கள், கண்டுபிடிப்புகள், நல்ல சட்டங்கள், வாழ்வின் வளர்ச்சிகள் போன்றவற்றை கொடுத்து காட்டுமிராண்டிகளை கூட மனிதனாக மாற்றியது.

எனவே ஒரு மனிதனின் விகற்பமான சுபாவம் மற்றும் தோற்றம் மாற அவனுக்குள் இருக்கும் அறம் சார்ந்த பரிசுத்த சுபாவத்தை கெடுக்கும், பாவத்தை தூண்டும், கொலை வெறியை தூண்டும், போய் பேச வைக்கும், கொள்ளையடிக்கும், திருடும் பொருளாசை கொண்ட எந்த தூண்டுதலின் வழியும், அறியாமையை பயன்படுத்தி வஞ்சிக்கும், தான் வாழ பிறருக்கும் மிருகங்களுக்கும் தீமை செய்யும், தீங்கு செய்யும், வேதனை கொடுக்கும் எந்த காதப்பாத்திரமும் ஆழிக்க பட வேண்டும் ஏனெனில் அவைகள் தான் பிசாசு பிசாசு என்பதில் எந்த சந்தேகம் வேண்டாம்.

ஆனால் மனிதனை உயர்ந்த நிலையை அடைய செய்து, அவன் பாவத்தை மன்னித்து, வாழ்வில் அர்த்தம் கொடுத்து, அவன் வாழ்விற்காக எல்லாவற்றையும் சகித்து, அவனுக்கு பரிகாரம் செலுத்தி, அன்பில் திளைக்க வைத்து அவனை எல்லா விதத்திலும் வளர்ச்சி அடைய செய்து நித்தியத்தை கொடுக்கும் தெய்வமாகிய கிறிஸ்துவே இரட்ச்சகர் அவரே தெய்வம். அவர் கிருபை நம் அனைவருக்கும் கிடைக்க அருள் வருவதாக!

செலின்