செயல்களில் பரிசுத்தம் (I பேதுரு 1:15)

நம்மை அழைக்கிறவர், அழைத்தவர், நாம் ஆராதிக்கிறவர், நாம் செய்
சேவிக்கிறவர் மற்றும் நமது ஆதியும் அந்தமுமான கர்த்தர் என்பதே பரிசுத்தம் மற்றும் பரிசுத்தர் என்று அறியப்படுவதே!

அவரை போல மாறவேண்டும் என்பதே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம். நமது நடக்கை செயல் மற்றும் எல்லா நிலைகளிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

ஏன் பரிசுத்தமின்மை?

கிறிஸ்துவை ஏற்று கொண்டு இருக்கிறோம், அவரது வசனம், இரத்தத்தை நம்புகிறோம் என்று சொல்லியும் ஏன் நம்மால் பரிசுத்தம் காத்து கொள்ள முடியாமல் இருக்கிறது?

 1. பாவத்தில் சமரசம் செய்து தொடர்ந்து பாவம் செய்தல்.
 2. மனிதன் மற்றும் மாம்சம் பெலவீனமுள்ளது என்று சாக்கு போக்கு செய்தல்.
 3. நாம் இந்த பாவ உலகில் வாழ்வதால் அதற்கு வழியில்லை என்று பரிசுத்ததை நிராகரிக்கும் சுபாவம்.
 4. கர்த்தருக்கு அடுத்த காரியங்களை உதாசீனம் செய்தல்.
 5. நம்மை பரிசுத்த படுத்த கர்த்தர் காட்டும் வழிமுறைகளை விரும்பாமை.
 6. கர்த்தர் கிருபை உள்ளவர் என்று கிருபையை எளிதாக எடுத்த கிருபையின் எதார்த்தம் சத்தியம் மற்றும் அதன் சாராம்சத்தை அறியாமை.
 7. தன்னை அடைகட்டாமல் பிறரது காரியங்களில் அதீத ஈடுபாடு கொண்டு, தன்னை ஒரு பொருட்டாக எண்ணி கொள்ளுதல்.

பரிசுத்தமின்மையின் விளைவுகள்

மாம்சத்தில் பலவீனம். இச்சை ரோகங்களுக்கு அதிக வாய்ப்பு.

ஆவியில் உற்சாகமின்மை. உணர்வில்லாத இருதயம்.

வெறுமையான உணர்வு, எப்போதும் ஒரு வித விரக்தியின் வாழ்வு.

தேவ சமூகத்தை உணரமுடியாமை மற்றும் வெறுப்பின் விளிம்பில் போகும் வாழ்வு.

பரிசுத்த ஆவியின் flow, மற்றும் அவரது விடுதலை வாழ்வில் மற்றும் ஊழியத்தில் காண முடியாமை.

விசுவாசத்தில் பின்மாற்றம் மற்றும் எதிற்பார்ப்பில் ஏமாற்றங்கள்.

சலிப்புள்ள வாழ்வு மற்றும் தேவ கோபாக்கினைக்கு ஆளாகுதல்.

முடிவு பரிதாபம். இரக்கம் கிடையாமை. கிருபையை விருதாவாக எண்ணி, போக்கடித்து நித்தியதை இழத்தல்.

பரிசுத்தம் வர்த்திக்க என்ன செய்ய வேண்டும்?

A. பாவத்தில் சமரசம் கூடாது.

B. கர்த்தருடைய காரியங்களான ஜெபம், வேத தியானம், ஊழியம் மற்றும் விசுவாச ஜீவித்தில் உதாசீனம் கூடாது.

C. அவரவர் அழைப்பில் கவனம் செலுத்தி, தனக்கு மிஞ்சின கருமங்கலில் தலையிட கூடாது.

D. பரிசுத்தத்தை கெடுக்கும் காரணிகளை விட்டு விட வேண்டும்.

E. விசுவாசத்தோடு இச்சை அடக்கத்தை கூட்டி கொள்ள வேண்டும்.

F. விவேகத்தோடு ஞானத்தோடு நடந்து மன தால்மையை தரிக்க வேண்டும். அங்கே தான் கிருபை வெளிப்படும். கிருபாசனம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறது என்கிற உணர்வு வேண்டும். ஏனெனில் கிருபை மகா பரிசுத்தமானது.

G. எல்லாவற்றிக்கும் மேலாக அவரது சத்துவத்தில், கிருபையின் வழியில் நடந்து, கர்த்தரின் வசனம் மற்றும் அவரது இரத்தத்தில் சரணமடய வேண்டும்.

கடைசியாக

என்னில் பரிசுத்தம் இல்லையே?

நான் இன்னும் பரிசுத்தமாக வேண்டுமே?

என்னை இன்னும் பரிசுத்த படுத்த வேண்டுமே!

என்னையே எனக்கு அருவருப்பாக தோன்றுகிறதே! ஐயோ நான் அசுத்த உதடு உள்ளவன் அல்லவோ! என் கண்கள் அல்லவோ!

இயேசுவே உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமை, பரிசுத்த இரத்தத்தின் வல்லமை என்னிடம் கிரியை செய்ய வில்லையே என்கிற ஏக்கம் ஜெபம் இருக்கிறதா?

அதை விட்டு விடாதிருங்கள் ஏனெனில் பாவி என்கிற உணர்வுடன் கூடிய இருதய நொருங்குதலே உள்ளம் உடைத்தலே, தான் நாம் இன்னும் பரிசுத்தம் அடைய விரும்பும் விருபத்தின் அடையாளம்.

மிகவும் எளிதாக பரிசுத்தம் அடைய செய்ய வேண்டியது?

 1. கர்த்தரையும் அவரது வல்லமை மற்றும் சுபாவத்தை நம்ப வேண்டும்.
 2. அவருக்கு நேரத்தை கொடுத்து அவரோடு நேரத்தை செலவிட வேண்டும். அவரது பரிகாரத்தை விசுவாசிக்க வேண்டும்.
 3. ஜெபம் வசனம் கிருபை மற்றும் அவரது இரத்தத்தை அற்பமாக எண்ணதிருக்க வேண்டும்.
 4. பரிசுத்த உபவாச நாளை நியமித்து, விழ தள்ளி கொண்டு இருக்கும் பாவங்களை அடையாளம் கண்டு இருதயத்தை கிழிக்க விட்டு கொடுக்க வேண்டும்.
 5. சிலதை இழக்க, ஒதுக்கி வைக்க, வேண்டாம் என்று சொல்ல பழக வேண்டும்.
 6. கர்த்தரின் சமூகத்தை அதிகம் வாஞ்சித்து அவரவர் காரியங்களை மட்டும் நோக்கி கொண்டு, கர்த்தர் சொல்வதை செய்ய வேண்டும். விசேஷமாக வேறு யாருக்கும் சொம்பு தூக்க கூடாது.
 7. கடைசியாக மிகவும் முக்கியமாக, cell phone ஐ கையாள சரியாக தெரிய வேண்டும். இது communication மற்றும் information காரியங்களுக்காக தான் பயன்படுத்த வேண்டுமே அன்றி entertainment நோக்கத்தை தவிர்த்து விட வேண்டும். இந்த technology mis handle தான் எல்லா பாவத்திற்கு வழி செய்கின்றது.

கர்த்தர் தாமே நம்மை பரிசுத்தப்படுத்த கிருபை தருவாராக

செலின்