கர்த்தருக்குள் புதுவாழ்வு: ‘நம்பிக்கையாயிரு’.
“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்”
(நீதிமொழிகள்3:5,6).
நீங்கள் உங்கள் நம்பிக்கையை யார் மேல் வைத்திருக்கிறீர்கள்?
இந்த கொரோனா இரண்டாம் அலையை சந்தித்து கொண்டிருக்கும் நாம், இதுவரை பணத்தின் மேல் நம்பிக்கை வைத்திருந்தோமானால், நம்முடைய பணம் ஒரு காய்சலில் இருந்து கூட நம்மை காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
பிள்ளைகள் மேல், உறவுகள் மேல் நம்பிக்கை வைத்திருந்தீர்களானால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட காரணத்தால், பிள்ளைகளால், உறவினர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ பேரை பார்த்திருப்பீர்கள்.
பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கையை கர்த்தர் மேல் வையுங்கள்.
“மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” (சங்கீதம்118:8).
பயப்படாதிருங்கள். தேவனுக்கு பிரியமில்லாத, அநீதியான, பாவமான காரியங்களை விட்டு மனந்திரும்புங்கள். கர்த்தர் உங்களுக்கு இரக்கம் செய்வார். பாதுகாப்பார். நோயிலிருந்து விடுதலை தருவார். மரண பயத்தை மாற்றுவார். ஆமென்.
