பிரசங்க குறிப்பு: வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்

அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் தேவனுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள். மல்கியா 3 : 18

நாம் மாபெரும் வித்தியாசமான வாழ்க்கை வாழ்வும் , ஊழியம் செய்யவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் சொல்வது வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள் தேவனுடைய மனிதர்கள் வித்தியாசங்களை ஏற்படுத்தி உலகத்தை அசைத்துள்ளனர். யார் யார் எந்தெந்த சூழ்நிலையில் வித்தியாசத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை சிந்திக்கலாம். இருளாய் இருந்த பூமியில் வெளிச்சத்தை உண்டாக்கி தேவன் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தினார். இப்படியாக தேவ மனிதர்கள் மூலம் பல வித்தியாசங்களை தேவன் ஏற்படுத்தி இந்த உலகத்தை வித்தியாசமான உலகமாக மாற்றினார்.

செத்தழிந்த சந்ததியாருக்குள்ளே வித்தியாசமாய் நின்ற ஏனோக்கு ஆதி : 5 : 22 -24. நாமும் வித்தியாசங்களை நிகழ்த்த வேண்டுமாயின் ஏனோக்கைப்போல தேவனோடு சஞ்சரிக்கிற மனிதனாக இருக்க வேண்டும்.

அழிந்து மாயமான சந்ததியினருக்குள்ளே அழியாமல் வித்தியாசமாய் வாழ்ந்த நோவா ஆதி : 6 : 7 – 14. நாமும் வித்தியாசத்தை நிகழ்த்த நோவாவைப் போல வாழ வேண்டும்.

இச்சையின் மாயை வலைக்குள்ளே சிக்காமல் தன்னை வித்தியாசமானவனாய் நிலைநிறுத்திய யோசேப்பு

ஆதி : 37 : 2 — 14 நாமும் ஒரு வித்தியாசத்தை நடத்திக்காட்ட யோசேப்பின் வாழ்க்கையை பின்பற்றி வாழ வேண்டும்.

தன் கோலால் வித்தியாசத்தை விளங்கப்பண்ணின ஆரோன்
யாத் : 7 : 10 — 12, எண் : 17 : 8 நாமும் பரிசுத்தத்தைக் காத்து ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவோம்.

லட்சங்கள் நடுவே தன்னை வித்தியாசமானவனாய் விளங்கப்பண்ணின காலேப்
எண் : 14 : 23 , 24 நாமும் வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்ட காலேபைப் போல உத்தம மார்க்கத்தில் காணப்படுவோம்

ஏலியிடமிருந்து தன்னை வித்தியாச மனிதனாய் நிலைப்படுத்திய சாமுவேல்
1 சாமு 3 : 1 — 21 நாமும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தசாமுவேலைப்போல
நாமும் கதறுகிற
மனிதனாக இருப்போ
ம்.

தேவன் வரும் நாளில்
திரும்பவும் வித்தியாசத்
தை காண்பீர்கள்
என்றார். நாமும் நமது
ஜீவியத்திலும் ஊழியத்
திலும் ஒரு வித்தியாசத்
தை ஏற்படுத்தி நாம்
வித்தியாசமானவர்கள்
என்று இந்த பூமியை
அசைத்துக்காட்டுவோம்.
நீங்களும்ங நானும்
மற்றவர்களைவிட
சற்று வித்தியாசமான
வர்கள் என்பதை
நிருபித்து வாழ்ந்துக்
காட்டுவோம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.