டி.சி.என் மீடியாவின் பல்வேறு சமூகப்பணிகளை அங்கீகரித்து சேவரத்னா விருது

Share this page with friends

16, அக்டோபர் 2021
சென்னை

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா:

டி. சி. என் மீடியாவின் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பணிகளை பாராட்டி திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு சேவரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பார்க் இலான்ஸா நட்சத்திர ஹோட்டலில் 16, அக்டோபர் 2021 (சனிக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் மிக பிரமாண்டமான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை ஆராய்ந்து, அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் நேசம் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். நிகழ்ச்சியில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவரும் பங்குபெற்றனர். ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த வகையில் பல்வேறு ஊடக & சமூக பணிகளை பாராட்டி பாஸ்டர். பெவிஸ்டன் அவர்கள் டி.சி.என் மீடியா சார்பாக தேர்வு செய்யப்பட்டார்.

ஊடகம் மற்றும் சமூக சேவைகள்:

தமிழகத்திலிருந்து இயங்கிவரும் டி. சி. என் மீடியா என்ற சமூக ஊடகத்தில் இலட்சக்கணக்காணோர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ் கிறிஸ்தவர்களிடைய வேறுபாடுகளை களைந்து நடப்பு கிறிஸ்தவ செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் இந்த ஊடகம் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊடக மற்றும் இலக்கிய துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு முறையான பயிற்சியளித்து உலகத்திற்கு அடையாளம் காட்டுதல், தரமான புத்தகங்களை வெளியிடுதல் போன்ற பல்வேறு சமூகப்பணிகளை டி.சி.என். மீடியா குழு செய்து வருகிறது.

விருது வழங்கல்:

சேவரத்னா விருது மற்றும் முனைவர் சான்றிதலை டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல். திருமாவளவன் M.P அவர்கள், தமிழக அரசு சார்பாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. செஞ்சி கே. எஸ். மஸ்தான் அவர்கள் மற்றும் சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் மதிப்பிற்குரிய திரு. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் திரு. பெ . பெவிஸ்டன் அவர்களுக்கு பதக்கங்கள் அணிந்து சேவரத்னா விருது மற்றும் முனைவர் சான்றிதழை வழங்கினார்கள்.

தலைவர்கள் பங்கேற்பு:

டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல். திருமாவளவன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே. எஸ். மஸ்தான், சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் டெல்லி பிரநிதியுமாக பணியாற்றிய நாகை அ. அசோகன், தேவனுடைய அன்பு ஊழிய நிறுவனர் சுவி. ஸ்டீபன், பேராயர் தயானந்தன், திரு. ஜேக்கப் மனோகரன், துபாய் பிரபல தொழிலதிபரும் கிறிஸ் குருப் ஆப் கம்பெனி நிறுவனர் டாக்டர். கிறிஸ்டோபர் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள், நிறுவன தலைவர்கள், ஏராளமான பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள், பல சாதனைகள் புரிந்த சமூக போராளிகள், நேசம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் பங்குபெற்றனர்.

டிசிஎன் மீடியா சார்பாக தொழில்நுட்ப துறை இயக்குனர் திரு. சாம் சாலமோன் பிரபு, ஆறுதல் எஃப்எம் இயக்குனர் திரு. கிருபன் யோசுவா ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நேசம் தொண்டு நிறுவனத்தலைவர் திரு. லியோ நெல்சன் மற்றும் அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் செய்திருந்தனர்.

பிரத்தியேக பேட்டி:

விருது பெற்ற திரு. பெவிஸ்டன் அவர்கள் டி.சி.என். மீடியாவிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது, “இவ்விருதுக்கு எவ்விதத்திலும் நான் தகுதியுடையவன் அல்ல. ஆயினும் இயேசு கிறிஸ்து நம்முடன் இருக்கிறார் என்பதேயே எனது தகுதியாக கருதுகிறேன். மேலும் இந்த விருது தனிநபருக்கான ஒரு விருது அல்ல. நமது ஊடகத்திற்கு கிடைத்த விருது. நமது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம். நமது குழுவினரின் மகத்தான மக்கள் பணியை நினைவு கூறுகிறேன். இணைந்து பணியாற்றும் பாஸ்டர். பால் சுரேஷ் (ஜெபம் & மக்கள் தொடர்பு), பாஸ்டர். இஸ்ரேல் வித்ய பிரகாஷ் (இலக்கிய இயக்குனர்), சகோ. சாம் சாலமோன் பிரபு (தொழில்நுட்ப துறை), பாஸ்டர். கிருபன் யோசுவா (ஆறுதல் எஃப்எம்) ஆகிய ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன். இத்தகையில் விழாவில் அங்கீகாரம் தந்த நேசம் அறக்கட்டளை நிர்வாகத்தாருக்கும், ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.” என பேட்டியில் பதிவு செய்துள்ளார்.

நிகழ்ச்சி சார்ந்த புகைப்படங்கள்:

News by: Mr. J. Israel Vidya Prakash
Literature Dept. TCN Media


Share this page with friends