Seven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்

Share this page with friends

இன்றைய காலம் மிகவும் இக்கட்டான ஒரு காலம், வாழ்வியல் நடைமுறைகள் மிகவும் கருகலாக இருக்கின்றது. உணர்ச்சிகள், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுத்தனம், வேலையின்மை, போன்று இன்னும் பல இக்கட்டில் போய் கொண்டு இருக்கும் போது வாலிபர்கள் எப்படி சுதாரித்து கொள்வது? How to cope with this situations?

1. எதற்கும் யாருக்கும் அடிமையாகாதிருங்கள். Don’t ever get your self addicted to anything.

Peer pleasure, status pleasures, beauty pleasures, drugs pleasures, honour pleasures etc போன்றவைகளில் அதிக நாட்டம் கொண்டு எதற்கும் அடிமையாகாதிருங்கள். ஏனெனில் நமக்கு எது தகுதி என்று பாருங்கள். நாம் கிறிஸ்துவில் நிறைவான சுதந்திரம் பெற்று இருக்கிறோம், அவைகள் கிறிஸ்துவின் அன்பை, பரிசுத்தத்தை, நீதியை, சமாதானத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம். எனவே அவைகளில் உங்கள் ஐக்கியத்தை வைத்து கொள்ளுங்கள்.

ஒரு like ககும் ஒரு share க்கும், ஒரு diary milk க் கும், ஒரு சிரிப்புக்கும், ஒரு கவிதைக்கும், ஒரு பாராட்டுக்கும், ஒரு டிரஸ்க்கும், ஏன் உங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டும். கிறிஸ்துவை பாருங்கள், அவரது அன்பில் பெருகுங்கள், அவரே நம்மில் பெருகுவாராக! அவரது சாயல் வளரட்டும். இனம்புரியாத உணர்வுகளுக்கு எல்லாம் அன்பு என்கிற பெயரில் அடிமைப்பட்டு அவன்/அவள், அது/அவைகள் இல்லா விட்டால் என்னால் வாழ முடியாது என்கிற கற்பனையை விட்டு வெளியே வாருங்கள். அவைகள் infatuation ஆக கூட இருக்கலாம். உங்கள் அன்பை I Cor 13 உடன் ஒப்பிட்டு பாருங்கள்.

2. Don’t ever try to expose your weaker sides but சுதாரித்து கொள்ளுங்கள்.

உங்கள் பெலவீனத்தை manipulate செய்ய விடாதிருங்கள்.

உங்கள் தவறை சுட்டி காட்டி பிறர் மிரட்டி பணிய விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் தவறுக்கு வருந்தி அதை உடனே சரி செய்யுங்கள். தவறை தவறு என்று ஒத்துகொள்ளுங்கள் ஆனால் அதை தொடர்ந்து செய்து என் பலவீனம் என்று மாட்டாதிருங்கள்.

அதற்காக நடிக்காதிருங்கள், உள்ளதை உள்ளது என்றும், இல்லாதது இல்லாதது போன்றே இருக்கட்டும். இவனை/ இவளை இதில் மயக்கலாம் என்று இடம் கொடுக்காதிருங்கள்.

தவறை உணர்ந்து விட்டு கொடுக்கலாம் ஆனால் சரி செய்யாத தவறை வைத்து சமரசம் செய்து விடாதீர்கள். Don’t compromise things without correcting yourself. ஒருவனும் உன் இளமையை குறித்து அசட்டை பண்ணாமல் பேச்சிலும், செயலிலும் மாதிரியாக இருக்க வேண்டும் என்று கற்பிக்க படுகிறோம்.

3. Neither blame anyone blindly nor trust anyone blindly. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதிருங்கள், அதே நேரத்தில் யாரையும் உங்கள் தவறுக்கு குற்றம்சாட்டி நியாயம் தேடாதிருங்கள்.

மனுஷனை, மனுஷ வார்த்தைகளை நம்பி மோசம் போய் விட்டு அதற்கு அந்த சுழல் மற்றும் எதிர் மனிதர்களை போக்கு சொல்லாதிருங்கள்.

கர்த்தரே நம்பிக்கைக்கு உரியவர். அவரை நம்பினோர் மோசம் போனது இல்லை.

வீண்புகள்ச்சிக்கு இடம் கொடுத்து, வீண் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து அது புளித்து போனால், அதற்கு பிறரை நொந்து கொள்ளாமல் அனுபவத்தில் கற்று கொண்டு, புத்தி அடையுங்கள். அம்மோன் தாமார் சரித்திரத்தை ஒருவிசை படியுங்கள்.

மனுஷ நம்பிக்கை, மனுஷ வாக்கு நிலையற்றது. தீடீர் என்று ஒரு தீர்மானத்திற்கு வராமல் make room for your decision.

4. அவசரப்பட்டு எந்த தீர்மானம் எடுக்காமல், நல்ல mentors மற்றும் அனுபவசசாலிகளிடும் விசாரியுங்கள். Don’t ever take hasty decision but consult with saints.

ஒரு காரியத்தை செய்யும் போது உள்பயம், சமாதானக்கேடு, யாருக்கும் தெரியாமல், மறைவிடத்தில் பிறர் காணாமல் செய்ய தூண்டபடுதல் போன்ற உணர்வுகள் இருந்தால் சுதாரித்து கொள்ளுங்கள்.

குடும்ப உறவுகள், சபை உறவுகளை, ஆவிகுறிய உறவுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட தூண்டுதல் வந்தால் கவனம் தேவை.

எடுக்கிற தீர்மானம் சரியா தப்பா என்றும் நன்றாக சிந்தனை பண்ணி, அதற்கு ஏற்ற பக்குவம், நேரம், காலம், சமயம் அமைய காத்து இருங்கள். இப்படிபட்ட நேரங்களில் உங்கள் ஜெபநேரம், வேத தியானம், சபை ஐக்கியம் அதிகமாகட்டும். அதை செய்ய மனதில்லாமல் எரிச்சல், கோபம், ஆவிக்குரிய காரியங்களில் வெறுப்பு, உறவுகளில் கசப்பு வைராக்கியம் வருகிறது என்றால் எங்கையோ மாட்ட போகிறீர்கள் என்று அறிந்து கொண்டு ஆவிக்குரிய counselling க்கு உங்களை விட்டு கொடுங்கள்.

5. உங்களை பற்றியும் உங்கள் surrounding பற்றியும் நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கர்த்தர் தந்த திறமைகள், அதினால் வரும் வாய்ப்புகள் போன்றவற்றை கண்டுபிடித்து திறமைகளை வளருங்கள். வாய்ப்புகளை உருவாக்குங்கள்.

உங்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது, உலகத்தில் என்ன நடக்கிறது என்று observe செய்யுங்கள். கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து உங்கள் வாழ்வியல் நோக்கம், வரங்கள் ஆகியவற்றில் உடன்பாடு கொள்ளுங்கள். காலத்தை பிரயோஜனம் செய்து, சரிசெய்ய வேண்டியவைகளை சரி செய்யுங்கள். வாழ்வில் உயர குறுகிய கால நீண்டகால திட்டம் போடுங்கள். Strength and weakness must be identified and plan accordingly. நல்ல ஒரு mentor யை தெரிந்து கொள்ளுங்கள்.

6. உங்களை நீங்கள் prove செய்யவேண்டும் என்று அதிக திறமைசாலி, மற்றும் perfect in action என்று project செய்யாதிருங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள். கவர்ச்சிக்கு இழுக்கப்பட்டு இன்னொருவர் போல ஆக முயற்ச்சி செய்யாதிருங்கள். தாவீதுக்கு சவுலின் வஸ்திரம் ஒத்து போக வில்லையே!

அந்தரங்க வாழ்விலும், பொது வாழ்விலும் தூய்மையை கடைபிடியுங்கள். யாரும் காணாத நேரத்தில் எப்படியும் நடந்து பொது இடத்தில் நல்லவர்கள் போல build up செய்யாத படி பாருங்கள். உங்கள் உண்மையான சுபாவம் நீங்கள் அந்தரங்கத்தில் எப்படி செயல்படுகிரீர்களோ அப்படியே இருக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தால் பொது இடத்தில் நீங்கள் செய்யும் எந்த காரியமும் ஒரு வேசமே!

புகழ்ச்சிக்கு பாராட்டுக்கு வேண்டி வாழாமல் நீங்கள் நீங்களாக இருந்து பிறர் புகழ வாழ கற்றுக்கொள்ளுங்கள். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அவமானங்கள் பறியாசங்கள், தோல்விகள், குறைவுகள், நிந்தைக் கள் போன்றவற்றில் எப்படி வாழ்வது, பொறுத்து சகிப்பது போன்றவற்றை சிலுவையை நோக்கி கற்று கொள்ளுங்கள். நாம் இன்னும் இந்த மாம்ச சரீரத்தில், உலகத்தில் தான் வாழ்கிறோம் என்பதை மறந்து விட வேண்டாம்.

அந்தரங்க ஒழுக்கம், கற்பு தான் உங்களுக்குரியவருக்கு நீங்கள் கொடுக்கும் திருமண பரிசு என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். உணர்ச்சிகளை கிளப்பி தொட்டு பேசும் நபர்கள், காட்சிகள், சூழல்கள் மற்றும் சந்தர்ப்பங்களை தவிர்த்து நீங்கள் கர்த்தரின் பிள்ளைகள், நித்திய ராஜியத்திர்க்கு உரியவர்கள் என்று மனதில் கொள்ளுங்கள்.

7. கடைசியாக இருக்கிற சூழல்களில் உங்கள் பாதுகாப்பை உறுதி படுத்தி சந்தோசமாக வாழுங்கள். Increase your safety measures.

கர்த்தர் தந்த குடும்பம், சபை, பெற்றோர், நல்ல நண்பர்கள் மற்றும் நன்மை போன்றவற்றில் திருப்திப் பட்டு கொள்ளுங்கள், அதற்காக நன்றி உள்ளவர்களாக இருங்கள்.இதை/ இவர்களை விட பாதுகாப்பு வேறு எங்கும் இல்லை. முன் பின் தெரியாத நபர்கள், சூழ்நிலைகள் விட்டு விலகி இருப்போம்.

மனம்விட்டு பேசுங்கள். பெற்றோர் மற்றும் உங்கள் ஆவிகுரிய போதகர்களிடம் புரியாதவைகள், எதிர்மறையான, அசவுகரியமான சம்பவங்கள் நடந்தால் உடனே தெரிவித்து சரி செய்யுங்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என்று பாராதேயுங்கள். பிறர் நினைப்புக்கு எல்லாம் வேலி கட்ட முடியாதே. Safety app மற்றும் டெக்னாலஜியை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களோடு பழக துடிக்கும் அந்த ஒருவரை பற்றி அவரது நோக்கம், குடும்பம், செயல் போன்றவற்றை தரமாக analysis செய்யுங்கள்.

கர்த்தருக்கு அடுத்த காரியங்கள் மற்றும் ஊழிய காரியங்கள், நற்கிரியை செய்தல் போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். உங்கள் காலத்தையும் நேரத்தையும் அறிந்து, வாழ்வது ஒரே ஒரே வாழ்வு அவரை சந்திக்க ஆயத்தம் வேண்டும் என்கிற அதிக ஜாக்கிரதையோடே வாழுங்கள். ஏனெனில் அவரது கையில் தராசு இருக்கிறது. நிறை குறை எல்லாம் அவரே வாழ்வில் வெளிப்படுத்தி நம்மை நடத்துவார் என்று அறிந்து அவரில் அடங்கி இருந்தால் ஏற்ற காலத்தில் உயர்த்துவார். இந்த வாலிபத்தில் எதை செய்கிறோமோ அதை தான் குடும்ப வாழ்விலும் எஞ்சிய வாழ்விலும் அறுவடை செய்வோம் என்பதை அறிந்து, கர்த்தரை அதிகமாக நினைத்து, அவருக்கு பயந்து, எல்லாவற்றையும் நியாயத்தில் நிறுத்துவார் என்கிற உணர்வோடு வாழ்ந்து அவரை வெளிப்படுத்துவோம். ஏனெனில் அவர் வருகிறார்.

செலின்


Share this page with friends