ஆட்டுத்தோல் !
ஆட்டுத்தோல்!
ஆட்டின் தோலை பதனிட்டு அதற்கு சாயம் தோய்த்து பயன்படுத்துகிறார்கள்.
மேய்ப்பர்கள் ஆட்டுத்தோலை தங்களுடைய வஸ்திரங்களாக பயன்படுத்தினார்கள். ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளே மூடுவதற்கு சாயம் தீர்க்கப்பட்ட ஆட்டுத்தோல் பயன்படுத்தப்பட்டது. ஆனால், “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” (மத் 7:15) என்ற கிறிஸ்து இயேசுவின் எச்சரிப்பு மிகவும் கவனிக்கத்தக்கது.
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள், பார்க்க ஆடு போலத் தெரியும், ஆனால், அவை பட்சிக்கிற ஓநாய்கள்! வேதவார்த்தைகளால் உண்டாகும் ஆவிக்குரிய ஞானம் மட்டுமே அவர்களை அடையாளம் காட்டும்! துதியின் ஆடைகளும், இரட்சிப்பின் வஸ்திரங்களும் அணிந்த ஆடுகளுக்குள்ளே, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் உலாவுகின்றன… ஜாக்கிரதையாய் இருப்போம்…! ஆமென்!