வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள்

Share this page with friends

வஞ்சனை அல்லது வஞ்சகத்தின் அடையாளங்கள்

ஒருவர் சத்தியத்தில் இருந்து விலகி வஞ்சிக்கப்படுகிறார் என்பதை எப்படி கண்டுப் பிடிப்பது? வஞ்சிக்கப் படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

  1. தன்னை ஒரு பொருட்டாக எண்ணி, தாம் மற்றவர்களை விட விசேசமானவன் என்று கருதி தன்னுடைய அழைப்பு பெரியது என்றும், யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்து இருக்கிறது என்று தன்னை தனது அழைப்பை மட்டும் மேன்மைப் படுத்தி கொண்டே இருப்பார்கள். இவர்கள் கர்த்தருக்கு கொடுக்கும் மகிமையை தங்கள் புகழ் மற்றும் பெருமைக்காக பயன்படுத்துவார்கள்.
  2. தரிசனம், சொப்பனம், வெளிப்பாடு, அற்புத அடையாழங்கள் போன்ற supernatural காரியங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார்கள். இவ்விதமான காரியங்கள் கொண்டு, கர்த்தருடைய சபை, பரிசுத்தவான்கள் ஐக்கியம் மற்றும் கர்த்தருடைய ராஜியத்திர்க்கு நேராக ஜனங்களை திருப்பி விடாமல் தங்கள் சுயம் மற்றும் தங்கள் அமைப்பிற்கு நேராக திசை திருப்பி விடுவார்கள்.
  3. வேதவசனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி out of context இல் வியாக்கியானம் செய்து, தனக்கு தேவையானதை மட்டும் selected reading செய்து, தனக்கு பிரியமில்லாதை வாசிக்காமல் விட்டு விட்டு தவறாக misreading செய்து பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி புதிய செய்தி கொடுக்கிறேன் என்று நூதன உபதேசம் செய்வார்கள். வேதத்தின் ஆழத்தில் போய் முத்து எடுக்கிறேன் என்று சொல்லி, ஏடாகூடமாக ஏதாவது சொல்லி சத்தியத்தை புரட்டி கொண்டே இருப்பார்.
  4. தனக்கு பிடித்த ஒரே ஒரு உபதேசத்தையே அல்லது அனுபவத்தையே, திரும்ப திரும்ப வலியுறுத்தி அதிலே சுற்றி சுற்றி வருவார்கள். மற்ற ஆவிக்குரிய சத்தியங்களை உதாசீனம் செய்வார்கள். கடிந்து கொள்ளுதல், பாடுபடிதல் போன்றவற்றை வெருப்பார்கள். எப்போதும் தங்களை பிறர் பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள்.
  5. இவர்கள் யாருடைய தலமையத்துவத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேவனே என்னோடு பேசுவார். அவரே என்னை போதித்து நடத்துவார் என்றும் constructive criticism த்தை யாராவது அன்புகூர்ந்து சொன்னால், எனக்கு தெரியும், நான் பார்த்துக் கொள்வேன் என்று விதன்டாவாதம் செய்வார்கள். தான் பிடித்து இருக்கும் முயலுக்கு மூன்று கால் என்றே கடைசி வரை சாதிப்பார்கள். கற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவராக இருப்பார்கள்.
  6. வரங்களுக்கு, திறமைகளுக்கு, status க்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆவிக்குரிய கனிகளுக்கு கொடுக்க மாட்டார்கள். தனது வாதத்தில் வெற்றியடைய உணர்ச்சி வசப்பட்டு கடித்து குதறப் பார்ப்பார்கள். அப்படி யாராவது கண்டித்தால் தன் விசுவாசத்திர்க்காக பாடு படுகிறேன் என்பார்கள்.
  7. தனது பாவத்தை பலவீனம் என்றும் பிறரது பாவத்தை பாவம் என்று வாதிட்டு , பிறரை ஆக்கினைக்கு உட்படுத்தி பேசி கொண்டே இருப்பார்கள். எப்போதும் மூன்றாம் வானத்திலே இருந்து கொண்டு இருப்பார்கள். பிறரது அந்தரங்க காரியங்களில் தேவைக்கு மிஞ்சி தலையிடுவார்கள். சபை தவறு என்றும், போதகர்கள் தவறு என்றும் பிறரை தவறாக சித்தரித்து, தங்களை மேய்த்துக் கொள்ள பிரிவினையை ஏற்படுத்தி தங்கள் காரியங்களை சாதிப்பார்கள்.

இவ்விதமாக தனக்கு அடுத்த தான் விரும்பும் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தேவ காரியங்களான இரட்ச்சிப்பு, கிறிஸ்துவின் அன்பு, பரலோகராஜியம், நித்திய ஜீவன், மரணிக்க வேண்டியதின் அவசியம், சிலுவை, சபை, பக்திவிருத்தி, சுவிசேஷ ஊழியம், மிஷனரி தரிசனம், கர்த்தருடைய வருகை etc போன்ற காரியங்களை உதாசீனம் செய்து கடைசியில் தான் வஞ்சிக்கப் பட்டதையே அறியாமல் தன் வாழ்வின் கிடைக்கும் சிலாக்கியம், ஆசீர்வாதம், காரிய சமர்த்தி, பாராட்டு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, தேவன் எங்களோடு இருக்கிறார் என்கிற ஒரு நப்பாசையில் தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டு பின்னர் மரணித்தும் விடுகின்றனர். இவர்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செலின்


Share this page with friends