ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (வித்யா’வின் பார்வை)

Share this page with friends

பர்யேசு என்னும் பேர்கொண்ட மாய வித்தைக்காரன் (Jewish Sorcerer)

பர்னபாவும் பவுலும்
பாப்போ பட்டணம் வரைக்கும்
தீவை கடந்துவந்தபோது,
பர்யேசு என்னும் பேர்கொண்ட
மாய வித்தைக்காரனும் (Jewish Sorcerer)
கள்ளத் தீர்க்கதரிசியுமான
ஒரு யூதனைக் கண்டார்கள்
(அப்போஸ்தலர் 13:6).

அந்த மாயவித்தைக்காரன்,
விவேகமுள்ள மனுஷனாகிய
செர்கியுபவுல்
என்னும்
அதிபதியுடனேகூட இருந்தான் 

மாயவித்தைக்காரனின் பெயர் பர்யேசு
பர்யேசுவுக்குள், இயேசு இல்லை.

செர்கியுபவுலுக்குள், பவுலுக்குள்
இருந்த இயேசுவின் வார்த்தையைக்
கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.

விவேகமுள்ள மனுஷனாகிய
செர்கியுபவுல் (An Intelligent Man)
ஓர் அதிபதி

அறிவாளிகளை வைத்து,
உளவாளிகளின் பிழைப்பு நடக்கிறது

அந்த அதிபதியின் பெயரைப்
பயன்படுத்தி ஊரெங்கும் ஓர் அதிமிதி

அதிபதி முன் தன்
மாயவித்தைகளைக் காட்டி
அவரது உள்ளத்தைக்
கொள்ளைகொண்டுவிட்டான்.

அதிபதியின் ஆசை
பர்னபாவையும் பவுலையும்
அழைப்பித்து அவர்களிடத்தில்
தேவ வசனத்தைக் கேட்க
ஆசையாயிருந்தான்

(அப்போஸ்தலர் 13:7).

அதிபதியின் ஆசையைப்
பாராட்ட வேண்டும்

இன்றைக்கு ஆண்(ட்)டி முதல்
அரசன்வரை
ஆசைக்குப் பஞ்சமே இல்லை

ஆனால் தேவ வசனத்தைக்
கேட்க வேண்டும்,  BIBLE STUDY க்குப்
போகவேண்டும், இன்னும் வேதத்தை
ஆழமாக வாசிக்கவேண்டும்,
உள்ளும் புறம்பும் சென்று
மேய்ச்சலைக் காணவேண்டும்,

கட்டுக்கதைகளுக்கு
செவியை விலக்கி சத்தியத்திற்கு
செவியைச் சாய்க்கவேண்டும் என்ற
ஆசைக்கும் எண்ணங்களுக்குந்தான்
பஞ்சம் வந்துவிட்டது.

தேசத்தில் குடியிருந்து
சத்தியத்தை மேய்ந்துகொள்
(சங்கீதம் 37:3) என்று வேதம் கூறுகிறது.

பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த
மனிதர்களின் ஆசையைப் பாருங்கள்:

லோத்து பற்றிக்கொண்டது மண்
சிம்சோன் பற்றிக்கொண்டது பெண்
ஆகான் பற்றிக்கொண்டது பொன்

இந்த மூன்றுபேரும்
அடைந்தது வெற்றியல்ல,
தோல்வியே என்பதற்கு வேதமே சாட்சி.  

கண்டதே காட்சி,
கொண்டதே கோலம் என்று
கண்களை திருப்திப்படுத்தி,
மனதை வெள்ளாடுபோல
அலையவிட்டு
உள்ளத்தையும்
உணர்வுகளையும் உசுப்பிவிட்டு,

காண்கிறதை எல்லாம்
அடைந்துவிடவேண்டும் என்று
துடிப்பவர்களுக்கு
மிஞ்சுவது வெட்கமும் அதற்குப்
பக்கத்திலிருக்கிற துக்கமுமே.


இது தினந்தோறும்
தினத்தந்தி தரும் துயரச்செய்தி.

மண்ணாசை,
பெண்ணாசை,
பொன்னாசை,

என்று 3 G-ஐ நோக்கி
ஓடுபவர்களுக்கு
தோல்வியும் துயரமும்
நிழல்போல தொடர்கிறது    

அது என்ன 3 G என்றுதானே
கேட்கிறீர்கள்?
GIRL | GOLD | GLORY|
பெண், பொன், மகிமை

பவுலைக் குறித்துக்
கேள்விப்பட்டவுடன்
செர்கியுபவுலுக்கு ஓர் பாசம் 

உங்களது பெயரை உடைய
நபரைப் பார்த்தால்
ஓர் இனம்புரியாத பாசம் வருகிறதே!
அதுபோலத்தான்.

பவுலை அழைப்பித்து
தேவ வசனத்தைக் கேட்கவேண்டும்
என்ற ஆவல் அவனுக்குள் உண்டானது.

இந்த அதிபதி வசனத்தைக் கேட்டு
ஒப்புக்கொடுத்துவிட்டால்,
கர்த்தரைச் சார்ந்துவிட்டால்,
நமது பிழைப்புக்கு ஆபத்து
மூடத்தனத்திற்கு மூலதனம்
கிடைக்காது என்று அறிந்த
அந்த மாயவித்தைக்காரன்
அடுத்தகட்ட நடவடிக்கைகளில்
இறங்கினான்

அந்த வித்தைக்காரனின் சூழ்ச்சி என்ன?
என்பதை அடுத்தப் பதிவில் பதிவிடுகிறேன்.

அதுவரை இதுவரை
வாசித்த வார்த்தைகளைக் கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்

உங்கள் விசுவாசத்திற்கு
அதிகாரியாய் அல்ல .
உங்கள் சந்தோஷத்திற்கு
சகாயராய் இருக்க விரும்புகிறேன்


வாழும்போதே வாசிக்க நேரமெடுங்கள்
வாழ்ந்திருக்கச்செய்வார்


விசுவாச வாசகர்களே,
உங்களை வாழ்த்துகிறேன்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்,
ஐயர்பங்களா, மதுரை -14


Share this page with friends