சிறு தியானம்

Share this page with friends

“எப்பிராயீம் திருப்பிப் போடாத அப்பம்” (ஓசியா 7:8)

ஒருபுறம் மட்டுமே வெந்த அப்பமாய் தன் ஜனங்கள் காணப்படுவதாக தேவன் மிகுந்த வேதனையோடு கூறுகிறார்.

இருபுறம் சரியாக சுடப்படாத அப்பத்தினால் யாருக்கு பயன் உண்டாகும்?

சுடப்பட்ட அப்பத்தினால் ஜெயம் வந்திடும் என்பதை கர்த்தர் கிதியோனுக்கு காண்பித்தை நாம் மறக்கக் கூடுமோ? (நியா 7:13)

திருப்பிப் போடப்படாத அப்பமாகக் காணப்படுவோரின் அடையாளங்கள் இதோ சில.

1.தங்கள் வாழ்வில் தேவனுடைய ஆவிக்கும் இடம் தருவார்கள், மாமிச இச்சைகளுக்கும் இடம் தருவார்கள். (நியா 13:25, 16:4)

2.கர்த்தரையும் சேவிப்பார்கள், பாகாலையும் சேவிப்பார்கள். இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பார்கள். (1இராஜ 18:21)

3.தேவனுக்கும், பணத்திற்கும் பணி செய்வார்கள். (2இராஜ 5:20)

4.கர்த்தருக்காக மாபெரும் காரியங்களை நடப்பித்தாலும்,
சில பாவங்களை விடாதிருப்பார்கள். (2இராஜ 10:28,29)

5.தேவனை அறிந்துள்ளோம் என்று சொல்லுவார்கள். தங்கள் கிரியைகளில் தேவனை மறுதலிப்பார்கள். (தீத்து 1:16)
ஒளியோடும், இருளோடும் ஐக்கியம் கொள்ள ஆசைப்படுவார்கள். (2கொரி 6:14)
தேவனுக்கும் உலகத்திற்கும் சிநேகிதராய் இருந்திட விரும்புவார்கள். (யாக் 4:4, 2இராஜ 17:33)

நமது நிலை என்ன?
சிந்திப்போம்….

தேவனுடைய பார்வையில்
எப்பிராயீம் எவ்வாறு காணப்பட்டது?

1.எப்பிராயீம் விக்கிரங்களோடு இணைந்திருக்கிறான். (ஓசியா 4:17)

2.எப்பிராயீம் ஒழிந்துப் போகிற பக்தியை உடையவன். (ஓசியா 6:4)

3.எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன். (ஓசியா 7:11)

ஆனாலும் எப்பிராயீமில் மகிமையான மாற்றம் வந்திடும் என தேவாதி தேவன்
வாக்குப் பண்ணியுள்ளார். அதை தேவன் நிறைவேற்றுவார். (ஓசியா 14:8)

“எப்படியும் தேவன் தமது சபையை உயிர்ப்பித்தே அழைப்பார்”.

Pas. Reegan Gomez
பாஸ்டர். ரீகன் கோமஸ்

மக்கள் அதிகம் வாசித்தவை:

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு
நல்லிணக்கத்தை போதிக்கும் நன்னாள் - தமிழக ஆளுநர், முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
பிலிப்பிய சபையின் ஸ்தானதிபதியான எப்பாப்பிரோதீத்து.
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
Following must be reconsidered
இயேசுவே நமது ஜீவன்
ஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் - போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
ஓராண்டு வாசிப்பு தமிழ் வேதாகமத்திலிருக்கும் சிறப்பு என்ன?
சபைப் போதகர்களை , இன்றய சபைகளை விமர்சிக்க கூடாதா? கேள்வி கேட்க கூடாதா?
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக ...

Share this page with friends