சிறு தியானம்

Share this page with friends

“நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து” (சங் 95:10).

இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருடங்களாக தேவனுக்கு வெறுப்பூட்டினார்களாம்…

கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு கூட இருந்ததினால், ஒன்றும் குறைவுபடாமல், வனாந்திர வழியாய் அற்புதமாய் தேவனால் நடத்தப்பட்டார்கள் 40 வருடங்கள். (உபா 2:7).

தேவனால் அதிசயமாக
பாதுகாக்கப்பட்டார்கள்,
பராமரிக்கப்பட்டார்கள்
40 வருடங்கள்.
(நெகே 9:19-23).

ஆனால் நாற்பது ஆண்டுகளில் ஒரு சில நாட்கள் கூட, தேவனை பிரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இஸ்ரவேல் ஜனங்களிடம் காணப்படவே இல்லை. தங்களின் தேவைகளை பெற்றுக் கொள்வதில் மாத்திரமே அவர்களின் கவனமிருந்ததே தவிர, தேவனைக் குறித்து அல்ல.

நன்மைகளை அனுபவித்தார்கள், தேவன் அவர்கள் மீது வைத்த பிரியத்தினால் அல்ல, அவருடைய அன்பு என்றும் மாறாதது என்பதினாலேயே கொடுத்தார் கொடுத்தார் கொடுத்துக் கொண்டே இருந்தார்.. நாற்பது வருடங்களில் ஒரு சில நாட்கள் கூட தேவனுக்கு நன்றி சொல்லி கூட அவரைப் பிரியப்படுத்தவுமில்லை, தேவனுக்கு கீழ்ப்படியவுமில்லை இந்த ஜனங்கள்.

நமது வாழ்வும் எப்படி காணப்படுகிறது?

தேவனை பிரியப்படுத்துவோரை எப்படி அடையாளங்காணுவது?

“அவர் தமது வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்” (சங் 103:7)

தேவனைப் பிரியப்படுத்துவோர்
“தேவனை” அறிந்துக் கொள்ளுவார்கள்.
தேவன் தன்னை அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார்.

ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்தோ,
“என்னுடைய வழிகளை” அறியாதவர்கள் என்று சொன்னார் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை. (1கொரி 10:5)

இவ்வாறாக நம்மைக் குறித்து தேவன் சொல்லிவிடாதபடி,
தேவனையே பிரியப்படுத்த
அவரையே நாடுவோம், தேடுவோம்..
தேவனை அறிந்து கொள்வோம்… (2கொரி 5:9).

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. (புலம் 3:22)

Pastor. Reegan Gomez
பாஸ்டர். ரீகன் கோமஸ்


Share this page with friends