இப்படியும் அப்படியும்! வித்யா’வின் பார்வை

இப்படியும் சிலர்
அப்படியுமாகப்
பேசினார்களாம்!
(அப்.19:32)
இப்படிப் பேசுகிறவர்களை
எந்தக் கணக்கில்
சேர்ப்பீர்கள்?
இவர்கள்
காரியம் அறியாத,
அதோடு
முடிவு எடுக்கத்தெரியாத
மூடர்கள்
என்று சொன்னால்கூட
வழக்கு தொடுக்க
யாருமில்லை
இவர்கள்,
தங்களுக்குத்
தெரியாதவைகளைத்
தூஷிக்கிறவர்கள்
புத்தியில்லாத
மிருகங்களைப்போல
சுபாவப்படி தங்களுக்குத்
தெரிந்திருக்கிறவைகளாலே
தங்களைக்
கெடுத்துக்கொள்ளுகிறவர்கள்
இவர்கள்
காற்றுகளால்
அடியுண்டோடுகிற
தண்ணீரற்ற மேகங்களும்,
இலையுதிர்ந்து கனியற்று
இரண்டுதரஞ் செத்து
வேரற்றுப் போன
மரங்களுமாயிருக்கிறார்கள்
தங்கள் அவமானங்களை
(வாய் வழியாக) நுரைதள்ளுகிற
அமளியான கடலலைகளும்,
மார்க்கந்த்தப்பி அலைகிற
நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்;
இவர்களுக்காக
என்றென்றைக்கும்
காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
கூட்டத்தோடு
கோஷம் போடுகிற
இவர்கள்
முறுமுறுக்கிறவர்களும்,
முறையிடுகிறவர்களும்,
தங்கள் இச்சைகளின்படி
நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்;
இவர்களுடைய வாய்
இறுமாப்பானவைகளைப்பேசும்;
தற்பொழிவுக்காக
Praise the Lord என்று சொல்லி
முகஸ்துதி செய்வார்கள்.
நீங்களோ பிரியமானவர்களே,
உங்கள் மகா பரிசுத்தமான
விசுவாசத்தின்மேல் உங்களை
உறுதிப்படுத்திக்கொண்டு,
இன்று வெள்ளிக்கிழமை காலை
உங்கள் சபையின்
உபவாச ஜெபத்தில்
கலந்துகொண்டு,
பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
தேவனுடைய அன்பிலே
உங்களைக் காத்துக்கொண்டு,
நித்திய ஜீவனுக்கேதுவாக
நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவினுடைய
இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்
(யூதா 10 – 21)
இன்றைய வேத வாசிப்பில்
கிடைத்த வார்த்தைகள்
இரை எடுக்குமுன்
இறை வார்த்தையை
எடுத்துக்கொள்ளுங்கள்
சுகமாய் இருப்பீர்களாக

பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
ஐயர் பங்களா, மதுரை 14