தேவனோடு ஐக்கியத்திலுள்ள நல்ல தலைவனின் சில அடையாளங்கள்

Share this page with friends

சிறு தியானம்

தேவனோடு ஐக்கியத்திலுள்ள நல்ல தலைவனின் சில அடையாளங்கள்….

1.தேவனைப் பிரியப்படுத்துவதே அவனுடைய பிரதான நோக்கமாய் இருக்கும். தேவ சித்தமே அவனது போஜனமாயிருக்கும். (சங் 143:10, 40:8, கலா 1:10, யோவ 8:29, 4:34)

2.தேவனுடைய பிரசன்னம் அதாவது ஜெப வாழ்வு அவனுடைய ஜீவனாக இருக்கும்.
ஆசீர்வாதங்களை விட ஆண்டவரின் பிரசன்னமே அவனது வாஞ்சையாக இருக்கும்.
(சங் 27:4, தானி 6:10, லூக் 6:12, யாத் 33:15)

3.தேவனுடைய சத்தம் கேட்குதல் என்னும் பாடசாலையில், முதிர்வயதானாலும்
கற்றுக் கொண்டே இருப்பான். வேதமே அவனது ஜீவசுவாசமாயிருக்கும். (ஏசா 50:4, உபா 33:3, யோவ 12:49,50)

4.தேவனுடைய வல்லமையை தன்னுடைய சுய லாபத்திற்காகவோ தன்னுடைய பிரஸ்தாபத்திற்காகவோ ஒருபோதும் பயன்படுத்த மாட்டான். ஆவியானவருக்கு கீழ்ப்படிந்திருப்பான். (லூக் 4:3, மத் 26:53,54, மாற் 15:29-32)

5.தன்னுடைய விருப்பமான ஜெபத்திற்கு பதில் மறுக்கப்பட்டாலும், தேவனுடைய சித்தத்தை
நிறைவேற்றுவதில் மிகவும் உறுதியாக இருப்பான். (உபா 3:25,26, லூக் 22:41,42)

6.நற்சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கையை உடையவனாக இருப்பான்.
(யோசு 24:15, ஏசா 8:18, தீத்து 1:6, 1தீமோ 3:5)

7.நல்ல சுபாவங்களை உடையவனாகவும், நல்லவைகளுக்கு முன்மாதிரியாகவும் இருப்பான்.
(தீத்து 1:7-9, 2:7,8, பிலி 4:8,9, யோவ 13:14,15,கலா 5:22,23)

8.தேவன் தன்னை நம்பிக் கொடுத்த ஊழியத்தை, தன்னுடைய ஜீவனிலும் மேலாக எண்ணிடுவான். ஆத்தும ஆதாயமே அவனுடைய எதிர்பார்ப்பு. (அப் 20:23,24, 21:13, 1கொரி 9:19,23)

9.பலருக்கு போதித்திடும் கிருபை பெற்றிருந்தாலும், தனக்குத்தானே போதித்துக் கொள்ள அவன் தவறிடமாட்டான். (1கொரி 9:27)

10.நித்தியமே அவனது நிரந்தர மகிழ்ச்சியாக எதிர்பார்த்திருப்பான். (பிலி 3:20, 1தெச 4:16,17)

-RRG


Share this page with friends