church live streaming guide

சமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்

Share this page with friends

சமூக வலைதளங்களில் நேரலையில் பேசும் போதகர்கள் ஒவ்வொருவரும் கீழ்கண்ட காரியங்களை பொறுமையோடு வாசித்து அறியுங்கள். இவைகள் உங்களை மிக சிறந்த நேரலை பேச்சாளராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

1) ஒழுங்குசெய்யப்பட்ட நேரலை நிகழ்வு எந்த வகை கூட்டத்தை மையப்படுத்தியுள்ளது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் நேரலை நிகழ்வு கீழ்கண்டவைகளில் எந்த பிரிவை சார்ந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.. அவர்களை மட்டுமே மனதில் முன்னிருத்தி பேசுங்கள்.

  • சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
  • வாலிபர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
  • தன் சபை மக்களுக்கான ஞாயிறு ஆராதனை
  • சிறப்பு வேதபாட வகுப்புகள்
  • பாடல் ஆராதனை நிகழ்வுகள்
  • இரட்சிக்கப்பட்வர்களுக்கான போதனைகள்
  • இரட்சிக்கப்படாதவர்களுக்கான ஆலோசனைகள்

2) நீங்கள் எந்த வகை மக்களுக்கு பேச திட்டமிட்டுள்ளீர்களோ அந்த வகை மக்கள் புரிந்துகொள்ளும் மொழிநடையில் பேசுங்கள். உதாரணத்திற்கு இரட்சிப்பு, அபிஷேகம் என்னும் பதங்கள் இரட்சிக்கப்படாதவர்களுக்கு, சிறுவர்களுக்கு புரியாது. அப்படியானால் இந்த வார்த்தைகளை எளிமைபடுத்தி அவர்கள் புரியும்படி பேச வேண்டும்.


2) நேரலையில் பேசும் போது உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். கவன குறைவாக எதையாவது பேசிவிடும் பட்சத்தில் மிக பெரிய விளைவை சந்திக்க நேரிடும். உடனடியாக பிரட்சனை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு கூட நீங்கள் பேசிய அந்த வார்த்தைகள் பிரட்சனையை ஏற்படுத்த கூடும். ஆகவே உங்கள் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவேளை நான் கட்டுப்பாட்டை மீறி பேசிவிடுவேன் என்ற தயக்கம் இருக்குமானால் நேரலையில் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். அல்லது வீடியோ பதிவு செய்து அவைகளில் தேவையற்றவைகளை நீக்கிய பின் ஔிபரப்பு செய்யலாம்.


3) மக்கள் கூட்டத்திற்கு முன்பு பேசுவது எளிது. ஆனால் ஆளில்லா அறையில் கேமரா முன்பு பேசுவதில் சிறிது தயக்கம் சிலருக்கு ஏற்படலாம். நீங்கள் கேமரா வழியாக திரள் கூட்ட மக்களை காணுங்கள். பேசுவது சுலபமாகிவிடும்.


4) நேரலையை துவங்கும் முன்னதாகவே சகல ஆயத்தங்களையும் நேர்த்தியாக செய்துவைத்துக்கொள்ளுங்கள். (பாடல் புத்தகம், வேதாகமம், அறிவிப்பு மற்றும் பிரசங்க டைரிகள்) நேரலை நேரத்தில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருப்பது நாகரீகமாக இருக்காது.


5) நேரலை நேரத்தில் அநாகரீகமான செயல்களை செய்ய வேண்டாம். கர்ச்சிப் பயன்படுத்துங்கள். உடல் நடை உடை பாவணை நேர்த்தியாக இருக்கட்டும்


6) நேரலை படபிடிப்பில் பங்குபெறும் முன்பாகவே ஸ்டூடியோ செட்டப் எப்படி உள்ளது என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். ஒருவேளை பச்சை நிற அல்லது நீல நிற திரைக்கு முன் நீங்கள் நிற்க வேண்டியது இருப்பின் உங்கள் ஆடைகளில் பச்சை அல்லது நீல நிறம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


7) நேரடி ஔிபரப்பில் அடுத்தடுத்து வருபவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவரையும் இவரையும் அழைப்பது நாகரீகமல்ல.


8) நேரலையில் பேசுபவர்கள் பேச்சுப்போட்டியில் பேசுவதுபோல பேசாமல் மக்களோடு பேசுகிறோம் என்ற உணர்வில் பேச வேண்டும். சற்று சிரமம் இருப்பினும் நகைச்சுவை உணர்வோடு, உதாரண கதைகளோடு சத்தியத்தை விளக்க வேண்டும். அவ்வப்போது அவர்களை உற்றாகப்படுத்துவதும் அவசியமானது.


9) எந்தந்த தளங்களில் ஔிபரப்பு செய்யப்படுகிறது (யுடியூப், முகநூல், டிவி, வானொலி) என்பதை அறிந்து அதை அவ்வப்போது நினைப்பூட்ட மறக்க வேண்டாம். உதாரணத்திற்கு சத்தியம் டிவியில் இந்த ஆராதனையை பார்த்துக்கொண்டிருக்கும் அனைவரையும் வாழ்த்துகிறோம். ஆறுதல் வானொலியின் மூலமாக இந்த சத்தத்தை கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு கூறும் போது அந்தந்த தலங்களில் காண்பவர்கள் அங்கிகரிக்கப்பட்ட தலத்தில் தான் காண்கிறோம் என்ற மனநிலைக்கும் போதகர் நம்மையும் நேசிக்கிறார் என்ற உணர்வையும் கொடுக்கும்.


10) நேரலையை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் தங்கள் சாட்சிகளை, கருத்துக்களை உங்களுக்கு தெரியப்படுத்த வழிவகை செய்திருக்க வேண்டும். தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொள்வது மூலமாகவோ, வாட்சாப் வாயிலாகவோ, யுடியூப், பேஸ்புக் தலங்களில் கமாண்ட்ஸ் பாக்ஸில் எழுதுவது மூலமாகவோ அவர்கள் தங்கள் அனுபவங்களை கருத்துக்களை பதிவிட அனுமதி கொடுங்கள். அவைகளுக்கு முடிந்த வரை பதிலளியுங்கள். உங்களது பதில் அவர்கள் உற்றாகத்தோடு அடுத்தடுத்த வீடியோக்களுக்கு கருததுக்களை எழுத தூண்ட வேண்டும்.


11) நேரலை தொடர்பான புகார்களை பதிவு செய்ய இடம் கொடுங்கள். அல்லது ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து அதற்கு புகார்களை பதிவு செய்ய கூறலாம். ஆடியோ வீடியோ தெளிவாக செல்கின்றதா என்பதை அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


12) நேரலை நேரத்தில் உங்களது தொலைபேசியினை மேடையில் அல்லது உங்கள் பக்கத்தில் வைத்திருக்க வேண்டாம். இடையில் அழைப்பு வருவது உங்கள் மைக் மூலம் விசில் சத்த்தை எழுப்ப கூடும். நேரலை அழைப்புகளில் தொடர்புகொள்ள போதகரின் மனைவியை, உடன் ஊழியர்களை நியமிக்கலாம்.


13) நேரலையில் பேசும் போது ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நேரத்தை கையாளுங்கள். நேரம் மிக முக்கியமானது. கை கடிகாரம் பயன்படுத்திகொள்வது நல்லது. மக்களுக்கு முன்பாக பேசும் போதே தேவவார்த்தையின் மீது அவர்கள் மனதை ஒருமுகப்படுத்த சிரமப்படும் நிலையில் நேரலை ஆராதனையை எந்த மனநிலையில் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதை நாம் அறியோம். சரியான நேரத்திற்கு முடிக்காவிட்டால் அவர்கள் நேரலையை நிடையில் நிறுத்தி விட்டு செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.


14) நேரலையில் நீங்கள் கேள்விபட்ட புள்ளிவிபரங்களை, சம்பவங்களை உதாரணங்களாக கூற வேண்டாம். தகுந்த ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் பின்நாட்களில் பிரட்சனை உருவாகலாம்.


15) நேரலையில் பேசும் போது பதிவு செய்யப்படும் நாள், நேரம், இடம், கருப்பொருள் ஆகியவற்றை குறிப்பிடுவது நல்லது. இன்றைய சூழ்நிலைக்கு சாதகமாக கையாளும் விதம் எதிர்கால சூழ்நிலைக்கு சாதகமில்லாமல் போகலாம்.


16) தனிநபர் விமர்சனம், தனிநபர் பெயர் விலாசம் குறிப்பிடுவது, அரசியல் விமர்சனம், அங்கம் வகிக்கும் அமைப்பு சார்ந்த விமர்சனங்களை தவிர்த்து என்ன நோக்கத்திற்காக நேரலையில் வந்தீர்களோ அந்த நோக்கத்தை மட்டும் நிறைவேற்றுங்கள்.


17) நேரலையில் பாடல் நடத்துபவரின் மைக் சத்தம் பாடகர் குழுவினரின் மைக் சத்தத்தை விட சற்று அதிகமாக இருப்பதை முன்னமே உறுதிசெய்து கொள்ளுங்கள். நேரலையை பொறுத்தவரையில் 3 மைக்குகளுக்கு மேல் பயன்படுத்தாதிருப்பது நல்லது. இசைகருவிகளின் ஒலியும் சற்று குறைவாகவே இருப்பது நல்லது.


18) நேரலையின் போது இணையதள சேவை மிக முக்கியமானது. உங்கள் இணைய சேவையின் மூலம் நேரலை சர்வர் இணைக்கப்பட்டு ஔிபரப்பாகிகொண்டிருக்கும் நேரத்தில் வேறு எந்த டிவைஸையும் (செல்போன், கணினி) அதே wifi-ல் இணைக்காதிருங்கள். அது உங்கள் நேரலை சேவையை பாதிக்ககூடும்.


19) நேரலையில் பேசும் போது எத்தனை பேர் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். என்னென்ன கருத்துக்களை பதிவிடுகிறார்கள் என்பதை யோசிக்காதிருங்கள். அது கவனசிதறலுக்கு வழிவகுக்கும். நேரலை சம்பந்தப்பட்ட விபரங்களை நீங்கள் நியமிக்கும் ஒருவர் கவனித்துகொள்ளட்டும்.


20) நேரலையின் போது அல்லது நிகழ்ச்சியின் இறுதியில் பல நல்ல கருத்துக்கள் சாட்சிகள் கிடைக்கும். அவைகளுக்காக தேவனை மகிமைப்படுத்துங்கள். சில நல்ல விமர்சனங்கள் வந்திருக்கும். அதனை திறந்த மனநிலையில் ஏற்றுக்கொண்டு அடுத்தமுறை சரிசெய்துகொள்ள முற்படுங்கள். சிலர் வேண்டுமென்றே தரக்குறைவான அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதி இருப்பார்கள். அவைகளை நீங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வேண்டாம். அவைகளினால் உங்கள் உற்றாகம் குறையவும் வேண்டாம்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

இந்திய சுதந்திர போராட்டாத்தில் கிறிஸ்தவர்கள் பங்களிப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமது அவயங்களின் தன்மை
காது எதற்காக?
பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை
பிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு - கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின்...
என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்
சாதியை பற்றிய கிறிஸ்தவர்களின் மனநிலை தமிழக அளவில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது
பரலோகம் பற்றிய வெளிப்பாடு
By a woman for a women - Christian Quotes
தேவனுக்கு வேதம் கூறும் பல எபிரேய பெயர்களும் அதற்கான தமிழ் அர்த்தங்களும்

Share this page with friends