உங்கள் வாழ்வு சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்

Share this page with friends

An excellent and useful information for my well wishers

ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள். முகநூல், வாட்சப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள். பிடித்தமானபதிவாளர்களை, பயனுள்ளவற்றை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்துவிடுங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்துப் பாருங்கள் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் உங்கள் திரச்சபைக்கு செல்லுங்கள். செல்போனை வீட்டில் வைத்துவிட்டு செல்ல முயற்சியுங்கள்.

நாள் ஒன்றிற்கு இருபது நிமிடம் சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்ய முயலுங்கள், குறிப்பாகப் பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சுப் பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.

நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி.வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள். நம் வீட்டை விடப் பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கும். நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள். ஆக இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.

ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ அல்லது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால் அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள் உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துகளுக்குப் பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.

உங்கள் கருத்துகளை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்லப்பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.

பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை. எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும். உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள்.
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.

வாரத்திற்கு ஒரு முறையாவது தாய் தந்தையரிடம், மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச நேரம் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில் சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.

நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம்.

“ஓலா”எப்படி புக் செய்வது “யூபர்” (Ola, Uber Taxi) டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டுத் தெரிந்து கற்றுக்கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி விடுங்கள்.

உங்களுக்குப் பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தைச் செய்யத் தயங்காதீர்கள். ஆனால் பிறர் மனம் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். நாற்பது வயதிற்குக் கீழ் உள்ள ஆண்கள், வீட்டின் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யப் பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது, வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல், பொருட்களை அடுக்கிவைத்தல் போன்றவற்றை செய்யலாம். முடிந்தவரை இனிப்புகளைத் தவிர்க்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.சீலிட்டு அடைக்கப்பட்ட பாட்டில் ட்ரிங்க்ஸ்/பிராண்டட் உணவுகள் சீக்கிரம் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பிவிடும்.. கவுனி அரிசி, நாட்டுப் பசும்பால், கொல்லித்தேன், மலைவாழை, இளநீர் போல தனித்தன்மையானவற்றைத் தேடிப் பயன்படுத்துங்கள். எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..

நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா? என்று என்னைக் கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும் அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவற்றை முயற்சி செய்தால் உங்கள் வாழ்வு மிக சிறப்புடன் இருக்கும்..


Share this page with friends