ஆவிக்குரிய உணவு மற்றும் உடை

Share this page with friends

ஓர் ஆண்டிற்க்கு ஒரு முறை கர்த்தர் வாக்குத்தத்தத்தை சபைக்கு தருகிறார். சபையில் தனிப்பட்ட வாக்குத்தத்த அட்டை தருவார்கள். சில சபைகள் மாதந்தோறும் வாக்குத்தத்தம் தருகிறார்கள். இதை முறையாக கடைபிடிக்கிறார்கள். 2020ல் சபை கூடுதல், ஜெப கூடுகைகள் தடைபட்டது. ஆனாலும் ஆன்லைனில் தொடர்ந்தது.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரம் தற்போது கர்த்தரால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 2020 ஆண்டு ஆயத்தப்படும் நாட்கள். டிசம்பர் வரை பொது கூடுகைகள் தடை செய்வார்கள். பின்பு தளர்வுகள் 2021ல் வந்தது. விடுதலை பெறுவோமென தீர்க்கதரிசனம் சொல்லுகிறது. இதற்க்காக ஜெபிப்போம். நம் ஜெபத்தினால் குறைந்திருக்கிறது. வைரஸ் எங்கிருந்து வருகிறது எப்படி பரவுகிறதுதென பயப்படாமல் வேலைகளை தொடருங்கள்.

சபை பிரசங்கம் ஒர் ஊட்டப்படுகிற உணவு. நாம் அதை இந்நாட்களில் நாம் சமைத்து நாமே பிணைந்து சாப்பிட வேண்டும். வைரஸை கொல்ல எதிர்ப்பு சக்தியை நம் உடலில் அதிகரிக்க வேண்டும். என்ன உணவு உண்ண வேண்டும்? என்ன உடை அணிய வேண்டும்?

ஆவியில் வளர நாம் முழு சர்வாயுத்தத்தையும் அணிந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
எபேசியர் 6:10

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:11)

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய (முழு) சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:13)

முழு ஆயுத (ஆறு) கவசங்களை அணிந்து சாத்தானை எதிர்க்க வேண்டும். ஜெபம் ஏழாவது கவசம்

இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (ஆகாய் 1:2)

நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டுவருகிறீர்கள். நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை. குடித்தும் பரிபூரணமடையவில்லை. நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையில் போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
(ஆகாய் 1:6)

உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
(ஆகாய் 1:7)

நீங்கள் மலையின்மேல் (ஜெபம்) ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ( வேத வசனங்களை வெட்டு) ஆலயத்தைக் கட்டுங்கள். (நீயே ஆலயம்) அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன். அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஆகாய் 1:8)

ஆசீர்வாதங்கள் பின்னாடி போகாதீர்கள்.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
(மத்தேயு 6:25)

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத்தேயு 6:26)

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. (மத்தேயு 6:28)

என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 6:29)

அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத்தேயு 6:30)

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். (மத்தேயு 6:31)

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:32)


Share this page with friends