போலி மத போதகர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: ஜான் ராஜ்குமார் கோரிக்கை

Share this page with friends

திருச்சி:

மதபோதகர் என்ற பெயரில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜான் ராஜ்குமார் கோரிக்கை கொடுத்துள்ளார் இது குறித்து கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கிய பேரவை சார்பில் தமிழக அரசுக்கு அதன் தலைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியக்காவிளை அருகே நித்திரவிளை என்ற பகுதியில் மதபோதகர் என்ற பெயரில் ஒரு நூதனமான மோசடியில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் அனேக சமூக விரோதிகள், சமூக வன்முறையாளர்கள் இப்படிப்பட்ட விபச்சார செயலை செய்து வருவது கண்டிக்கத்தக்கது. சபை என்ற பெயரில் கிறிஸ்துவுக்கு விரோதமாகவும், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகவும் சமூகவிரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் கண்டிக்கக் கூடியது.

எனவே தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து இப்படிப்பட்ட போலி மத போதகர்களை கைது செய்வது மட்டுமல்ல இந்திய தண்டனைச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

எழுப்புதல்! எழுப்புதல்! எது உண்மையான எழுப்புதல்
கிறிஸ்துமஸ் தினத்தின்போது சர்ச்சில் இரவு வழிபாட்டுக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டும்: போலீஸ் கமிஷனர் மக...
இந்த உலகில் தேவனுடைய பிள்ளை விலகி இருக்க வேண்டிய காரியங்கள்
புற ஜாதியாரிடம் காணிக்கை வாங்காத வித்தியாசாமான போதகர்
ஞாயிறு ஆராதனைகள் குறித்து, சபை மக்களுக்கான அறிவிப்பு
கிறிஸ்துவைப்போல
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்
ஆண்டவரே ஏன் இப்படி? Why Lord?
கனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன?
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக ...

Share this page with friends