பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி

Share this page with friends

பிரபல கிறிஸ்தவ இசை வித்தகர் திடீர் மரணம்; தமிழ் கிறிஸ்தவ உலகம் அஞ்சலி

சென்னை; 01, ஏப்ரல் 2022

தமிழ் கிறிஸ்தவ உலகில் மிகவும் புகழ்பெற்ற இசைக்கலைஞர் திரு. சுரேஷ் ஜோஸ்வா அவர்களின் மரணச்செய்தி கிறிஸ்தவ உலகினை நெகிழச்செய்துள்துள்ளது.

ஏப்ரல் 1 இன்று அதிகாலை கர்த்தருடைய ராஜ்யத்தியற்குள் பிரவேசித்த திரு. சுரேஷ் ஜோஸ்வா அவர்கள் புல்லாங்குழல் வாசிப்பதில் வித்தகர் பட்டம் பெற்றவர். எத்தகைய பாடலையும் சில வினாடிகளில் மனதில் ஏற்றி, அதனை புல்லாங்குழல் வழியே தந்துவிடும் மகத்தான ஆற்றல் பெற்றவர்.

இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பிரபலமான நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்த பெருமை இவரையே சாரும். பழகுவதற்கு மிக எளிமையானவர், ஏற்ற தாழ்வின்றி சக இசைக்கலைஞர்களுடன் தன் வாழ்வின் இறுதி வரை பயணித்தவர்.

தேவன் கொடுத்த விலையேறப்பெற்ற தாலந்தினை தேவனுக்காக மட்டுமே பயன்படுத்துவேன் என அர்பணித்து வாழ்ந்தவர். பல சினிமா பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கும்படி வாய்ப்புகள் தேடி வந்தபோதும், பல ஆயிரங்கள் பணம் தருகிறோம் வாருங்கள் என அழைத்தபோதும் அவைகளை பொருட்டாகவே எண்ணாமல் உதறிவிட்டு தன் உயிர் காற்றினால் உன்னத தேவனை மகிமைப்படுத்தினார்.

இத்தனை காலம் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திய அவரது வாயில் காற்று நின்று விட்டது. கரங்கள் விழுந்துவிட்டது. புல்லாங்குழல் தன் வித்தகரின் கரம் இன்று என்னை தூக்கவில்லையே என துக்கத்தில் அமிழ்ந்து கிடக்கிறது.

மகத்தான இசைக்கலைஞனை அவர் உயிரோடிருக்கும் போது கிறிஸ்தவ உலகம் கொண்டாட மறந்துவிட்டது. ஆனால் நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பரலோகத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் என்பதே நிதரிசனமான உண்மை.

இசைக்கலைஞர் விட்டுசென்ற புல்லாங்குழலுக்கு ஓய்வு கொடுக்காமல் செயல்பட அவரை போல அர்ப்பணமுள்ள இளைஞர்கள் தேவை. பணத்திற்காகவோ, பெயர் புகழுக்காகவோ அல்ல, தேவனுக்காக ஆம் நாசியில் சுவாசத்தை ஊதியவருக்காக நம் காற்றும் பயன்படட்டுமே..

இசை வித்தகர் சுரேஷ் ஜோஸ்வா அவர்கள் இசைத்த சில பாடல்களை வீடியோவில் பாருங்கள்

1) ஒரு தாய் தேற்றுவது போல்

2) தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை

3) உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

4) பாரீர் அருணோதயம் போல்


Share this page with friends