நிச்சயமாக நம்மை பெருகப் பண்ணும் கர்த்தர்

Share this page with friends

நிச்சயமாக நம்மை பெருகப் பண்ணும் கர்த்தர்

எபிரேயர் 6:14   –   நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

1.மகிழ்ச்சியை பெருகப் பண்ணுவார் (தேவசமுகத்தில் இருக்கும் போது)

ஏசாயா 9:3   –   அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர், அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்குமுன்பாக மகிழுகிறார்கள்.

2.கிருபையை பெருக பண்ணுவார் (நம்மை தாழ்த்தும் போது)

எபேசியர் 1:8   –   அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.

3. பெலன் இழந்தவனுக்கு பெலத்தையும் , சத்துவத்தை பெருகப்பண்ணுகிறார்(அவர் பாதத்தில் சரணடைய வேண்டும்.)

ஏசாயா 40:29   –   சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

4. நிதியின் விளைச்சலின் விதையை பெருகப் பண்ணுவார் (இதற்க்கு கடினாமய் உழைத்து விதை விதைக்க வேண்டும்.)

2 கொரிந்தியர் 9:10    –    விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.

5.மனிதரைப் பெருகப்பண்ணுவேன் (இதற்க்கு நாம் எப்போதும் விண்ணப்பம் பண்ண வேண்டும்)

எசேக்கியேல் 36:37     –    கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும், மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.

Message by
Pr.J.A.Devakar . DD
(ODISHA MISSIONARY)
IMFM CHURCH


Share this page with friends