Hope

மாறு வேடம்

Share this page with friends

Hope

ஆகிலும் சார்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை
வஞ்சித்ததைப்போல உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கும் படுமோவென்று பயந்திருக்கிறேன். 2 கொரி : 11 : 3

இந்தக் குறிப்பில் மாறுவேடம் என்றத் தலைப்பில் சாத்தான் பல மாறுப்பட்ட வேடத்தில் வந்து ஜனங்களை பயமுறுத்துகிறான. உண்மையாய்சாத்தான் இவனைப்போன்ற ரூபத்தில் வருவதில்லை. ஆனால் முழு மனுகுலத்தையும் ஏமாற்றுகிற பிசாசு தனது மாறுவேடத்தில் ஏழு விதமாக வேடமிட்டு தன்னை மாற்றிக்
கொள்கிறான். சாத்தானின் மாறுவேடம் எப்படிப்பட்டது என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம். சாத்தானின் ஏழு மாறுவேடத்தைக் வனிக்கலாம்.

  1. முதல் சாத்தானின் மாறுவேடம் சர்ப்பம் ஆதி : 3 : 1. நமது ஆதி தாய் தகப்பனை வஞ்சித்த பிசாசு சர்ப்பத்தைப் போல மாறுவேடத்தில் வந்து தந்திரமாக பேசி ஆதாம் ஏவாளை ஏமாற்றி கீழ்படியாமையை கற்றுக்கொடுத்து சாபத்தை வாங்கிக் கொடுத்தான்.
    2 கொரி : 11 : 3
  2. ஒளியின் தூதனாக மாறுவேடம். 2 கொரி : 11 : 4 ஒளியின் தூதன் என்பது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும். பரிசுத்த ஆவியானவரிடத்தில் வரங்கள் இருப்பதைப் போல பிசாசிடத்தில் சில வல்லமையண்டு அவன் பரிசுத்த ஆவியானவரைப்போலமாறுவேடம் அணிந்து ஒளியின் தூதவனாக மாறுகிறான். வசனத்தின் வெளிச்சத்தில்நாம்நிதானித்துஅந்த மாறுவேடக்காரனைதெரிந்துக் கொள்ள வேண்டும்.
  3. கெர்ச்சிக்கிற சிங்கம் போல மாறுவேடம்
    1 பேது : 5 : 8 சாத்தான் உண்மையான சிங்கம் அல்ல நம் ஆண்டவரே யூதா கோத்திரத்து சிங்கம். வெளி : 5:5 பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம் போல வருவான். அவன் நம்மை விழுங்க
    வருகிறான். ஆனால் இயேசு சிலுவையில் அவனை அழித்துப் போட்டார். கொலோ : 2 : 15.
  4. பொறுக்குகிற பறவைப்போல மாறுவேடம் மத் : 13 : 4. தேவனுடைய சபையில் தேவ மனிதர்கள் தேவ வசனத்தை விதைக்கிறார்கள் மாற்கு : 4 : 14.
    வசனமாகிய விதை மனிதர்கள் செவிவழியாக இதயத்தில் விழுகிறது. மாற் : 4 : 15. அப்போது பிசாசானவன் விதைக்
    கப்பட்ட வசனத்தை மாறுவேடத்தில் பொறுக்கும் பறவையாக வந்து வசனத்தைபொறுக்குகிறான் இயேசுவின் நாமத்தில் பொறுக்கின பிசாசை கட்டிப்போட வேண்டும்.
  5. தேள் போன்ற மாறுவேடம் லூக்கா : 10 : 19 தேள் கடித்தால் உடனே மரணம் வராது. கொஞ்சம் கொஞ்சமாக விஷம் இறங்கும். இவைகள் மனிதனை பாதிப்பை உண்டாக்கும் பில்லி சூனியங்களுக்கு ஒப்பானவைகள். இந்த தேள் , பாம்பு இரண்டையும் காலின் கீழ் மிதித்து அவைகள் மேல் ஜெயம் எடுக்க முடியும்.
    லூக் : 10 : 19
    எண் : 23 : 23
    ஏசா : 54 : 17
  6. ஓநாய் போல மாறுவேடம். யோவா : 10 : 12 சபையாகிய மந்தையில் ஆடுகளை திருடுவதற்கு ஓநாய் வருவதுண்டு. சபை விசுவாசிகளை கெடுப்பதற்கு ஓநாய் போல மாறுவேடத்தில் வந்து சபையை கெடுப்பார்கள். ஆனால் இயேசு அந்த ஓநாய்களை விரட்டி அவர் சபையை காப்பாற்றுவார் 1 சாமு : 17 : 36.
  7. விரியன் பாம்பு போல மாறுவேடம் அப் : 28 : 3 நமது தரிசனம் நிறைவேறுவதை தடுப்பவர்கள் யாரானாலும் அவர்களுக்குள்ளே விரியன் பாம்பாகிய சாத்தான் இருக்கிறான். அப் : 28 : 3 நீங்கள் சாத்தானின் மாறுவேடத்தைக்கண்டு ஏமாறா வேண்டாம்.

சாத்தான் என்ற பிசாசு பலவிதத்தில் மாறுவேடம் அணிந்து சபையை, சபை ஜனங்களை , சபை ஊழியர்களை ஏமாற்றி விடுவான். அவனுடைய மாறுவேடம் சர்ப்பமாக வரும், ஒளியின் தூதராகவும், கெர்ச்சிக்கிற சிங்கமாகவும் , பொறுக்குகிற பறவையாகவும்,தேளாகவும் ஓநாயாகவும் , விரியன் பாம்பாகவும் மாறு வேடத்தில் வருவான். நாம் ஜாக்கிரதையாக இருந்து அவற்றை மேற்கொள்ள வேண்டும் கர்த்தர் நமக்கு துணை இருப்பார்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends