- 20
- 20250101
மதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே! சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு
சுதா ரகுநாதன், எதையும் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
singer Sudha Ragunathan daughter Marriage : கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன் மகள் மாளவிகாவின் மதம் மாறிய திருமணத்திற்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவு குரல்கள் பெருமளவில் ஒலித்து வருகின்றனர்.
சினிமா மற்றும் கர்நாடக இசை என்று இசையுலகத்தில் மிக பிரபலமானவராக இருப்பவர் சுதா ரகுநாதன். இவரது மகள் மாளவிக்காவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான அழைப்பிதழ் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சுதா ரகுநாதனின் மகள் வெளிநாட்டை சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்யப் போகிறார். இதனால் தான் சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரின் மகள் மாளவிகா தனது விருப்படி ஆப்பிரிக்காவை சேர்ந்த மைக்கேல் என்ற கிறிஸ்துவரை மணமுடிக்க உள்ளார். இருவீட்டாரின் சம்மதப்படி இந்த திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாளவிகா திருமணம் மற்றும் மைக்கேல் நிறத்தை விமர்சித்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் சுதா ரகுநாதன் கிறிஸ்தவர் மதத்திற்கு மாறிவிட்டார் என்றும், அவர் இனி சபாக்களிலும், கோவில்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சனை கடந்த 5 நாட்களாக நிலவி வரும் நிலையில், தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியியுள்ளது.
இந்த விவகாரத்தில் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.அதே சமயம், தனது மகள் திருமண விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து விளக்கமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத சுதா ரகுநாதன், எதையும் கண்டுக்கொள்ளாமல் திருமண வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
சுதா ரகுநாதனுக்கு ஆதரவாக ட்விட்டரில் #standwithSudhaRagunathan என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் இதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே பிரதான கருத்தாக முன்வைக்கப்படுகிறது.