• Friday 27 December, 2024 12:35 AM
  • Advertize
  • Aarudhal FM

இயேசு கிறிஸ்து யார்? பரமபிதா யார்? பிதா தேவாதி தேவன் யார்? தேவன் யார்?யார்?

இதை படிப்பவர்களுக்கு இனி இயேசு கிறிஸ்துவைக் குறித்த எந்த சந்தேகமும் அவர்கள் வாழ்க்கையில் வரவே வராது ஆனால் நீங்கள் சற்று புரிந்து,ஆழமாக ஆராய்ந்து,வசனத்தை பகுத்தறிந்து படிக்க வேண்டும் என்பது மிக முக்கியமாகும். இதை புரிந்துக்கொள்ளாதவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு வழிவிலகிப்போக அதிக வாய்ப்புள்ளது. அனேக கிறிஸ்தவர்களுக்கே இன்னும் இந்த காரியங்கள் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.இதனால் தவறான உபதேசம் செய்கிறார்கள்.

இயேசுவிடம் அதிசயம் பெற்று அவருக்கு சாட்சியாக புதிதாக ஊழியத்திற்கு வந்த ஊழியக்காரர்கள் கட்டாயம் இந்தப்பதிவை முழுமையாக படியுங்கள்.சந்தேகம் ஏதும் இருந்தால் உடனே என்னை கூப்பிடுங்கள். நன்றி

பிதா என்றால் தகப்பன்,தந்தை என்று அர்த்தம். பைபிள் நம்முன்னோர்களைக்கூட முற்பிதாக்கள் என்றுதான் அழைக்கிறது.நம் பூர்வீக தமிழ் அகராதிகளும் மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கூறுகிறது. இங்கும் பிதா என்பது தந்தையை குறிக்கிறது.

தேவன் என்றால் கடவுள் என்று அர்த்தம்.

தேவாதி தேவன் என்றாலும் கடவுள் என்றுதான் அர்த்தம். கர்த்தர் என்றாலும் கடவுள் என்றுதான் அர்த்தம். பழைய ஏற்பாட்டில் அனேக இடங்களில் தேவனை  கர்த்தர்,ஆண்டவர் என்று சொல்லப்பட்டுள்ளது,அதே போல் புதிய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்துவை அனேக இடங்களில் நேரடியாகவே கர்த்தர்,ஆண்டவர் என்று சொல்லப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்துவை பைபிள் தேவன் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவை பிதா மற்றும் தேவன் என்று (அதாவது கடவுள் என்று ) தெளிவாக இங்கு குறிப்பிடுகிறார்

(நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.ஏசாயா 9:6

இந்த வசனத்தில் இயேசுவை பிதா என்றும், தேவன் என்றும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.)

மேலும் பரிசுத்த தோமா அவர்கள் இயேசுவை என் தேவனே என்று அழைக்கும்போது இயேசு அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அப்படியே அதை ஏற்றுக்கொண்டார்! இதோ ஆதாரம்

(தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். யோவான் 20:28)

இயேசுவின் சொந்த சீஷரான பரிசுத்த யோவான் இயேசுவை தேவன் என்று (அதாவது கடவுள் என்று ) தெளிவாக கீழே குறிப்பிடுகிறார்

நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 

1 யோவான் 5:20

யோவான் 1:1-14

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது (தேவாதிதேவனிடத்திலிருந்தது) அந்த வார்த்தை தேவனாயிருந்தது.அவர் (இயேசு)ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் (இயேசு மூலமாய்) உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் (இயேசு) மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு (பரமபிதாவுக்கு) ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:1-14

அதே நேரத்தில் இயேசு கிறிஸ்து  பிதாவே என்று சொல்லி வணங்கியவர் பரமபிதாவாகிய தேவாதி தேவனைதானேதவிர வேறுயாரையும் இல்லை. அதாவது எல்லாவற்றிற்கும் முதன்மையான பரம தகப்பனை,பரம தந்தையைதான் பிதாவே என தொழுதுக்கொண்டார்.

➡தேவாதி தேவனும் கடவுள்தான்,தேவன் என்பதும் கடவுள்தான். இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஆனால் பரமபிதாவானர் வேறு ஒருவர்,நமக்கு இந்த பூமிக்கு பிதாவாகிய இயேசு கிறிஸ்து வேறு ஒருவர்! ஆனால் இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள். அதாவது ஒரே நிலையில், ஒரே சிந்தனையில் ,ஒரே செயல் உடையவர்களாக இருக்கிறார்கள்!!  பரமபிதவினுள் இயேசுவும், இயேசுவுக்குள் பரமபிதாவும் இருக்கிறார்.பரமபிதாவின் சொந்த குமாரன்தான் தேவனாகிய இயேசு கிறிஸ்து. 

எனவே பரமபிதா என்பதும் தகப்பன்,தந்தை என்றுதான் பொருள்படும்,

அதேபோல் பிதா என்பதும் தகப்பன்,தந்தை என்றுதான் பொருள்படும். பரமபிதாவானவர் எல்லாவற்றிற்கும் முதன்மையான தந்தை என்பவராவார்.

இயேசுவையும் பைபிள் நித்திய பிதா,வல்லமையுள்ள தேவன் என தெளிவாக கூறுகிறது.எனவே இயேசு கிறிஸ்துவும் நமக்கு தகப்பன்,தந்தை,கடவுள் என்று பொருள்படக்கூடிய பிதா,தேவன் என்பவராவார்.

மாமிசத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய,தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடாதவர்கள் யாவரும் அந்தி கிறிஸ்துவின் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள்.

ஒட்டுமொத்த பைபிளிலும் கீழே உள்ள வசனங்களில் மட்டுமே பரமபிதா என்ற வார்த்தையும்,தேவாதி தேவன் என்ற வார்த்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை. இயேசு கிறிஸ்து பிதா என்று அழைத்தவர் பரமபிதாவை மாத்திரமே. இவரைத்தான் உலகம் ஆதிமுதலாகவே பார்த்ததேயில்லை என்றும்,அவரிடம் யாரும் பேசியதுமில்லை ,அவர் இருக்கும் இடத்திற்கு இதுவரை யாருமே போனதுமில்லை என்று பைபிள் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. இயேசுவே இதை நேரடியாகவும் சொல்லுகிறார். மேலும் இயேசுவே ஆதிமுதலாக உலகத்தில் இருந்தார் என்பதை அவரே நேரடியாக சொல்லுகிறார்,பைபிளில் பல இடங்களிலும் இயேசு ஆதிமுதலாகவே இருந்து உலகத்தில் எல்லாவற்றையும். அவரே படைத்தார் என்றும் உள்ளது. எல்லாவற்றையும் அவருக்கென்றே இயேசுவே படைத்தார் என்றும் உள்ளது.

வார்த்தை: பரமபிதா (ஆதியாகமம் – வெளி)

மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

மத்தேயு 6:26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

மத்தேயு 6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

மத்தேயு 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

மத்தேயு 18:10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 18:35 நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

வார்த்தை: தேவாதி (ஆதியாகமம் – வெளி)

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

யோசுவா 22:22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.

சங்கீதம் 136:2 தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

தானியேல் 11:36 ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.

(*குறிப்பு :பைபிளில் புதிய ஏற்பாட்டில் பரிசுத்த மத்தேயு அதிகாரத்தில் மட்டுமே பரமபிதா என்ற வார்த்தை உள்ளது! )

பரமபிதா,பிதாவகிய இயேசு கிறிஸ்து,பரிசுத்த ஆவியானவர், இவர்கள் மூவரும் தனித்தனி நிலையில் இருந்தாலும் அனைவரும் அவர்களுடைய எண்ணத்தினாலும்,கிரியையினாலும்,செயல்களினாலும் ஒன்றாய் இருக்கிறார்கள் என பைபிள் தெளிவாக  சொல்லுகிறது. இதுதான் திரித்துவ தேவன்,திரித்து கடவுள் என்பதாகும். That is Trinity. 

பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 

1 யோவான் 5:7

➡என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் என்று இயேசு சொன்னார். யோவான் 14:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார் என்று இயேசு சொன்னார். யோவான் 15:26

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன் என்று இயேசு சொன்னார். யோவான் 16:7

வார்த்தையாக அதாவது ஒலியாக இருந்து மாமிசமாக வெளிப்பட்டவர்தான் இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்து என்ற பெயரே மனிதனால் நியமிக்கப்பட்டது அல்ல ,அது பரமபிதாவாகிய தேவாதி தேவனாலே கொடுக்கப்பட்டது.

எனவே நான் இறுதியாக சொல்லிக்கொள்வது என்னவென்றால் “Jehovah Witness” என்ற அமைப்பை சார்ந்தவர்கள் பிதா ஒருவரே,அவரே ஒரே  தேவன் என்றும்,இயேசு தேவனே அல்ல அதாவது கடவுளே அல்ல என்றும், அவர் ஒரு படைக்கப்பட்ட தீர்க்கதரிசி என்றும் சொல்லுகிறார்கள்! அவர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆவியினால் சிக்குண்டவர்கள்!! இவர்கள் கள்ள உபதேசக்காரர்கள்!!! இவர்களை விட்டு விலகவேண்டும்,அதே நேரத்தில் இப்படிப்பட்டவர்களைப்பற்றி எல்லாருக்கும் சொல்லி மற்றவர்களையும் எச்சரிக்க வேண்டும்.

மேலும் “Only Jesus” என்ற அமைப்பினர் எல்லாம் இயேசு மாதிரமே என்று சொல்லி பரமபிதாவை,தேவாதி தேவனை இல்லையென்று  மறுதலிக்கிறார்கள்! அப்படிப்பட்ட அவர்களும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியினால் சிக்குண்டவர்கள். இவர்களும் கள்ள உபதேசக்காரர்கள். இவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த Jehovah witness அமைப்பைச் சேர்ந்தவர்கள் தற்சமயம் வேதாகம ஆராய்ச்சியாளர்கள்,Bible students,வேதாகம சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று தங்கள் நிலைகளையும்,பெயர்களையும் மாற்றிக்கொண்டு மக்களை கள்ள உபதேசங்களால் வஞ்சித்துப்போட்டு வருகிறார்கள். 

மேலும் ஊரிம் தும்மீம் கொண்ட ஏழாம் தூதன் என்றும் சிலர் தங்களை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இவர்களையும் நம்பவே. கூடாது! ஒரு தூதன் மனிதனாக அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. பைபிளிலும் அப்படி ஏதும் சொல்லப்படவே இல்லை. இயேசு ஒருவரே மனித அவதாரம் எடுத்தார் என சொல்லப்பட்டுள்ளது. ஊரிம் தும்மீம் என்பது பழங்காலத்தில் பரிசுத்தாவான்கள் தங்களின் மேல் ஆடையில், இருதயத்திற்கு அருகில் குத்திக்கொள்ளக்கூடிய ஒரு பட்டையாகும் என்று பைபிள் கூறுகிறது அதாவது அது ஒரு batch ஆகும்.

கிறிஸ்தவர்களே நிறையேபேர் இவர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதுதான் மிகக்கொடுமையான, வேதனையான செய்தியாகும். எனவே எல்லாரும் இனி எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்த பதிவை மிகத்தெளிவாக புரியும்படி அனேக பைபிள் ஆதாரத்துடன்  பதிவிட்டுள்ளேன். 

இனி பரமபிதாவைக்குறித்தும்,நமது பிதாவாகிய இயேசுவை குறித்தும் எந்த சந்தேகமும் இனி உங்களுக்கு வரவே கூடாது. இயேசு கிறிஸ்து மிகத்தெளிவாக சொல்லுகிறார் இதுவரை பூமியில் யாரும் பரமபிதாவுடன் பேசியதும் இல்லை,அவரை பார்த்ததும் இல்லை என்று! அவர் இடத்திற்கு யாரும் போனதும் இல்லையென்றும் சொல்லுகிறார்!! என்னையன்றி ஒருவரும் பரமபிதாவிடம் நேரடியாக போகவே முடியாது என்றும் உறுதியாக, தெளிவாக சொல்லுகிறார். பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் வரும் என்று இயேசு சொன்னது அவர் தன்னைக்குறித்தே சொன்னார் ஏனெனில் இன்று உலகில் இயேசுவைத்தான் எல்லா இடங்களிலும் தொழுதுக்கொள்கிறார்கள்.

மேலும் இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் சொன்னால் புரியாது என்று சொல்லாமல்போன பரம ரகசியம் இதுவே. இதை அவரே பைபிளில்  தெளிவாக கூறுகிறார்.

(இயேசு: பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? என்றார். யோவ 3:12)

எனவே பரமபிதாவானவர் அண்ட சராசரங்கள் யாவையும் உண்டு பண்ணியவராக இருக்கவேண்டும். ஆனாலும் இயேசு கிறிஸ்துவும் ஆதியும் அந்தமும்,ஆல்பாவும் ஒமேகாவுமாகவும் இருந்து சதாகாலத்திற்கும் ஜீவித்து அரசாளுகிறவர் என பைபிள் தெளிவாக  சொல்லுகிறது. மேலும் ஆபிரகாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பூமியில் இயேசு இருக்கிறார்! இதோ ஆதாரம்

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 8:58

இயேசுவே முதன்முதலில் பூமியில் மனிதன் முதலாக அனைத்து உயிரினங்களையும் படைத்தவர் என பைபிள் தெளிவாக கூறுகிறது. இதோ ஆதாரம்

➡1 கொரிந் 8:6

பிதாவாகிய(பரமபிதாவாகிய) ஒரே தேவன்(தேவாதிதேவன்) நமக்குண்டு, அவராலே சகலமும்(அண்ட சராசரம் எல்லாம்) உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் (இயேசு கிறிஸ்து மூலமாய்ச்) சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் (இயேசு )மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 1 கொரிந் 8:6

கொலோ 1:14-16

அவருக்குள்(இயேசுவுக்குள்), அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் (இயேசு)அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் (இயேசுவுக்குள்) சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:14-16

ரோமர் 11:33-36,

ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 

கர்த்தருடைய (இயேசுவினுடைய) சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 

தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? 

சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளது. பைபிள் இயேசுவை பல இடங்களில் கர்த்தர் என்று சொல்லுகிறது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தர் என்றால் கடவுள் என்று பொருள். மேலும் இயேசுவை தேவன் என்றும பைபிள் கூறுகிறது. அவரே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்போகிறவர் என்றும் பைபிள் சொல்லுகிறது. ரோமர் 11:33-36

லூக்கா 10:22

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.

லூக்கா 10:22, 

இயேசுதாமே அவரை உங்களுக்கு வெளிக்காட்டாமல் யாரும் அவரை யாரென்று புரிந்துக்கொள்ளவே  முடியாது.சாத்தானுக்கே இயேசு கிறிஸ்து பரமபிதாவின் குமாரன் என்று மட்டும்தான் தெரியும் ஆனால் அவர் தேவன்(கடவுள்) என்பது தெரியாது என நினைக்கிறேன் அதனால்தான் அவன் அது தெரியாமல் இயேசுவை வனாந்தரத்தில் சோதித்தான்.

இப்போது உங்களுக்கு எல்லாம் புரிகிறதா? எல்லாவற்றையும் பைபிள் வசனங்களை ஆதாரமாக வைத்தே உங்களுக்கு விளக்கியுள்ளேன். 

எனவே இயேசுவே பூமிக்கு நித்தியபிதா!

நித்திய பிதா என்றால்

பூமியிலுள்ள அனைத்தையும் படைத்த இயேசு கிறிஸ்துவே பூமிக்கு ராஜாவாகவும்,பூமிக்கு பிதாவாகவும்,தேவனாகவும் சதாகாலத்திற்கும் இருப்பார் என்று அர்த்தம். பரமபிதாவாகிய தேவாதி தேவனானவர் சதாகாலத்திற்கும் அண்ட சராசரத்திற்கும் பரமபிதாவாகவும், தேவாதி தேவனாகவும் இருப்பார். இயேசு கிறிஸ்து இவரின் சொந்த நேசகுமாரன்.

இப்போது உங்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.இதற்கு பிறகும் இன்னும் இது புரியாதவர்கள் கள்ள உபதேசக்காரர்களாக இருப்பார்கள்,கள்ள போதகர்களாகவும்,கள்ள ஊழியக்காரர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆவி உடையவர்களாகவும் இருப்பார்கள்.

நமக்கு இந்த பூமியில் இயேசு கிறிஸ்து ராஜாவாகவும்,பிதாவாகவும்,தேவனாகவும் இருக்கும் பட்சத்தில் பரமபிதாவை நேரடியாக தொழுதுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை, ஏனெனில் என்னை அறியாதவன் பரமபிதாவை அறியான் என இயேசு தெளிவாக கூறுகிறார். அதேபோல் பரமபிதாவும் இயேசு பூமியில் இருக்கும் பட்சத்தில் உங்களிடம் நேரடியாக வந்து பேசவேண்டிய அவசியமும் இல்லவே இல்லை. காட்சிக்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லவே இல்லை. இதுவரை பூமியில் இப்படி நடக்கவே இல்லை. தயவுசெய்து இதை இனிமேலாவது நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள். வேத வசனங்களை நன்றாக படித்து பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றே பைபிள் நமக்கு உணர்த்துகிறது.

முடிவுரை: கட்டாயம் இதை படியுங்கம்,ரகசியம் உள்ளது!

இயேசு கிறிஸ்து என்பவர் பரமபிதாவாகிய தேவாதி தேவனின் சொந்த குமாரனாகிய, இந்த பூமிக்கு பிதாவும்,தேவனுமாகவும் இருக்கிறவர்.

இதைத்தான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் மிகுந்த ஆதாரத்துடன் பைபிளிலிருந்தே வசனத்தின் அடிப்படையில் தெளிவாக விலக்கிவிட்டேன். இதைப்புரிந்துக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் பரமபிதாவையும், பிதாவாகிய இயேசுவையும் தனித்தனியாக பிரித்து தவறாகவே புரிந்துக்கொண்டு வாழ்வார்கள்!

⭕மேலும் ஒரு மிக முக்கியமான விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன். தயவுசெய்து யாரும் இயேசுவின் தாயாகிய மேரி மாதா என்ற மரியாளை கடவுளாக வணங்காதீர்கள். அவர் கடவுள் அல்லவே அல்ல. மேரி மாதா சிலையினுள் இருந்து பேசுவதை அசுத்த ஆவி,அந்த சிலையிலிருந்து வடிகிற இரத்தம் பிசாசினால் நடப்பிக்கிற பொய்யான அதிசயம் மற்றும் அற்புதம். பைபிளில் எந்த இடத்திலும் மரியாளை கடவுளாக வணங்கவேண்டுமென்று சொல்லவே இல்லை. பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை மரியாளை யாரும் வணங்கவில்லை! அதற்குப்பின் வந்த போப்பாண்டவர் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு மரியாளை கடவுள் என்று வணங்கச்செய்துவிட்டார். இதுதான் உண்மை. இதைத்தான் மார்ட்டின் லூதரும் கண்டுபிடித்தார். உலகம் கடைசிவரைக்கும் இப்படியாகத்தான் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு சத்தியத்தை அறியாமல் இருக்கும். கொஞ்ச மக்களால் மட்டுமே உண்மையை,சத்தியத்தை உணர்ந்துக்கொள்ள முடியும்.