- 119
- 20250223
பல்லி கற்றுத் தரும் பாடம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார்.வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 5 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 5 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார்.சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் அடித்திருந்த மரத்தின் இடையே சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 5 ஆண்டுகளாக இந்த பல்லி சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது. இது ஒரு அதிசயமான செயல் மட்டும் அல்ல எவ்வாறு மற்ற இனங்கள் தங்களின் இனத்தை அன்புடன் நடத்தி காப்பாற்றி வருகின்றன என்ற ஒருஉயர்த்த படிப்பினை.ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 5 ஆண்டுகள் உணவளித்துவந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா.உனக்கு உயிர் அளித்து உன்னை 10 மாதம் சுமந்து உனக்கு தனது தொப்பிள் கொடிமூலம்உணவளித்து நீ பிறந்தவுடன் தன் உதிரத்தை பாலாக்கி உனக்கு அளித்து நீ வளர்ந்தவுடன் தான் பசியோடிருந்தாலும் உன் பசியை போக்கி உன் நம்மைக்காகவே பாடுபட்ட உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தந்தை கால் கை தளர்ந்து தன்னிலை இல்லாத பொழுது அவருக்கு ஆறுதலாக இருந்து உணவளிக்க முடியாதா உனது தாரம் (கணவன்) (இருபாலருக்கும் பொருந்தும்) ஊனமாயின் அவளுக்கு/அவருக்கு உன்னால் உணவளிக்க முடியாதா.மனிதராக பிறந்த நாம் மற்ற ஜீவராசிகளை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். சிந்திப்போம் செயலில் இறங்குவோம் நம் முதியோர்களை அன்புடன் நடத்தி காப்போம்..மூதாதையர்கள் நன்றாக கவனிக்கப்பட்டால் அவர்களது ஆசீர்வாதம் அவர்கள்மறைந்த பின்னும் பல தலைமுறைகளுக்கு நன்மைகளை செய்யும்.அவர்கள் கவனிக்கப்படாமல் துன்பத்தோடு இருந்து மனம் வருந்தி மறைந்தால் அவர்களது தாபம் நம் தலைமுறையில் பல விதமான துன்பங்களைக் கொடுக்கும் . நாம் நம் தலைமுறைக்கு நன்மையையே விரும்புவதால் நல்ல முடிவை எடுத்து முதியோரைக் காப்போம்.
TCN Media