பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி ஜனவரி 13,

திருச்சி,

சத்தீஸ்கார் மாநிலம் நாராயண்பூரில் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவர்கள் சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மறைமாவட்ட முதன்மைக்குரு அந்துவான், பொதுநிலையினர் பேரவை தலைவர் வேளாங்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மறை மாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குனர் அல்போன்ஸ், துறவியர் பேரவை தலைவர் ஜான்பிரிட்டோ, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். அப்போது, நாராயண்பூரில் தேவாலயங்கள் இடிக்கப்பட்டது, புனித சொரூபங்கள் உடைக்கப்பட்டது உள்ளிட்டவற்றை கண்டித்தும், அங்கு தாக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மறைமாவட்ட பொருளாளர் பெர்ஜித்ராஜன் நன்றி கூறினார்.