• Wednesday 22 January, 2025 04:14 AM
  • Advertize
  • Aarudhal FM

கிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள் – தொடர்ந்து எழும் சர்ச்சைகள்!

சுதா ரகுநாதனை இனிமேல் கச்சேரிகளில் பாட அனுமதிக்க கூடாது.

கிறிஸ்துவரை மணமுடிக்கும் சுதா ரகுநாதன் மகள்.. தொடர்ந்து எழும் சர்ச்சைகள்!
singer Sudha Ragunathan

singer Sudha Ragunathan : கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதனின் மகள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ய இருப்பதற்கு கர்நாடக சங்கீத அமைப்பை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில பிராமணிய உட்குழுக்களிலும் சுதா ரகுநாதனுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வெடித்துள்ளனர்.

கர்நாட இசை உலகில் அனைவராலும் எளிதில் அறியக்கூடியவர் பிரபல கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன். இவரின் மகளான மாளவிகா தனது விருப்பப்படி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். மணமகன் மைக்கேல் ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாகக் கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதன்படி, வரும் ஜூலை 11ஆம் தேதி இரவு 7 மணி முதல் சென்னை மயிலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதா ரகுநாதன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. மேலும், அவரின் மகள் மாளவிகா திருமணத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர்கள் சிலர், இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் சுதா ரகுநாதனை போனில் தொடர்பு கொண்டு இதுப்பற்றி பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சுதா ரகுநாதனை இனிமேல் கச்சேரிகளில் பாட அனுமதிக்க கூடாது என்றும் சிலர் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு எதிர்மறையாக அவரின் ரசிகர்கள் தரப்பில் இருந்து  சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றனர்.