• Friday 10 January, 2025 04:53 AM
  • Advertize
  • Aarudhal FM

திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 95 தாண்டியது ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன

திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை அன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 130 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.5 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன

திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளதுசீன அரசு ஊடகங்கள் ஒளிபரப்பிய வீடியோ பதிவுகளில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததையும், இடிபாடுகளுக்குள் சென்று மீட்புப் பணியாளர்கள் அங்கு சிக்கி உள்ள மக்களுக்கு தடிமனான போர்வைகளை வழங்குவதைக் காட்டுகின்றன.