• Friday 8 November, 2024 02:07 PM
  • Advertize
  • Aarudhal FM

தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டத்தின் கீழ் கொண்டு வர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இந்து கோயில்கள், வஃக்புவாரிய சொத்துக்கள் பத்திரப்பதிவு பதிவு செய்யப்படுவதை தடுப்பது போல், கிறிஸ்தவ தேவலாய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம்-1908 பிரிவு 22 ஏ-க்குள் கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ஷாலின் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் விஜயா என்பவரிடமிருந்து 2023-ல் சொத்து வாங்கினேன். அந்த சொத்தை பதிவு செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக சார் பதிவாளர் 29.3.2023-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடனடியாக பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரி இருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பத்தூர் சார் பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், “சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில் தமிழ் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சர்ச் (டிஇஎல்சி) சொத்துக்களை உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இவற்றின் அடிப்படையில் மனுதாரரின் சொத்து பதிவு விண்ணப்பம் நிராகரக்கப்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்து கோயில் சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வஃக்போர்டு சொத்துக்கள் வஃக்புவாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகிறது. கிறிஸ்துவ ஆலய சொத்துக்களை பொறுத்தவரை இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். இதனால் தேவாலய சொத்துக்களை பதிவுத்துறை சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது.

டிஇஎல்சி சொத்து வழக்கில் பிரதான மனு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை. எனவே, தற்போது டிஇஎல்சி சொத்துக்களை பொறுத்தவரை எந்த தடையும் இல்லை. எனவே, திருப்பத்தூர் சார் பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்தார்.

கிறிஸ்துவ தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்ற வழக்கில், மத்திய அரசு 3 வாரங்களுக்குள் அதன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலித் சமூகத்தினர் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதங்களுக்கு மாறுகையில், அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கான  இட ஒதுக்கிடு சலுகை வழங்கப்பட வேண்டும்  என்று பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ். கே காயுல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் அபயா எஸ் ஒகா, விக்ரம் நாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர்  ஜெனரல் திஸ்சூர் மேத்தா கூறுகையில் “ இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், சமூக படிநிலையில் சிறிது மேன்மை அடைவதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்வது தொடர்பான கேள்வி எழுகிறது’ என்று கூறினார்.

பொது நல வழக்கின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் புஷன் கூறுகையில்” 1950 ஆண்டு வெளியான சட்டம்படி பட்டியலின சமூகத்தினர் என்பவர்கள் இந்து, புத்தம், சீக்கியம் மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுவது மதத்தின் பெயரில் தீண்டாமையை கடைபிடிப்பதாகும்.

மேலும் அவர் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை குறிப்பிட்டார் இதில் “ மாதம் மாறிய தலித் சமூகத்தினரும், இந்து தலித் சமூகத்தினரைப் போலவே ஒடுக்குமுறையை சந்திப்பதாக கூறினார்.

இந்நிலையில் நீதிபதி காயுல் கூறுகையில் “ இட ஒதுக்கீடுட்டின் கீழ் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதா? ஏற்கனவே இது ஓபிசி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பட்டியலின சமூகத்தினருக்கு வழகுங்வதில் சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.