• Wednesday 16 April, 2025 06:21 AM
  • Advertize
  • Aarudhal FM

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகையை சேர்ந்த 15 வயது சிறுமி சற்று மனநலம் குன்றியவர். இவரது வளர்ப்புத் தந்தை கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டு பாட்டி ஒருவரிடம், சிறுமி சொல்லியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பாட்டி, சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வளர்ப்புத் தந்தையை பிடித்து, மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.—-

15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் இவரது மனைவி இன்பத்தாய் இருவருக்கும் திருமணம் முடிந்து ஆண், ஒன்றும் பெண் ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், தனது மகளான 15 வயது சிறுமிக்கு மது போதையில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தந்தை சார்லஸ் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார்..

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கோகிலா பாலியல் தொல்லை அளித்த சார்லஸ் என்பவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தந்தை தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..