- 32
- 20250109
கிறிஸ்துவ மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு; மீண்டும் தேசிய ஆணையம் அமைக்கும் மத்திய அரசு
தலித் சமூகத்திலிருந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்களின் தகுதிநிலையை கண்டறிய மத்திய அரசின் சார்பில் சர்வதேச ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
தலித் சமூகத்திலிருந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்களின் தகுதிநிலையை கண்டறிய மத்திய அரசின் சார்பில் சர்வதேச ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
சர்வதேச ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து விவாதித்து வருவதாகவும், விரைவில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆணையத்தை அமைக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சி துறை அனுமதியளித்துள்ளது. மேலும் இதுதொடர்பான அலோசனைகளை உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், சமூநீதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில், தலித் சமூகத்திலிருந்து இஸ்லாம் மற்றும் கிரிஸ்துவ மதங்களுக்கு மாறியவர்கள், எஸ்சி- இட ஒதுக்கீடு கேட்டு மனு அளித்துள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் , ஆர்டிகல் 350 படி இந்து, சீக்கியம், புத்த மதத்தில் உள்ள எஸ்சி சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ் சி சமூகத்தினர் என்று கருதப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறது. முதலில் இந்துக்கள் மட்டுமே என்றிருந்த சட்டம் 1956-ல் சீக்கியர்களையும் 1990-ல் புத்த மதத்தை சேர்ந்தவர்களை சேர்த்துகொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆக்ஸ்டு 30-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், இஸ்லாம் மற்றும் கிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் எஸ்சி இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற மனுக்களின் விசாரணையின் போது, இதுதொடர்பான அரசின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள 3 வாரங்கள்வரை கால அவகாசம் தந்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அக்டோபர் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்படும் தேசிய ஆணையத்தில் 3 முதல் 4 பேர் இடம் பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் கிட்டதட்ட ஒரு வருடம் காலம் வழங்கப்பட்டு, ஆணையம் பரிந்துரைக்கும் தரவுகளின் அடிப்படையில் வழக்கு.
மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தொடர்பாக இதற்கு முன்னால் இருந்த அரசிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
மன்கோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அக்டோபர் 2004-ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆணையம் 2007ம் ஆண்டு மே, மாதம் அதன் அறிக்கையை அளித்தது. இதில் எஸ்சி சமூகத்தின் சமூகநிலைக்கும், அவர்கள் தழுவிய மதத்திற்கு எந்த தொடர்புமும் இல்லை. எப்படி எஸ்டி பிரிவினருக்கு மதத்திற்கு அப்பாற்பட்டு இட ஒத்துக்கீடு வழங்கப்படுகிறதோ அதுபோலவே எஸ்சி சமூகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. கலத்திற்கு சென்று முறையாக ஆய்வு செய்யவில்லை என்று அப்போதைய அரசு இந்த பரிந்துரைகளை ஏற்க மறுத்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது அமைக்கப்பட உள்ள ஆணையம் எப்படி செயல்பட உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.