• Saturday 11 January, 2025 03:53 PM
  • Advertize
  • Aarudhal FM

திருப்பதி கூட்ட நெரிசல் 6 பேர் பலி.. கடிந்த முதல்வர் சந்திரபாபு.. மன்னிப்பு கேட்ட தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் அங்கே பக்தர்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற பக்தர்கள் குவிந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியாகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட மேலும் பலர் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டோக்கன் பெறுவதற்கு கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து உள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கே நிலைமை மோசமாகி.. கீழே விழுந்தவர்கள் மீது கால் வைத்தவர்கள் மேலும் பலர் தடுக்கி கீழே விழுந்தனர்.

கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதால் பலருக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதேபோல் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு கழுத்து பகுதியில் மக்கள் மிதித்ததில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.இதனால் சம்பவ இடத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த கொடூர விபத்தில் 34 பேர் காயம் அடைந்த நிலையில் 10 பேர் மோசமான உடல்நிலையில் உள்ளனர். . சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவே விபத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

திருப்பதி கோவில் வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்களை சந்திக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருமலைக்கு வருகை தருகிறார். இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.முறையாக ஏற்பாடு செய்யாத காரணத்திற்காக திருப்பதி தேவஸ்தானம் இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளதாகவும் .. தொலைபேசியில் அதிகாரிகளை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது

திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட வாசலை தரிசிப்பதற்காக டோக்கன் வாங்க விஷ்ணு நிவாசம் அருகே மக்கள் வரிசையில் நிற்கையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலியானது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டோக்கன் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், உயர் அதிகாரிகளை சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை செய்து வருமாறு உத்தரவிட்டுள்ளேன். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் உத்தரவிட்டுள்ளேன். நேரடியாக TTD அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன், என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.